தொடர்கள்
அழகு
லண்டன் கொலு - கோமதி

2023921082041526.jpeg

செப்டம்பர் அக்டோபர் மாதங்கள் லண்டனின் இலையுதிர் காலம். வண்ண வண்ண மயமான இலைகள் காண்போரை கவர்வது போன்று, இந்த நேரத்தில் வரும் நவராத்திரி விழா, கொலு குளிர், இருட்டு இவை அனைத்தையும் கடக்க உதவும் படகு என்றே கூற வேண்டும்.

நவராத்திரி விழாவை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மினி ப்ராஜெக்ட்டாக எடுத்துக்கொண்டு வருடந்தோரும் நிகழ்த்துகிறார்கள்.

இந்தியாவை போன்று பக்கத்தில் ஒரு கடைக்கு சென்றால் தாம்பூலத்திற்கு தேவையானதை வாங்கினோம் என்ற சாத்தியக்கூறு இங்கு இல்லை. இருந்தாலும், இந்தியாவிற்கு செல்லும் பொழுதோ, அல்லது இந்தியர்கள் வசிக்கும் வெம்பிளி, ஹான்ஸ்லோ, சவுத் ஹால் போன்ற இடங்களுக்கு சென்றாலோ இவையெல்லாம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தனை சவால்களையும் தாண்டி இந்த விழாவிற்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், அதற்கான மெனக்கெடல்கள் பல பல.

ஒரு கவுண்டியிலிருந்து மற்றோரு கவுன்டிக்கு செல்பவர்களும் சிறுமியர் முதல் பெண்கள் வரை வண்ணமயமான ஆடைகளில் செல்லும் இவர்களை காண கண் கோடி வேண்டும்.

வருடந்தோறும் நமது பாரம்பரியத்தை காப்பாற்றும் இவர்களுக்கு விகடகவி சார்பில் தனிப்பாராட்டு.

லண்டன் கொலு 2023 உங்கள் பார்வைக்கு.

2023921082435615.jpeg

2023921082459373.jpeg