பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா வீற்றிருக்கும் சபையின் அழகும் அருட்கோலமும் மணிதாசர் வாயிலாக……
மணிதாசரும் பகவான் வீற்றிருக்கும் சபையின் அழகைப்பற்றியும் அவரது அருட்கோலம் பற்றியும் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.
“முப்பத்து முக்கோடி தேவர்களும்
நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும்
நாவலோர்கண் நயகுணமும்
பச்சிக்குதிரை மேல் ஏறி வரும்
வயது பதினாறு பிள்ளை போல்
நெற்றியில் கஸ்தூரி நாமமும்
களபகஸ்தூரியும், கையினில்
வெள்ளிப் பிரம்பும் விபூதித்தட்டும்
நிறைந்த செவ்வழகும்
கனக வளைவாள் வீச்சடியழகும்
சிறுஞாண் ஓசையும் சேர்ந்த
புனுகும் சிக்கிமுகப்பார்வையும்
சேர்ந்த கோவிலழகும் சந்தனக்
காவினில் சீறிவரும்
கொலுவினில் சிங்கார
மணிகண்டனே, அடியவர்கள்
தொழும் ஹரிஹரனுக்கான
கண்மணியே…..”
“புண்டவீக வாழ்வையும் சந்தனச்சோலையும்
பூவினில் உன்காவில் அழகும்
போச்சொல்ல மெய்யருட ஆலயம் தன்னிலுள்ள
புதுமைகளைத்தான் பாடவும்
தண்டயொரு வெண்டயம் சுக்குமந்தாடி
கலீர் கலீர் எனவே காழ்ச்சயாய்
அவரவர்கள் நேர்ச்சையாய் கொண்டுவரும்
கனகமணி நூறாயிரம் மண்டபம்
தன்னிலுள்ள சித்ர விஸ்தாரமும்
மங்கையர்கள் சங்கீதமும்
உந்தனுட மஹிமையும் எந்தனுட எளிமையும்
செப்புதற்கு எளிதாகுமோ பாரிலுள்ள
ப்ரஜைகள் உந்தன்பாத கமலம் பணியவே
நீர் பாங்குடன் பாலிக்கவே, காந்தமலை
வாஸருட கனகமணிக்காவு தன்னில்
கன வாத்தியம் முழங்கிவரவே
கரடிகரிம் புலிகளுடன் கரியனும் சிங்கமும்
கலந்து விளையாடி வரவே, வீருடனே
வருகிற வெறிக்கல் யக்ஷி அவளுடைய
விக்ரமங்கள் காட்டி வரவே, காடிக்கல்
யக்ஷியும் கனகன சப்தம் கொண்டு
கட கடன ஓடிவரவே
கல்யாணரூபனே கைலாஸர் குமாரனே
காண்பதோர் உத்தண்டனே
அய்யனே மெய்யனே தென்குளத்தூரைய்யனே
அனைவர்க்கும் ஆதாரனே.”
ஓம் நமோ பகவதே ருத்ர குமாராய
ஆர்யாய, ஹரிஹரபுத்ராய, மஹாசாஸ்த்ரே
ஹாடகாசலகோடி ஸமதுரசார
மஹா ஹ்ருதயாய ஹேம ஜாம்பூனத
நவரத்ன ஸிம்ஹாசனா திஷ்டிதாய
வைடூர்ய மணிமண்டப க்ரீடா க்ருஹாய
லாக்ஷா குங்கும ஜபாவித்யுத் துல்யப்ரபாய
ப்ரசன்ன வதனாய உன்மத்த
சூடாமிளித லோல மால்யாவ்ருத
வக்ஷஸ்தம்ப மணிபாதுக மண்டபாய
ப்ரஸ்புரன் மணி மண்டிதோய கர்ணாய
பூர்ணாலங்கார பந்துரதந்தி நிரிக்ஷிதாய
கதாசித்கோடி வாத்யாதி நிரந்தராய
ஜயசப்தமுக நாரதாதி தேவரிஷி
சக்ரப்ரமுக லோகபால குலோத்தமாய
திவ்யாஸ்த்ர பரிசேவிதாய
கோரோசனா கருகற்பூர ஸ்ரீகந்தப்ரலேபிதாயத
விஸ்வாவஸ்பேப்ர தான கந்தர்வ ஸேவிதாய
ஸத்ய ஸந்தாய ஸ்ரீமஹாசாஸ்த்ரே
நமோ நம: நமோ நம: நமோ நம:
ஸ்ரீபூதநாதனின் ரூபலாவண்யம் பற்றி ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுவதாவது:
நீரோட்டம் உள்ள கற்களின் ஒளியெல்லாம் இணைத்து செய்தது போன்ற கிரீடமும், காரிருளையும் புறந்தள்ளும் அழகுடைய கருத்த சுருண்ட கேசமும், பஞ்சமி தினத்து சந்திரனின் அழகையும் வெல்லும் நெற்றியும், விபூதி பட்டையும், அதன் நடுவில் நெற்றிக்கண்ணும், புருவ மத்தியில் பிறைச்சந்திர திலகமும், வில் போன்ற புருவங்களும், காது வரை நீண்டு கருணை பொழியும் கண்களும் பெற்றிருந்தார்.
காதில் மகர குண்டலங்கள் அலங்கரிக்க கண்ணாடி போன்ற கன்னங்கள், ஒளியை வாரி இறைக்கும் பிம்பமாக விளங்கினார். முத்துக்களின் வரிசை போன்ற பற்களும், சங்கு போன்ற கழுத்தும், மந்தஹாசம் ததும்பும் அருள் பொழியும் முகத்தையும் பெற்றிருந்தார். விரிந்த மார்பில் ரத்தினங்கள், முத்து, துளசி, ருத்திராட்சம், அத்தி, வில்வம் கொண்ட மாலைகள் சூடி, இடது தோளில் அழகிய பூணூல் அலங்கரிக்க, முழங்கால் வரை நீண்ட எட்டு கைகளும், அவற்றில், எட்டு துர்குணங்களை அழிக்கும் சங்கு சக்ரம், சூலம், சுரிகை, வில், அம்பு, வாள், கேடயம், ஆகிய எட்டு ஆயுதங்களைக் கொண்டுள்ளார்.
ஆலிலை போன்ற வயிறும், நாபியிலிருந்து ரோம வரியும் கொண்டிருந்தார். நீல மாணிக்க ரத்னங்களால் தயாரித்த அரைஞாண் தரித்து, நீல பட்டால் ஆன, பூஞ்சேலையும் உடுத்தி, கதலி வாழை போன்ற தொடையழகும், கெண்டைக்கால்களும் பெற்று, பக்தர்களின் மன விகாரம் என்னும் மந்த்ர மலையைப் பெயர்த்து எடுக்கும் சக்தி வாய்ந்த கூர்மம் (ஆமை) போன்றதான திருமலரடியையும் பெற்றிருந்தார்.
நவரத்னங்களின் ஒளியுடன் கூடிய அற்புத திவ்ய ரூப லாவண்யமும், எட்டு கைகளோடு கூடிய எட்டு திக்கும் பிரகாசிக்கும் அந்த நீல வண்ண கட்டழகன், மார்கழி மாதத்தின் இறுதியில், உத்திர நட்சத்திரத்தில், பஞ்சமி திதியில் சனிக்கிழமை கூடிய சுபவேளையில். விருச்சிக லக்னத்தில் நிர்குண பரப்பிரம்மமான பகவான் குணயுக்தனாக அவதாரம் செய்தார்.
தொடரும்.....
Leave a comment
Upload