தொடர்கள்
ஆன்மீகம்
திருக்கழுக்குன்றத்தில் அதிசய சங்கு!- மாலா ஸ்ரீ

20240208091008898.jpeg

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் ‘பட்சிதீர்த்தம்‘ என்று அழைக்கப்படும் வரலாற்று பிரசி த்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோ யி ல் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற சிவதலங்களில் முக்கிய தலமாக விளங்கி வருகிறது.

இக்கோயிலில் நீண்ட காலமாக மதிய வேளையின்போ து அர்ச்சகர்கள் தரும்பிரசாத உணவை 2 கருடன்கள் வானத்தில் வட்டமிட்டு வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இங்கு 2 கருடன்கள் வருவதில்லை எனக்கூறப்படுகிறது.

20240208091041525.jpg

இக்கோயிலின் மலை யடிவா ரத்துக்கு சற்று அருகே ஒரு (சங்கு) தீ ர்த்தகுளம் அமை ந்துள்ளது.பண்டைய கா லத்தில் ஒவ்வொரு சிவதலங்களாக மார்க்கண்டேய முனிவர் வலம் வந்து, அங்குள்ள சிவபெ ருமானை பூஜித்து வணங்கியுள்ளார்.

மலையடிவாரத்தில் உள்ள தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, மலைமீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு தீர்த்த நீரைக்கொண்டு அபிஷேகம் செய்ய மார்க்கண்டேய முனிவர் எண்ணியுள்ளார்.

20240209093433733.jpg

அப்புனிதநீரை எடுத்து செல்ல பாத்திரம் இல்லாததால், சிவபெருமானை மனமுருகப்பாடியுள்ளார்.அந்த தீ ர்த்த குளத்தில் மார்க்கண்டேய முனிவருக்கா க குளத்தில் சங்கு பிறந்துள்ளது. அந்த சங்கில் தீர்த்த குளத்துநீரை மார்க்கண்டேய முனிவர் எடுத்து செ ன்று, மலை மீதுள்ள வே தகிரீ ஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்து வணங்கி மகிழ்ந்துள்ளார்.

2024020909350710.jpg

மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள தீ ர்த்த குளத்தில் புதிதாக சங்கு பிறந்ததால், அன்று முதல் அந்த திருக்குளம் ‘சங்கு தீர்த்த குளம்’என அழை க்கப்படுகிறது.

இக்குளத்தில் முறையே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக சங்கு பி றந்து வருகிறது. அந்த சங்கி ன் மூலம் மலை மீதுள்ள வேதகிரீ ஸ்வரருக்கு அபிஷே கம் செ ய்வி க்கப்படுகிறது. இக்குளத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வி னாயகர் சதுர்த்தி அன்று புதிய சங்கு பி றந்தது. அதைத்தொ டர்ந்து, தற்போது 12 ஆண்டுகள் கழி த்து சிவராத்திரிக்கு ஒரு நாளுக்கு முன்பு நேற்று 7-ம் தேதி காலை தீர்த்த குளத்தில் புதிதாக சங்கு பி றந்துள்ளது.

சங்கு என்பது உப்புநீரில்தான் பி றக்கும். ஆனா ல், திருக்கழுக்குன்றத்தில் உள்ள சங்கு தீ ர்த்தகுளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்னீ ரில் ஒரு சங்கு பிறப்பது அதிசயமா க கருதப்படுகிறது.

திருக்கழுக்குன்றத்தில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘புஷ்கர மேளா ’ எனும் லட்ச தீபத்திருவி ழா நடைபெறுவது வழக்கம்.இதற்கு சிவபெ ருமானின் மாமன் மகாவிஷ்ணுவி ன் ஆயுதமாக வி ளங்கும் சங்கு,தர்மத்தை நி லை நா ட்டக் கூடியதா கும். இங்கு பி றக்கும் சங்கில் எந்த நீ ரை ஊற்றினாலும் அது புனிதமா க மா றிவிடும். அந்த சங்கினா ல் அபிஷே கம் செ ய்தால் சி வபெருமா ன் குளி ர்ச்சி யடைவார் என்பது ஐதீ கம்.

திருக்கழுக்குன்றம் சங்கு தீ ர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பி றக்கிற வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு, திரி சங்கு, திவி சங்கு, நாதசங்கு என்ற வகை யி லா ன சுமார் 9 சங்குகள் தற்போ து தாழக்கோயிலில் பாதுகா ப்பாகவை க்கப்பட்டு உள்ளது. மீ தமுள்ள சங்குகள் வே தகிரீஸ்வரர் மலை க்கோ யி லி ல் வை க்கப்பட்டுள்ளது. அந்த மொத்த சங்குகளை கொ ண்டுதா ன், ஆண்டுதோ றும் கா ர்த்தி கை மா தம், கடை சி சோமவா ரத்தில் (திங்கட்கிழமை ) வேதகிரீஸ்வரருக்கு1008 சங்குகளி ன் மூலம் மகா சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது .