ஏன்னா தூங்காமல் இப்போ எதுக்கு செல்லை நோண்டிண்டு இருக்கேள்?
அலாரம் வைக்கிறேன் ருக்கு , அதிகாலையிலே எழுந்து நான் ஆசனம் பண்ணப் போகிறேன் இதோ பாரு, ஆசனத்திற்கான உடைகள் எல்லாம் எடுத்து வச்சுட்டேன், என இளம் வயதில் போட்ட தொளதொளா ஜிப்பா, பைஜாமாவை காண்பித்தார் அய்யாசாமி,
இந்த வயதில், காலையில் எழுந்து ஆசமனம் பண்ணலாம், ஆசனம் போட முடியுமா ? என்ற ருக்கு. என்னமோசெய்யுங்கோ அந்த டீவி்யைப் பார்த்து ஆசனம் போடறது எல்லாம் சரியா வராது ஏதாவது பயிற்சியில் சேர்ந்துபழகுங்கோ என அறிவுரை கூறினாள்.
அய்யாசாமி எதையும் கேட்கும் நிலையில் இல்லை, நாம இப்படி உருளையா குண்டாக இருக்கோமே இவர்எங்கேயாவது முருங்கை போல இளைச்சுடுவாரோ என்று நீ பயப்படுகிறாய் என்றவரிடம்.
பட்டாத்தான் தெரியும் பார்ப்பானுக்கு என்பார்களே அது சரிதான், நான் தூங்குகிறேன் என படுத்துவிட்டாள் ருக்கு.
ருக்கு அலாரமே அடிக்கலை ஏன்? என்று எழுப்பியவரை
எத்தனை மணிக்கு வச்சேள் ?
5.30 க்கு என்றவரிடம் மணி இரண்டரைதான் ஆகிறது, படுங்கோ.
உங்களைப் போல் இல்லை அது தன் வேலையை சரியாக செய்யும் என அந்த இரண்டரை மணிக்கும் “புல் பார்மில்”இருந்தாள் ருக்கு.
5.00 மணிக்கே எழுந்து காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு, பைஜாமா குர்தாவை போட்டுக்கொண்டு, அலராம்அடிக்கிறதா என பார்த்தார் 5.30 மணிக்கு அடித்த அலாரத்தை அனைத்துவிட்டு மாடிக்கு பாய் தலையனை எடுத்துபுறப்பட்டவரை நிறுத்தி இதெல்லாம் எதற்கு? என்றாள்.
டிவியிலே பார்த்தேனே பாய்போட்டு தானே ஆசனம் செய்வாங்க, அதான்.
என்னமோ பண்ணித்தொலைங்கோ, என்ற ருக்கு,
முடித்து விட்டு வரும்போது நேத்துப்பிழிந்த வடாத்தை எடுத்து வெயிலில் உலர்த்திவிட்டு காக்கா ஏதும் கொத்தாமால்பார்த்துக்கோங்கோ, என்னமோ புதுசு புதுசா பண்றது என்ன ஆக போகிறதோ? என்ற புலம்பியபடி தன் வேலையில்மூழ்கினாள் ருக்கு.
காலை மணி எட்டாகியும் இன்னும் கீழே இறங்கி வரவிலையே என்னாச்சு ? அவரால் காபி குடிக்காமல் இருக்கமுடியாதே? என்ன செய்கிறார் மேலே, என்ற கவலை வந்தது ருக்குவிற்கு.
அன்னா,அன்னா, என்றபடி மேலே ஏற முடியாமல் ஏறிய ருக்கு
ஆச்சரியமாகப் பார்த்தாள்,
வடாம் அத்தனையையும் உலர்த்தி இருந்த, பாய் போட்டு மொட்டை மாடியில் குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டுஇருந்தார் அய்யாசாமி குறட்டை சத்தத்தோடு.
என்ன அதிசயம் மணி எட்டாகிறது காக்கையும் எதுவுமே இதுவரை கொத்த வில்லை என நினைத்தபடி எழுப்பினாள்.
முழித்த அய்யாசாமி, தமிழ் சினிமாவில் வரும் மயக்கமடைந்து நினைவுத்திரும்பிய நடிகர் போல் விழித்தார்,
என்ன இது? கேட்டாள் ருக்கு,
இதுவும் ஆசனம்தான் ருக்கு, சவாசனம் என்றார்.
எது பாய்போட்டு் பொழுது விடிந்தது கூட தெரியாமல் படுத்துதூங்குவது சவாசனமா.
இல்லை ருக்கு, சூரிய நமஸ்காரம் செய்தவுடன் படபடப்பாக இருந்தது, டிவியிலே சொன்னாள், அதுமாதிரி்இருந்தால் படுத்துக்கனும் என்று நான் தூங்கிவிட்டேன்அவ்வளவுதான்
ரொம்ப சமர்த்துதான். கீழே வாங்கோ.காபி தருகிறேன் என்றவள்,
ஆமான்னா ? வடாத்தை காக்கா கொத்தவே இல்லையே எப்படி?
வடாத்தை கொத்தறதா ? அதெல்லாம் இந்தப்பக்கமே வராதுடி, அதற்கு ஆயுள் கெட்டி என்றார்.
என்ன செய்தேள் ஏதாவது பாப காரியம் பண்ணி வச்சுடாதேள் என்ற ருக்குவிடம்,
அதெல்லாம் ஒன்றும் செய்யலை, நேத்து நீ செய்த அரிசி் உப்புமா மீதமிருந்ததுன்னோ அதை காக்கைக்குப்போட்டேன், ஒரு ஈ காக்கையும் காணும் என்ற அய்யாசாமியிடம்,
காபி கேட்டேளோன்னோ, கீழே வாங்கோ தரேன், என ருக்கு அழுத்திக் கூறியதும்,பாயையும், வாலையும் சுருட்டிக்கொண்டு ருக்குவின் பின் சென்றார் அய்யாசாமி.
Leave a comment
Upload