ஜூன் முதல் தேதி நம்பிக்கையோடு கூடுகிறது இந்தியா கூட்டணி.
முதல்ல மம்தா பானர்ஜி நம்புற மாதிரி நடக்க பாருங்க !!
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு.
அவங்களுக்கு ராமர் உங்களுக்கு முருகரா !!
முல்லைப் பெரியாறு புதிய அணை இடதுசாரி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு.
இத போய் கேரளால போய் சொல்லுவாங்களா ?
இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது செல்வப் பெருந்தகை.
ஆமா காங்கிரஸ் வெற்றியை மட்டும் தான் தடுப்பாங்க !!
கலைஞரின் கனவு இல்லம் அரசு பணியாளர் வாடகை வீட்டில் வசிப்போருக்கு இல்லை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
அதாவது யாருக்குமே இல்லைன்னு சொல்லாம சொல்றாங்க !!
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் கே.பாலகிருஷ்ணன்
இதே மாதிரி கேரளாவில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம் .
பாஜக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது கார்கே
அவங்கள விடுங்க நீங்க எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள் அத சொல்லுங்க !!
திராவிடம் திராவிடம் என்று கூறிக்கொண்டு கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் பறிபோகும் தமிழக உரிமை பெற முடியாமல் மாறி மாறி அடிபணிவது வெட்கக்கேடானது. நாம் தமிழர் கட்சி சீமான்.
இதை திராவிட மாடலுனு சொல்லலாம் கூட்டணி தர்மம்னு இன்னொரு பேரும் இருக்கு !!
பிரதமர் மோடி ஆரம்பத்தில் 400 இடங்களில் வெல்வோம் என்று சொன்னார் பிறகு நிறுத்திக்கொண்டார் இப்போது மீண்டும் சொல்கிறார் அது எப்படி ? பிரியங்கா காந்தி.
எதிர்க்கட்சியின் ஒற்றுமையை பார்த்தவுடன் அவருக்கு மீண்டும் நம்பிக்கை வந்திருக்கும் அதுதான் மேடம் !!
மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும் கெஜ்ரிவால்.
திகாருக்கும் போக வேணாம் அதையும் சொல்லுங்க !!
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது.
விலைவாசியில் ரொம்ப உயர்ந்து போச்சு லஞ்சமும் உயர்ந்து போச்சு !!
மோடியின் தியானத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது செல்வப் பெருந்தகை அறிக்கை.
அண்ணா அவர் தியானம் தான் பண்ண போறாரு பிரச்சாரம் பண்ண மாட்டாரு பயப்படாதீங்க !!
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டு சென்றார்.
கவலை இல்லாத மனுஷன் !!
ஜூன் 4க்கு பிறகு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாகும் பிரதமர் மோடி எச்சரிக்கை.
அதாவது அமலாக்க துறையை அலர்ட்டா இருக்க சொல்றார் !!
சென்னையில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கைது.
மதசார்பற்ற அரசு திராவிட மாடல் அமைதி பூங்கா ....!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறாக எதுவும் கூறவில்லை -டிடிவி தினகரன்.
உண்மையை சொல்லிட்டார் அண்ணன் !!
காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதி எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தான் இருக்கும் -வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.
பத்து கூட இரட்டை இலக்கம் தான் !!
Leave a comment
Upload