ரஜினி
ரஜினி மஞ்சு வாரியார் ரித்திகா சிங் நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பு இப்போது ஆந்திராவில் நடந்து கொண்டிருக்கிறது.
யோகி பாபு
தமிழில் பிசி நடிகராக இருக்கும் யோகிபாபுக்கு இப்போது இந்தி படத்தில் வாய்ப்பு வந்திருக்கிறது.
டாப்ஸி
நடிகை டாப்ஸி 10 வருடமாக டென்மார்க்கை சேர்ந்த பேட்மிட்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார். மார்ச் மாதம் திருமணமாம் சீக்கிய முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் நடக்குமாம்.
அடிச்சாராம்
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜூ பாலா இயக்கத்தில் தயாராகும் வணங்கான் படத்தில் நடித்தார். ஒரு காட்சியில் சரியாக நடிக்க வில்லை என்று பாலா அவரை அடிக்க உங்கள் படமே வேண்டாம் என்று விலகி விட்டார் மம்தா பைஜு.
சுட சுட
மம்முட்டியுடன்
இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் இப்போது நடிகராகவும் பிசியாக இருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் படத்தின் பெயர் பாஸுகா. இந்தப் படத்தில் காயத்ரி ஐயர் சன்னி வெயின் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ரெஜினா
சில ஆண்டுகளாக தமிழ் பட வாய்ப்பு இல்லாமல் தெலுங்கில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த நடிகை ரெஜினா. இப்போது விடாமுயற்சி படத்தில் இரண்டாம் நாயகியாக நடிக்கிறார்.
சந்தானம்
சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு இங்கு நான் தான் கிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்று புதிய நடிகை அறிமுகம் ஆகிறார்.
இரண்டு படங்கள்
தளபதி விஜய் நடிக்கும் Goat மற்றும் அல்லு அர்ஜுனா நடிக்கும் புஷ்பா 2 படங்களை ஓடிடி நிறுவனம் வாங்கி இருக்கிறது. Goat படத்தை விஜய் பிறந்த தினத்தன்று வெளியிட ஒரு முயற்சி நடக்கிறது. அப்படி இல்லை என்றால் தீபாவளி தான்.
அவரா இவரா
விஜய் நடிக்கும் 69 வது படம். இதுதான் அவர் நடிக்கும் கடைசி படம் அதன் பிறகு அவர் அரசியலில் பிஸியாகி விடுவார். இந்தப் படத்தில் அரசியல் நெடி கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்குமாம். அந்தப் படத்துக்கான ஒரு ஒன் லைன் ஆர் ஜே பாலாஜி சொல்ல விஜய் முழு கதையும் ரெடி பண்ண சொல்லி இருக்கிறார். இதன் நடுவே கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதை சொல்ல அந்தக் கதையும் அவருக்கு பிடித்துப் போக இதையும் முழு கதை ரெடி பண்ண சொல்லி இருக்கிறார். விஜயின் கடைசி படம் இயக்கப் போவது ஆர் ஜே பாலாஜியா அல்லது கார்த்திக் சுப்புராஜா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
Leave a comment
Upload