மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில் பிரிவினைவாத முயற்சியும் நடந்தது. இந்தியர்கள் அப்போது பிரிந்து இருந்தனர். இந்திய தேசிய காங்கிரஸால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் மட்டுமே. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும் அவரது இந்திய தேசிய ராணுவமும் அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று தமிழக ஆளுநர் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவில் இப்படி பேசி இருக்கிறார்.
ஆளுநர் காங்கிரஸ் கட்சியை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அரசியல் காரணத்திற்காக காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற ரீதியில் அவரது கருத்து இருக்கிறது. காந்தி இந்தியாவில் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் அதனால்தான் அவரை இன்றும் மகாத்மா என்றும் தேசத்தந்தை என்றும் கொண்டாடுகிறோம். ஆளுநரின் இந்த நிகழ்ச்சிக்காக மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மாணவர்களின் 2 மணி நேர வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது.
ஆளுநர் என்பவர் இந்த மாநிலத்தின் முதல் குடிமகன். அவர் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுபவராக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையற்ற சச்சை கருத்துக்கள் சொல்பவராக ஆளுநர் இருக்கக் கூடாது. அது ஆளுநர் வேலையும் அல்ல. அது ஆளுநர் பதவிக்கு அழகு மல்ல. இதை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தெரிந்து கொள்வது நல்லது.
Leave a comment
Upload