தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
விளையாட்டா(ய்)ல் விளைந்த வெற்றி - சாதனைப்பெண்கள் - 8 - வேங்கடகிருஷ்ணன்

20240204144041799.jpg

குரு கூல் ஃபன்...நிறுவனர் திருமதி.ராதா நாராயணன்

ஒரு நண்பகல் பொழுதில் அவருடைய இடத்தில் விகடகவியின் மகளிர் சிறப்பிதழுக்காக இந்த சாதனை பெண்மணியை சந்தித்தோம்.
பொறியியல் படிப்பை முடித்து, தனது எம்.பி.ஏ பட்டப்படிப்பையும் முடித்து பின்னர் தான் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து அதிலே வெற்றியை குவித்து வரும் இவர்,ராதா நாராயணன்

20240204144632733.jpg
இளமையில் கல் என்ற முதுமொழிக்கேற்ப பிஞ்சு மனதில் ஏற்றி வைக்கப்படும் எந்த ஒரு கல்வியும் என்றும் அவர் மனதில் தங்கிவிடும். அது மிகவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். கற்றல் இனிமையாக இருக்கும் போது அது விருப்பத்துடன் ஏற்கப்படுகிறது.

20240204144728743.jpg

விளையாட்டோடு இணைந்த கல்வி பல நல்ல விஷயங்களை மனதிற்குள் கொண்டு செல்கிறது. நமது இந்திய பாரம்பரிய இதிகாசங்கள், புராணங்களில் இருந்து நாயகர்களை தேர்வு செய்து, அவர்களை முக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டுக்களை கண்டுபிடித்து, அவற்றை பரிசோதித்து பின் அதை குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது தான் இவரது நிறுவனம் செய்யும் மிக அற்புதமான பணி.

20240204144924619.jpg

சின்மயா மிஷன் நிறுவனத்தோடு இணைந்து பல குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறைகளை நடத்தி இருக்கிறார். அங்கு கிடைத்த உற்சாகமும் வரவேற்பும் தான் இவர் அடுத்தடுத்து விளையாட்டுகளை உருவாக்கிட உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

20240204145312877.jpg 20240204145355241.jpg

இந்த ஒவ்வொரு விளையாட்டும் மிக கவனமாய் வயது வரம்பு குறிப்புகளோடு உருவாக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக 80'ஸ் கிட்ஸ்களுக்கு மிக பரிச்சயமான ட்ரேட், பிசினஸ், தாயகட்டம், UNO cards, ஆகிய விளையாட்டுகளின் இன்றைய வடிவமாக இதை உருவாக்கி இருக்கிறார் என்று சொல்ல முடியும். விநாயகருக்கு பூஜை செய்வதை மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். குழந்தைகளின் வயதையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நெருப்பில்லாமல், புகை இல்லாமல் பூஜை செய்யும் வழிமுறையை விளையாட்டாக்கி இருப்பது மிக மிக பாராட்ட வேண்டிய ஒன்று.

20240204145449722.jpg
கோடை விடுமுறை நெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற வீட்டுக்குள் இருந்து விளையாடும் விளையாட்டுக்கள் குழந்தைகளை வெயிலிலிருந்து காப்பது மட்டுமல்லாமல் அவர்களை ஒற்றுமையோடு சந்தோஷமாய் நேரத்தை செலவழிக்க செய்யும். மொபைல் என்னும் நேரம் கொல்லும் அரக்கனிடமிருந்து அவர்களை காப்பாற்றும்.

20240204145614856.jpg

இந்த ஒவ்வொரு விளையாட்டுமே மிகவும் அக்கறையோடு குழந்தைகளின் மனதை எந்த வகையிலும் திசை திருப்பாத வகையிலும், அவர்களுடைய எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் வகையிலும், பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வகையிலும் அமைந்திருப்பது, மிகவும் சிறப்பான ஒன்று. நம்மையும் இந்த விளையாட்டை விளையாடச் சொல்லி அவர் அதற்கான பயிற்சியை தந்த போது இது மூளைக்கு மட்டும் பயிற்சி அல்ல உடலுக்கும் சேர்த்து தான் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. குழந்தைகளிடம் இது பெரிய வரவேற்பை பெற்றதில் நிச்சயமாக ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

20240204145655125.jpg 2024020414580312.jpg

இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அவர்களை நல்ல முறையில் விளையாட்டோடு ஒழுக்கத்தையும் பண்பாட்டினையும் கலாச்சார சிறப்புகளையும் கற்றுக் கொள்ளச் செய்வது நமது மிக முக்கிய கடமையாகும்.

இந்த விளையாட்டுக்களை வடிவமைத்து வெற்றிகரமாக குழந்தைகளுடன் விளையாடி பல்வேறு நகரங்களுக்கும் இதனை எடுத்துச் செல்வதில் பெரும் வெற்றி பெற்றுள்ள ராதாவிற்கு அடுத்த முக்கிய பணி ஒன்று தேடி வந்திருக்கிறது. மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புகளுக்கான சிறுவர்களின் பாட புத்தகங்களை வடிவமைக்கும் குழுவில் (NCERT) முக்கிய அங்கமாக செயல்பட ஒரு வாய்ப்பு இவருக்கு வந்திருக்கிறது. நிச்சயமாக இது அவரின் சேவைக்கும், தொலைநோக்குப் பார்வைக்கும் கிடைத்த ஒரு அரிய பரிசாகும். இந்த அருமையான வாய்ப்புக்கும் அவரிடம் வாழ்த்து சொல்லி இந்த சிங்கப்பெண் மேலும் பல நல்ல சமுதாய நோக்கில் உயர்வான சாதனைகளை செய்து வாழ்வில் முன்னேற,விருதுகள் பல பெற்றிட, விகடகவி சார்பாக வாழ்த்துகிறோம். அவரை சந்தித்த காணொளி வாசகரின் பார்வைக்கு இதோ...

ஒரு வேளை மேலேயுள்ள காணொளியின் லிங்க் பாயைப் பிராண்டினால் கீழேயுள்ள சுட்டியை கிளிக்கவும்.

யூடியூப் லிங்க் இங்கே