கடந்த ஞாயிற்று கிழமை காலை முதல் கேரளா சுல்தான் பத்தேரி கள்ளிக்கோட்டை சாலையில் உள்ள எஸ் பாரத் புதிய வெட்டிங் ஷோ ரூம் வாயிலில் காலை எட்டு முதலே கேரளத்து இளம் வட்டங்களும் கேரளத்து பைங்கிளிகள் குவிய ஆரம்பித்துவிட்டனர் .
முந்தின இரவே நாம் தங்கியிருந்த ஹோட்டலில் ஒருவர் கேட்டார் " சாரே நிங்கள் எவடேருந்து வருனு " நாம் தமிழ்நாடு ஊட்டி என்றவுடன் .."விஷியம் அறியோ நாள ராவில் விஜய் சேதுபதி இவ்வட வரணு எஸ் பாரத் புதிய கடை திறக்க ஆள கானனும்.. " எதோ பெரிய வி வி ஐ பி வருவது போல காத்திருந்தனர் .
ஞாயிற்று கிழமை காலை எஸ் பாரத் புதிய ஷோ ரூமுக்கு முன் ஒரே விழா கோலம் பெரிய ஸ்டேஜ் அதில் ஆர்கெஸ்ட்ரா ரெடியாகி கொண்டிருக்க எதிரில் உள்ள அன்னை மரியாள் ஆலயத்தில் திருப்பலி முடிய காத்துக்கொண்டிருந்தனர் திருப்பலி முடிந்தவுடன் விஜய் சேதுபதி வருகை குறித்து அறிவிப்புகள் வர கூட்டம் அதிகமாகியது .
நாம் நம்மை அறிமுக படுத்தி கொண்டு உள்ளே செல்ல நல்ல வரவேற்பு நம்மஊராக இருந்தால் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டிருப்பார்கள்.
நாம் உள்ளே நுழைய நீலகிரி கூடலூர் எம் .எல் .ஏ பொன் ஜெயசீலன் தன் குடும்பசகிதமாக வந்திருந்தார் .
சுல்தான் பத்தேரி எம் எல் ஏ ஐ .சி .பாலகிருஷ்ணன் நம்ம எம் எல் ஏவுடன் தமிழில் சகஜமாக பேசி கொண்டிருந்தார் .
புதிய ஷோரூம் என்பதால் எல்லாமே புதுசு தான் துணிகளில் இருந்து சேல்ஸ் வுமன் சேல்ஸ் மென் என்று அழகிய புது யூகம் .
சுல்தான் பத்தேரி மற்றும் வயநாடு முக்கிய பிரமுகர்கள் நம்ம விஜய் சேதுபதியை சந்திக்க காத்திருந்தது தான் ஆச்சிரியம் .
எஸ் பாரத் உரிமையாளர் ஐயூப் கான் தன் குடும்பத்துடன் காத்திருந்தார் .
எதோ ஒரு பெரிய உலக வி வி ஐ பி வருவது போல பெளன்சர்கள் கூலிங் கிளாஸ் அணிந்து சினிமா பாணியில் நின்று கொண்டிருந்தனர் .
ஒரு நீண்ட காத்திருப்புக்கு பின் 11.30 மணிக்கு விஜய் சேதுபதி காத்திருந்த மக்கள் வெள்ளத்தினுள் நீந்தி வந்து சேர நிகழ்ச்சி டி ஜி ரெமி உரத்த குரலில் " நம்ம மக்கள் செல்வன் தமிழ்நாட்டு ஹீரோ விஜய் சேதுபதி வந்தாச்சு " என்று கூச்சலிட கூட்டமும் ஆரவார கூச்சலிட காவி ஷார்ட் மற்றும் பட்டு வேஷ்டியில் வந்த விஜய் சேதுபதி மேடையில் ஏறி கையசைத்து "உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம் உங்க ஊர் சுல்தான் பத்தேரி யும் நீங்களும் அழகா இருக்கீங்க உங்களுக்கு ஒரு கதை சொல்றேன் இந்த ஊரில் ஒரு ஷூட்டிங் எடுக்கணும் அதற்கு கட்டாயம் வருவேன் " என்று கூறி கூட்டத்தை பார்த்து செலஃபீ எடுத்து கொண்டார் .
பின் எஸ் பாரத் வெட்டிங் கலெக்சன் ஷோ ரூமை ரிப்பன் வெட்டி திறந்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார் .நாம் அருகே சென்று கைகொடுத்து பேச , " இது தான் சுல்தான் பத்தேரிக்கு நான் வருவது முதல் முறை அழகான ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு இந்த ஷோ ரூம் அழகா இருக்கு இங்கு மக்களின் வரவேற்பு சூப்பர் " என்று கூறி பேசிக்கொண்டே வர ஒரு டான் நம்மிடம் இங்கு பேச வேண்டாம் மூன்றாம் தளத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கு அங்கு பேசுங்க என்று நம்மை தடுத்து நிறுத்தினார் .
காத்திருந்த சேல்ஸ் வுமன்.. மென்களுடன் போட்டோ எடுத்து கொள்ள பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் விஜய் சேதுவிடம் அமர்ந்து போட்டோ மற்றும் செலஃபீ எடுத்து கொண்டனர் .
ஒரு சுற்று சுற்றி விட்டு மூன்றாம் தளத்திற்கு வர அங்கு பத்திரிகையாளர்கள் காத்திருக்க எஸ் பாரத்தின் சொந்தங்களும் நண்பர்களும் மக்கள் செல்வனை பார்த்து கைகுலுக்கி செலஃபீ எடுக்கவே சரியாக இருக்க நாமும் பத்திரிகையாளர்களும் ஒரு சிறிய பேட்டி என்று கேட்க நேரம் ஆகிவிட்டது நான் அவசரமாக போக வேண்டும் என்று நழுவி சென்றார் விஜய் சேதுபதி .
ஷோ ரூமுக்கு வெளியே நின்றிருந்த மக்கள் கூட்டம் மக்கள் செல்வன் விடைபெற்றவுடன் அப்படியே உள்ளே நுழைந்தனர் .
மக்கள் செல்வன் மீடியாவை தட்டி கழித்தது தான் எனோ என்று கேட்கிறார்கள் கேரள பிரஸ் .
மன்னிக்கவும். தலைப்பில் விஜய சேதுபதி சொன்ன கதை என்று போட்டு விட்டோம்.
தான் ஒரு கதை சொல்கிறேன் என்று கூறி கொண்டே இருந்து கடைசிவரை அந்த கதையை சொல்லாமலே போய்விட்டார் விஜய் சேதுபதி.
Leave a comment
Upload