இஸ்தான்புல் நகரில் இருந்து வரும் நவம்பர் 1-ம் தேதி Miray International என்ற பன்னாட்டு கடல் சுற்றுலா நிறுவனம் சார்பில், 'Life at Sea Cruises' என்ற சர்வதேச நவீன சொகுசு கப்பல் சுற்றுலா பயணத் திட்டம் துவங்கப்படுகிறது. இந்த சுற்றுலா திட்டத்தின்படி, அந்த சொகுசு கப்பலில் 7 கண்டங்களில் உள்ள 135 நாடுகளின் 375 துறைமுகங்களுக்கு சர்வதேச சுற்றுலா செல்லத் திட்டமிடப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நீளும் இந்த சொகுசு கப்பல் சுற்றுலா பயணத்தில், 13 உலக அதிசய இடங்களுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் சீனப் பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மஹால், பிரேசில் நாட்டில் ரியோ நகரில் உள்ள மீட்பரான கிறிஸ்து (Christ the Redeemer), மெக்சிகோ நாட்டின் சிட்சென் இட்சா முதலான சுற்றுலா தலங்களும் அடங்கும்.
மேலும், மழைக்காடுகள் நிரம்பிய 103 தீவுகளுக்கும் சொகுசு கப்பல் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ள 375 துறைமுகங்களில், 208 இடங்களில் ஓர் இரவில் சொகுசு கப்பல் தங்கி செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, அங்கு சுற்றுலா பயணிகள் கூடுதல் நேரம் செலவிட முடியும் என்று நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதவிர, சொகுசு கப்பலில் பயண நாட்களின்போதே, தங்களின் அலுவலக பணிகளை சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சொகுசு கப்பலில் 14 அலுவலகங்கள், 2 சந்திப்பு அறைகள், லேப்டாப், பிரிண்டர், மேம்படுத்தப்பட்ட இணையதள வசதி உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
7 கண்டங்களில் உள்ள 135 நாடுகளுக்கு 3 ஆண்டுகள் சொகுசு கப்பலின் மூலம் சர்வதேச சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மறக்க முடியாத மற்றும் ஆடம்பரமான அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இதற்கான சுற்றுலா பயண கட்டண விகிதம், ஆண்டொன்றுக்கு, ₹24,51,300 முதல் ₹89,88,320 வரை தானாம் !!
இதையெல்லாம் படிக்க நல்லாருக்கும். அதான்......
Leave a comment
Upload