தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
சமூக வலைதளங்கள் Vs பெண்கள் பாதுகாப்பு மரியா சிவானந்தம்

20240207185404456.jpg

சமூக வலை தளங்கள் இன்று நமக்கான புதிய வடிகால்கள் .

பரபரப்பும் ,அவசரமும் மிக்க வாழ்க்கை சூழலில், நிழல் தரும் மரம் போல சமூக வலை தளங்களான ட்விட்டர் ,முகநூல் , இன்ஸ்டா போன்றவை இருக்கின்றன. தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதோடு மட்டுமன்றி , தங்கள் உணர்வுகளை, கருத்துக்களை முன் வைக்கும் இடமாகவும் இவை உள்ளன . தம் திறமைகளை உலகுக்கு அறிவிக்கும் இடமாகவும் அவற்றை மேம்படுத்தும் தளமாகவும் இவை விளங்குகின்றன.

முகநூலில் எழுதி எழுதியே எழுத்தாளர்களாக, கவிஞர்களாக அவதாரம் எடுக்கிறார்கள். .திரைத்துறை, சின்னத்திரைக்கு இங்கிருந்து செல்பவர்கள் இன்று உண்டு. பெண்களுக்கு முகநூல் ட்வீட்டர் புதிய அங்கீகாரம் மற்றும் அடையாளத்தைத் தருகிறது. சுய முன்னேற்றம், வணிகம் , இயற்கை உணவியல், மருத்துவம் சார்ந்து பல நல்ல ஆலோசனைகளுக்கு பெண்கள் முகநூலில் நீடித்து இயங்குகிறார்கள்.

இத்தனை நேர்மறை சங்கதிகள் இருந்த போதும் பெண்களுக்கான பல அச்சுறுத்தல்கள் இங்கு உண்டு. இன்பாக்சில் தேவையற்ற 'சாட்டிங் 'செய்வது,ஆபாச படங்களை பகிர்வது, உணர்வு பூர்வமாக காயப்படுத்துவது ,புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி மன உளைச்சளைத் தருவது போன்ற எதிர்மறை சங்கதிகள் இங்கு தினமும் உண்டு , பசப்பு வார்த்தைகளைப் பேசி பணம் பறிப்பதும் நடக்கிறது .

முகநூலில் நடக்கும் எதிர்மறை, நேர்மறை சங்கதிகளை ஆய்ந்தறிந்து சிறப்பான முறையில் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை முன் வைத்து பாதுகாப்பாக இயங்குபவர்கள் பலர் . அவர்களில் இருவரை இந்த வாரம் சந்தித்தோம் .

முதல்வர் லலிதா முரளி லல்லிஸ் கிச்சன் என்ற பெயரில் சமையல் குறிப்பு வெளியிடுவது இவர் சிறப்பு . மிகுந்த பக்குவத்துடன் அழகான விதத்தில் நட்பு வட்டத்தை உள்ளார்ந்த அன்புடன் கையாள்வது கூடுதல் சிறப்பு. "என் மகிழ்ச்சியின் சாவி என் குடும்பம் " என்கிறார் இவர் .

லலிதா முரளி :

20240207185443243.jpg

சமூக வலைத்தளம் என்றாலே 100% பாதுகாப்பு எதிர்பாக்க முடியாது, எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதோ ஒரு வகையில், அச்சுறுத்தல், புகைப்படத்தை மோசமான தளத்தில் பகிர்வது, மற்றவர்களுக்குப் பிடித்த கட்சிக்கு எதிராக பேசினாலோ, அக்கட்சியின் ஆட்சி பற்றி விமர்சித்தாலோ, அப்பெண்களின் நடத்தைப் பற்றியும் அவர்கள் கணவர் குடும்பம் பற்றியும் மிக கேவலமா விமர்சிப்பார்கள்,

பெண்கள் எந்த வகையிலும் தனித்து இயங்குவதோ, சுதந்திரமாக இயங்குவதயோ இவர்கள் விரும்புவது இல்லை, ஆனால் பெண்களுக்கு அப்போது இல்லாமல் இப்பொழுது, தங்கள் கருத்துகளை வெளியிடவும், சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு சிறந்த முறையில் தங்களுடைய வியாபாரத்தை பெருக்கவும்,நல்ல நண்பர்கள் கிடைக்கவும், நண்பர்கள் மூலம் வேலை வாய்ப்பு தளமாகவும் சோசியல் மீடியா கிடைத்துள்ளது,

மிகவும் பாதுகாப்பாக நெருங்கிய நேரில் பார்த்த நண்பர்கள் இவர்கள் மூலம் நண்பர்களை இணைத்துக் கொள்ளலாம், பிசினஸ் செய்யும் பெண்கள் அரசியலில் உள்ள பெண்கள் அப்படி பார்த்து பார்த்து இணைப்பது கடினம்,

"ஃபோட்டோ ஷேர் பண்றியா பண்ணிக்கோ, தப்பா பேசறயா பேசிக்கோ, உங்கள் விமர்சனம் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது, என் மகிழ்ச்சியின் சாவி என் குடும்பம் மனம் சார்ந்ததுன்னு அசால்ட்டா கடந்து போயிடனும் . எந்த விமர்சனமுமே புதியதாக ஒன்று வரும் வரை தான்,.நம்மைப் பற்றி நம் நடத்தையைப் பற்றி விமர்சித்து மனதளவில் நம்மை பலவீனமாக்க முயல்பவர்களுக்கு நாம் தரும் உச்ச பட்ச தண்டனை சிரித்து கடப்பதே, சியர்ஸ் பெண்களே.!.

அடுத்து நாம் சந்தித்தவர் யாழ் மொழி. ஆடை வடிவமைப்பாளர் . கோவையில் ஆடை அணிகலன்களை விற்பனை செய்யும் "நளினம் " விற்பனையகத்தை நடத்தி வரும் சமூக செயற்பாட்டாளர் .

யாழ் மொழி :

20240207185533925.jpg

"பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் முகம் அறியாதவர்களே நம் நட்புகளாக தொடர்கிறோம். அவர்கள் வாழும் சூழல் அவர்களது குணம் பழகும் பண்பு, அவர்கள் செய்யும் பணி, குடும்ப உறவுகளின் புரிதல்கள் என எல்லாம் கலந்து நாம் பார்க்கின்ற புரிந்து கொள்கின்ற ஒரு விஷயத்தை அவர்கள் வேறு வடிவில் புரிந்து கொள்ள பலவிதமான சாத்திய கூறுகள் உள்ளது.

அதனால் அதிகம் முரண்படாமலும் நம் கருத்தில் நாம் வலு இழக்காமலும் சொல்ல வேண்டியதை பகிர வேண்டியதை அவசியமானதை உணர்ந்து பதிவுகளை இடுவதும் பகிர்ந்து கொள்வதும் அழகான நட்புறவோடு தொடர வழிவகுக்கும். குறிப்பாக பெண்கள் இங்கு தங்களது தனித்திறமைகளை ,அதன் மூலம் பெற்ற வெற்றிகளை நிறைவான வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்வது நமது அடுத்த தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதலாக அமைகிறது."

இருவருக்கும் நன்றி

மேலும் சில தோழிகளை அடுத்த வாரம் சந்திப்போம்

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

தொடரும்