தொடர்கள்
அழகு
" காலையில் உறைந்திருக்கும் ஊட்டி "- ஸ்வேதா அப்புதாஸ்.

வருடந்தோரும் நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனி காலம் அழகாகவும் கடும் குளிரினால் நடுங்கி கொண்டிருக்கும் மலைகளின் அரசி ஊட்டி .

20230012191349789.jpg
இந்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தான் குளிர் ஊட்டியை நடுங்க செய்தது . கடந்த வாரத்தில் இருந்து உறைபனி ஊட்டி முழுவதும் படர துவங்கியது . முக்கியமாக தாழ்வான பகுதிகளில் கடும் பனியின் தாக்கத்தை காண முடிந்தது .

20230012191535419.jpg
தலைகுந்தா , இந்துநகர், ரயில்நிலைய பகுதி , குதிரை பந்தைய மைதானம் ,ஊட்டி ஏரி மற்றும் வேலி வீயூ பள்ளத்தாக்கு என்று அனைத்து தாழ்வான பகுதிகளில் பனியன் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது . பனியன் தாக்கம் 2 டிகிரி செல்ஸியஸ் மற்றும் 1 டிகிரி செல்சியஸ் என்று குளிர் நடுங்கி கொண்டிருக்கிறது .

2023001219192532.jpg
ஊட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில் இரவில் கடும் குளிர் வாட்டிவருகின்றது , அதிகாலை வெள்ளை கம்பளம் போர்த்தியது போல இந்த தாழ்வான பகுதிகளில் காட்சியளிக்கிறது .

20230012192049376.jpg
நாம் பனி படர்ந்த தலைகுந்தா மட்டும் ஊட்டி ரயில் நிலைய பகுதிகளில் நடுங்கியவண்ணம் ஒரு விசிட் அடித்தோம் அதிகாலையில் . பனி வெள்ளை கம்பளம் விரித்தது போல கொட்டி கிடந்தது . இரவில் சாலை ஓரங்களில் நிறுத்திவைத்திருந்த வாகனங்கள் முழுவதும் பனியால் உறைந்து போயிருந்ததை பார்க்க முடிந்தது . அதில் காலை சூரியனின் ஒளி இந்த பனி விரிப்பின் மேல் விழும் பொழுது ஒரு அழகான காட்சியை பார்க்கமுடிந்தது .


பனியன் தாக்கத்தால் குதிரை , மாடுகள் என்று கால்நடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன . அதே சமயம் நகருக்கள் விசிட் செய்துகொண்டிருந்த சிறுத்தை , புலி மற்றும் காட்டு பன்றிகளின் வருகை மிஸ்ஸிங் .

20230012193408346.jpg
வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே பனி பொழிவு மிக அதிகமாக இருக்கும் , இந்த வருடம் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயலால் பனியன் தாக்கம் குறைவாக இருந்தது கிறிஸ்துமஸ் இரவு கூட பனி குளிர் மிஸ்ஸிங் , கிறிஸ்துமஸ் அன்று இரவு மழை கொட்டித்தீர்த்தது இதனால் பனியன் குளிரில் இருந்து உள்ளூர் வாசிகள் எஸ்கேப் . அதே சமயம் மழை நின்றவுடன் அதன் ஈர்ப்பதத்தின் தாக்கம் கடும் பனிப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது .

20230012193711752.jpg
மூத்த பத்திரிகையாளர் ஆர். ஏ .தாஸ் கூறும் போது, " எனக்கு என்னமோ இது நார்மல் பனிப்பொழிவு என்று தான் தோன்றுகிறது . என் சிறுவயதில் டிசம்பர் மாதத்தில் இருந்தே கடும் பனி பொழிவை பார்த்து அனுபவித்துள்ளேன் . கண்ணாடி பிளேட்டுகள் டம்பளர்களில் தண்ணீர் நிரப்பி வெளியே வைத்தால் காலை அது பனி கட்டியாக மாறியிருக்கும் .
இப்பொழுது லேட் பனி அதனால் தாழ்வான பகுதியில் மட்டும் பனியன் தாக்கம் இருக்கிறது . வடகிழக்கு பருவமழை மற்றும் அதிகமான கட்டிடங்களை கட்டிக்கொண்டிருப்பதால் கட்டிடங்களின் மேல் படரும் பகல் சூரிய வெப்பத்தின் தாக்கம் இரவில் பிரதிபலிப்பதால் பனியன் தாக்கம் குறைந்துள்ளது என்று தான் நினைக்கிறேன் .பத்திரிகைகள் மற்றும் டி வி செய்திகளில் பனிப்பொழிவு பரபரப்பான செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறது .

தாழ்வான பகுதிகளில் தான் பனிப்பொழிவு உள்ளது மற்ற இடங்களில் குறைவு தான் காரணம் மரங்கள் வெட்டப்படுவது , அதிக கட்டிடங்களை கட்டுவதால் மிக பெரிய இயற்கை பாதிப்பு ஏற்பட்டு பனிப்பொழிவை தடுக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும் " என்று வருத்தப்பட்டு கூறினார் .
ஊட்டியில் உள்ள கால்ப் கிளப் புல்வெளி தற்போது மெடிக்கல் காலேஜ் கட்டுவதால் புல்வெளி மறைந்து கொண்டிருக்க கடும் பனி கொட்டும் அந்த பகுதியில் பனி பொழிவின் தாக்கம் குறைந்து விட்டது .

20230012194048594.jpg
தற்போது பனி கொட்டியிருக்கும் பகுதிகள் காலை சூரிய வெளிச்சத்தில் மிக அழகாகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது ஊட்டி கடும் நடுக்கத்துடன் .