Heading : நீங்களும் வெல்லலாம் ஆயிரம் கோடி. ! - மாலா ஶ்ரீ
Comment : நீங்களும் வெல்லலாம் ஆயிரம் கோடினு தலைப்பை பார்த்து மிரண்டுவிட்டோம். செய்தியை முழுசா படிச்சதும், 'நமக்கு அந்த லக்கி பிரைஸ் கிடைக்கலையே?!' என ஏங்கித் தவிக்கிறோம். இது முழுக்க தனியார் வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவுதான் என வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இதுபற்றி முறையாகத் தகவல் தெரிவித்தவருக்கு, எடுத்த பணம் தள்ளுபடியா?! வங்கி அதிகாரிகளின் மெத்தப் போக்கு பட்டவர்த்தமாகத் தெரிகிறது.
சுஹாசினி, பாலகுமாரன், கோட்டயம், கேரளா
Heading : உறியடி (தஹி ஹண்டி) மும்பையில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம். நேரடி ரிப்போர்ட். பால்கி
Comment : மும்பையில் தஹி ஜண்டி எனும் பெயரில், கிருஷ்ண ஜெயந்தியின் உறியடி திருவிழா கொண்டாட்டங்கள் பற்றி பால்கியின் நேரடி வர்ணனை பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் பலே.. பலே ரகம்! கண்ணு படப் போகுதய்யா...
ஜெஸ்டின் வினோத், மகேஸ்வரி , புதுடெல்லி
Heading : நீருக்கடியில் மெட்ரோ - மாலா ஶ்ரீ
Comment : நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை துவக்கமா? பலே, பலே... கொல்கத்தாவின் ஹுக்ளி ஆற்றின் கீழ்ப்பகுதியில் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் ரயில்பாதையா? மம்தா ஆட்சியில் ஒரு மணிமகுடமா... ஆச்சரியம்தான்! வரட்டும், வரட்டும்!
விசாலாட்சி, ஜெனிபர், மேகநாதன், லக்னோ, உ.பி
Heading : விசாகப்பட்டினம் - புதிய தலைநகரம் - மாலா ஶ்ரீ
Comment : மக்களவை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு மாநில முதல்வர்களும் புதுப்புது திட்டங்களை அறிவிக்கிறாங்க. ஆந்திராவில் தலைநகர் மாற்றமா? ஏற்கெனவே முதல் தலைநகரான அமராவதியை நிர்மாணிக்க, மக்களின் வரிப்பணத்தில் பலகோடி செலவு... தற்போது புதிய தலைநகர் விசாகப்பட்டினத்துக்கு எத்தனை கோடி எஸ்டிமேட்?!
வித்யாலட்சுமி, கிறிஸ்டோபர், நாகர்கோவில்
Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 35-பரணீதரன்
Comment : பரணிதரனின் கதை கேளு கதை கேளு தொடரில் தமிழ் இலக்கண அகராதிகளில் உள்ள செய்யுள்களின் விளக்கவுரையுடன் மிக அழகாக விளக்குகிறார். என்ன... ஒருசில இடங்களில் போரடித்து 'ஆவ்'னு கொட்டாவி விடுவதை நிறுத்த முடியலையே!
பாத்திமா, ராஜசேகரன் , திருப்பூர்
Heading : வாழ்க்கை இது தான்
Comment : விகடகவியில் வெளிவரும் வாழ்க்கை தத்துவ பொன்மொழிகள், எங்களின் மனதில் பசுமரத்தாணி ஆணி போல் பதிந்துவிட்டது.
பத்மாவதி பாலசந்தர் , மடிப்பாக்கம்
Heading : குருவே சரணம் - 050 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
Comment : மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி சிவன் சாரின் அனுகிரஹம், அவருடன் பயணித்தவர்களின் அனுபவத் தொடருக்கு 50வது வாரமா?! ஒவ்வொரு வாரமும் சுவைபட அனுபவங்களைப் படித்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி. வேறொவது மகான்கள் பற்றிய தொடர் வருமா?
பரந்தாமன், விக்னேஸ்வரன், நெல்லை டவுன்
Heading : புனிதமான புரட்டாசி மாதம்…!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : புனிதமான புரட்டாசி மாதம்...!! புரட்டாசியின் விரிவான மகத்துவம் , மிக்க அருமை ரமா ராமசந்திரன் ஆதம்பாக்கம்
Rama ramachandran, Adampakkam
Heading : மோதல் 3. ரவி. vs. ஸ்டாலின்
Comment : இதை பற்றி பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?அவர்களுக்கு இதனால பாதிப்பு ஏதும் இல்லையா?
Heading : புனிதமான புரட்டாசி மாதம்…!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ஆசிரியர் ஆரூர் சுந்தரசேகரின் புனிதமான புரட்டாசி மாதத்தில் தெரியாத இரண்டு விஷயங்கள் 1. மண் சட்டியில் நைவேத்யம். 2. புரட்டாசி மாதம் அசைவத்தைத் தவிர்ப்பது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. விகடகவிக்கு நன்றி... S.விஜயலெஷ்மி ஜெய்சங்கர் பெங்களூரு
Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 35-பரணீதரன்
Comment : பாரதியின் நாட்டு பாடலாகட்டும், தேசிகனின் திருவரங்க கோவில் பாடலாகட்டும்.... எந்த விதியின் அடிப்படையில் இந்த வார்த்தைகள் உபயோகத்தில் உள்ளன, என்று புரிந்து பின் இன்னும் அனுபவிக்க முடிகிறது.... எந்த விதி என்று சொல்ல முடியலை என்றாலும் இது சரிதான் என்று நம்பிக்கையோடு பயன் படுத்த முடியும் 👏
சீராம் , சென்னை
Heading : புனிதமான புரட்டாசி மாதம்…!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : "புனிதமான புரட்டாசி மாதம்" மிகவும் பிரமாதம். இந்த மாத பூஜைகள், விரதங்கள் பற்றி கட்டுரை ஆசிரியர் ஆரூர் சுந்தரசேகர் இரத்தின சுருக்கமாக விளக்கியுள்ளார். பாராட்டுக்கள்... ஜனரஞ்சக பத்திரிகையான விகடகவியில் ஆன்மீக கட்டுரைகள், கோயில்கள் பற்றியன தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம். இரா.நாராயணன் குடும்பத்தினர். காட்டுப்பாக்கம் சென்னை - 600056
R Narayanan, Chennai
Heading : நடந்தது - 3 - ஜாசன்
Comment : சாலையில், ரயில்களில் தொண்டை கிழிய கூவினாலும், பிச்சை எடுத்தாலும் 10 ரூபா போணியாகாது. எதுக்கு கத்தணும்? ரெக்கார்டர் வாய்ஸை பேட்டரி ஸ்பீக்கரில் அலறவிட்டா... கலெக்சன் தானா தேடி வரும். ஜாசனின் உள்ளூர் பயணத் தொடர், பலவற்றை தோலுரித்து காட்டுகிறது. சூப்பரப்பு!
சிவனேசன், கபிலன், தென்காசி
Leave a comment
Upload