ருக்மணி வசந்த்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படம் இதில் பெங்களூரை சேர்ந்த ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயன் ஜோடியாம். இவர் கன்னட நடிகை விஜய் சேதுபதி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இளைய மகளுக்கு கால்ஷிட்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த லால் சலாம் வெளியானதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது இளைய மகள் சௌந்தர்யாவும் படம் இயக்க இருக்கிறார். அக்காவைப் போல் அவரும் ரஜினியை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து, அப்பாவிடம் பேச அவர் கதை என்ன என்று கேட்டு, அந்த கதை அவருக்கு ஓகே என்று முடிவு செய்து படத்தில் நடிக்கவும் ஓகே சொல்லி இருக்கிறார் ரஜினி.
வாணி போஜன்
நடிகை வாணி போஜன் அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு இருக்கிறது என்று சொல்கிறார். கூடவே அரசியலில் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் சொல்கிறார். விஜய் கட்சியில் வாய்ப்பு கேட்டு விருப்பமனு தந்திருக்கிறாரோ என்னவோ !!
விஷ்ணு விஷால் தம்பி
நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா ஓஹோ எந்தன் பேபி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை மிதிலா பால்கர் இணைகிறார் இது ஒரு ரொமான்ஸ் காமெடி படமாம்.
சம்யுக்தா
நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் படம் சுயம்பு. வரலாற்று கதை கொண்ட இந்தப் படம் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகி. படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி பெறுகிறார் நடிகை சம்யுக்தா.
ஸ்ரீ திவ்யா
காஷ்மோரா படத்தில் கார்த்திக் கூட இணைந்து நடித்த ஸ்ரீ திவ்யா தற்சமயம் மெய்யழகன் படத்தில் கார்த்திக் ஜோடியாக இணைந்திருக்கிறார்.
பிரியங்கா அருள் முருகன்
சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படம் சூர்யா ஜோடியாக எதற்கும் துணிந்தவன் தனுஷ் ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தவர் நடிகை பிரியங்கா அருள்முருகன். நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், எனக்கென்று ஒரு எல்லை இருக்கிறது அதை மீறமாட்டேன் என்கிறார்.
சோபிதா துலி பாலா
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களின் நடித்தவர் சோபிதா துலிபாலா. தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பதாக செய்திகள் வருகிறது. ஆனால், அதை தற்சமயம் மறுக்கிறார். இருந்தாலும் ரகசியமாக சந்திக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே சல்மான் கானுடன் ஒரு படத்தில் நடித்தார் .தொடர்ந்து இந்தி பட வாய்ப்புகளுக்காக தேடி வருகிறார். தற்சமயம் இவர் பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னனியை காதலிப்பதாக ஒரு தகவல் பரவுகிறது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் இவரை விட 20 வயது மூத்தவர் இவருடன் இணைந்து பேசப்படுவதால் பூஜாஹெக்டே குடும்பத்தினர் கவலையில் இருக்கிறார்கள். ஆனால், பூஜா பெரிதாக இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை
Leave a comment
Upload