தேவன்ஷி சங்வி.
எட்டு வயதில் துறவறம் மேற்கொள்ள முடியுமா ???
இனிப்புக்களும், விளையாட்டு பொம்மைகளும் கேட்கும் வயதில் துறவறம் மேற்கொள்வது பூர்வ ஜென்ம வாசனையன்றி வேறென்ன ??
தேவன்ஷி சங்வி சமண மதத்தைப் பின்பற்றி வந்துள்ளார். சமண மதத் துறவியாக 8 வயது தேவன்ஷி சங்வி சன்னியாசம் மேற்கொண்டார். அதற்கு முறையான விழாவும் வைர வியாபாரி தனேஷின் வீட்டில் நடைபெற்றது.
இந்த செய்தி சாதாரணமாக கடந்து செல்லக் கூடியது இல்லை.
ஓரமாக அமர்ந்து உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் செயற்கரிய செயலாக தோன்றும்.
அவர் குடும்பம் இது பற்றி சொல்கையில்
‘‘தேவன்ஷி சங்வி இதுவரை விதவிதமான உணவு வகைகள் உள்பட எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபாடு காட்டியதில்லை. அவருக்கு இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். இசை, நடனம், யோகாவில் சாதனை படைத்துள்ளார். அவர் சமண துறவு வாழ்க்கையைத் தேர்வு செய்யாமல் இருந்திருந்தால், வருங்காலத்தில் பலகோடி மதிப்பிலான வைர நிறுவனத்தின் உரிமையாளராகி இருப்பார்.
வைர வியாபாரி தனேஷின் வைர நிறுவனத்துக்கு உலகெங்கிலும் கிளைகள் உள்ளன. ஆண்டொன்றுக்கு ₹100 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. எனினும், இந்த சின்னஞ்சிறு வயதில் தேவன்ஷி சங்வி சமண துறவியாக மாறியது, எங்கள் குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!’’ என்று தெரிவித்தனர்.
கவனிக்கவும் அதிர்ச்சியில் அல்ல. இன்ப அதிர்ச்சியில்.
அந்தக் குழந்தை ஆன்மீக ஓளிபரப்பி, சமூகத்தை மேலும் உயர்த்தட்டும்.
Leave a comment
Upload