எண்ணங்களும், வண்ணங்களும் பிரிக்க முடியாதது. தேர்ந்த கலைஞனின் தூரிகை வெளிப்படும் எண்ணங்களை, கோடி வார்த்தைகள் இணைந்தாலும் விவரிக்க முடியாது. அப்படி ஒரு ஓவிய, சிற்ப கண்காட்சி பெங்களூருவில் நடந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குமார கிருபா சாலையில் உள்ள கர்நாடக சித்ரகலா பரிஷத் கலை வளாகத்தில், ஓவியம், சிற்பம் துறையில் ஐந்து கலைஞர்கள் இணைந்து 7 நாட்கள் கண்காட்சி நடத்தினர்.
இதில், சிற்ப கலைஞரும், கலை இயக்குனருமான ஆனந்தமோகன்------. நினைவுகளை கொண்டாடும் ‛90 கிட்ஸ்’ வகையறா சிற்பி. இவரின் சிற்பங்கள், பால்ய நினைவுகளை மலர செய்யும். இவரின் சிற்பம் இருக்கும் இல்லமோ, அலுவலகமோ... 1990 காலத்தை நெஞ்சுக்குள் பூக்க செய்யும்.1990களில் பிறந்த நாம் மெளனமாக இருந்தால், இவரின் சிற்பங்கள் நம்மிடம் பேசும்.
பரதகலைஞர் தேவி பிரியா, சிறந்த ஓவியரும் கூட. அதனால் பரதத்தையும், அதன் நுணுக்கங்களையும் தன் ஓவியங்களில் வெளிப்படுத்துகிறார்.
தேவி பிரியாவின் உடல் அள்ளித்தெளிக்கும் நளினங்கள் பரதமாகவும்; விரல் வழி வழியும் தூரிகை, ஓவியமாகவும் உயிர்கொள்கிறது.
பெங்களூருவைச் சேர்ந்த இளம் சிற்பி சரத் மாது. வசீகரிக்கும் சிற்பங்கள் வடிப்பதில் கைதேர்ந்தவர். அதிலும் உபயோகம் அற்ற பொருட்கள் என உதாசீனப்படுத்தும் பொருட்களில் இருந்து, சிற்பம் செய்து, அதில் கருத்து எனும் உயிரையும் கொடுப்பதில் வித்தகர். சிற்ப கலைகளை கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
சென்னையைச் பிரியா இளையராஜா, உறவுகளின் நுணுக்கங்களை நவீன ஓவியமாக மாற்றி, நம்மை கவர்ந்திழுக்கிறார். எண்ணங்களும், வண்ணங்களும் இணைந்து உருவாக்கும் மாய வித்தைக்கு சொந்தகாரி எனலாம்.
விகடன் பத்திரிகை துறையில் இருந்து புறப்பட்ட ஓவியர் சிவபாலன், தமிழகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஓவியங்களால் கொண்டாடப்படுகிறார். இவரின் படைப்புகள், ஏராளமான விருதுகளை பெற்றுக்கொடுத்துள்ளது. 2023 ம் ஆண்டு தமிழக அரசின் ‛கலை வளர் மணி விருது’ பெற்றுள்ளார்.
2024 மே 27 ம் தேதி முதல் ஜூன் 2 வரை காலை 10:30 முதல் மாலை 7:00 மணி வரை இக்கண்காட்சி நடக்கிறது.
இந்த கலைஞர்களிடம் ஓர் ஓற்றுமை கும்பகோணம் கலை கல்லூரி தான். அங்கிருந்து கலை சிறகை விரிக்க துவங்கியோர், இப்போது பெங்களூரில் குடை விரித்துள்ளனர்.
Leave a comment
Upload