தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல். - எடப்பாடியுடன் மிஸ்டர் ரீல்

20221131091442187.jpg

எடப்பாடி பார்க்க மிஸ்டர் ரீல் போனபோது அவர் மனைவியிடம் கோபித்துக் கொண்டிருந்தார். "எனக்கு தான் பன்னீர் பிடிக்காது என்று தெரியும் இல்ல இப்ப எதுக்கு பன்னீர் மசாலா செஞ்சீங்க " என்று கேட்க " உங்களுக்குப் பிடிக்காது ஆனா பேரப் பிள்ளைகளுக்கு பன்னீர் பிடிக்குது பன்னீர் மசாலா தான் வேண்டும் என்று கேட்கிறார்கள் நான் என்ன செய்ய " என்று அவர் மனைவி பதில் சொல்லிவிட்டு " அக்கப்போர் வந்திருக்கு பேசுங்க "என்று சொல்லிவிட்டு உள்ளே எடப்பாடி மனைவி.

அப்போது எடப்பாடி "அவங்க அக்கப்போர் என்று சும்மா உங்கல கிண்டல் பண்றாங்க நீங்க ஃபீல் பண்ணாதீங்க "என்று மிஸ்டர் ரீலை சமாதானப்படுத்த முற்பட அப்போது மிஸ்டர் ரீல் "அதை விடுங்க இதெல்லாம் நான் போற இடத்தில் அடிக்கடி நடக்கிறது சகஜம்தான் உங்களுக்கு பன்னீர்செல்வம் பிடிக்காது சரி, அதற்காக பன்னீர் பிடிக்காது என்று சொல்வது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா "என்று கேட்க அதற்கு எடப்பாடி "உங்களுக்கு தெரியாது எங்க வீட்டு அம்மா சும்மா இருக்க மாட்டாங்க நான் பன்னீர் பண்ணினேன் நல்லா இருக்கா என்பார்கள் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் பன்னீர் மசாலா வைக்கட்டுமா என்று அடிக்கடி சொல்லி என்னை டென்ஷன் பண்ணுவாங்க முன்னாள் முதல்வர் இடைக்கால பொதுச் செயலாளர் என்றாலும் நானும் மனுஷன் தானே எனக்கு எரிச்சல் வராதா "என்று கேட்டார் எடப்பாடி.

அப்போது மிஸ்டர் ரீல் "உங்க பக்கமும் ஒரு நாயம் லைட்டா தெரியுது "என்று சொல்ல உடனே எடப்பாடி சிரித்தபடி "நீங்களே இப்போ என்ன ஆதரிக்கிறீங்க பாத்தீங்களா "என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "என் ஆதரவை விடுங்க அண்ணாமலை ஆதரவு உங்களுக்கு கிடைக்காது போல் தெரிகிறது அவர் 25 சீட்டு அஞ்சு பேர் மந்திரி என்றெல்லாம் சொல்கிறாரே உண்மையில் உங்கள் கட்சியில் என்னதான் நடக்குது என்று சொல்லுங்கள் "என்று கேட்க அதற்கு எடப்பாடி கட்சி எங்கே நடக்குது நல்ல உட்காந்துக்கிட்டு இல்ல இருக்கு இந்த தேர்தல் கமிஷன் வேற முடிவு சொல்லாமல் இழுவையா இழுத்துகிட்டே போறாங்களே நீங்கதான் இடைக்கால பொதுச் செயலாளர் என்று ஒரு வரி எழுதி கையெழுத்து போட்டு தந்துட்டாங்கன்னு மத்த வேலை எல்லாம் மடமட என்று நடக்கும் கட்சியும் எழுந்து நிற்கும் நடக்கும்" என்று எடப்பாடி சொல்ல உடனே மிஸ்டர் ரீல் "அதற்கான வேலையை நீங்க பார்க்க வேண்டியதுதானே தேர்தல் கமிஷன்ல போய் விசாரிச்சீங்களா "என்று கேட்க போன வாரம் தம்பிதுரை போய் தேர்தல் கமிஷனிடம் என்னதான் நடக்குது என்று கேட்டார் அதற்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உங்க பேப்பர் எதுவும் நடக்கல நல்லா இங்கேயே உட்கார்ந்துகிட்டு இருக்கு நகர மாட்டேன் என்று அடம் பிடிக்குது நீங்க போய் அமித்ஷாவை பாருங்க அதற்குப் பிறகு அந்த பேப்பர் உங்ககிட்ட ஓடி வந்துடும் என்று சொல்கிறார்கள் என்று எடப்பாடி சொல்ல அப்போது மிஸ்டர் ரீல்" போய் அமித்ஷாவை பார்க்க வேண்டியதுதானே" என்று கேட்க அப்போது அமித்ஷா மறுபடியும் தேய்ந்து போன பழைய ரெக்கார்டே தான் பாடுறாரு நீங்க தினகரன் சசிகலா ஒண்ணா இருந்தா தான் திமுகவை எதிர்க்க முடியும் என்று இன்னமும் நம்புகிறார் நான் பலமுறை சொல்லி விட்டேன் அவங்க எல்லாம் பழைய 500 ரூபாய் நோட்டு வேலைக்காவாது ஆனால் உளவுத்துறை அப்படித்தானே சொல்லுது என்றார் என்று எடப்பாடி சொல்ல உடனே மிஸ்டர் ரீல் "உளவுத்துறை உண்மையில் அப்படித்தான் சொல்கிறதா " என்று கேட்க எடப்பாடி "எனக்கும் அந்த சந்தேகம் வர உங்களுக்கு இப்படி ஒரு ரிப்போர்ட் தந்த அந்த உளவுத்துறை அதிகாரியை கூப்பிடுங்க நான் அவர்கிட்ட பேசணும் என்று சொன்னேன் அவர் உடனே அந்த உளவுத்துறை அதிகாரி வரச் சொன்னார் அவர் ஒரு பஞ்சாபி ஆசாமி அவரிடம் நம்ம தம்பிதுரை எதை வைத்து சசிகலா தினகரன் ஓபிஎஸ் ஆகியோருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று சொல்கிறீர்கள் என்று இந்தியில் கேட்க அதற்கு அந்த பஞ்சாபி பேசும் உளவுத்துறை அதிகாரி ஜெயா டிவியில் அப்படித்தானே சொல்கிறார்கள் என்ன சொன்னார்.

20221131091528454.jpeg

நான் உடனே அமித்ஷாவை பார்த்து ஜெயா டிவி அவங்க சொந்த டிவி அதுல அப்படித்தானே சொல்லுவாங்க இதுதான் உங்க உளவுத்துறை தகவலா என்று கேட்க அமித்ஷா அந்த அதிகாரியை முறைத்துப் பார்த்து கெட் அவுட் சொல்லி அனுப்பி வைத்தார் எதுக்கும் ஒரு வங்காள உளவுத்துறை அதிகாரியை அனுப்பி விவரம் சேகரிக்க சொல்கிறேன் என்கிறார் நான் உடனே கண்டிஷனாக சொல்லி விட்டேன் நீங்கள் இப்படி விசாரிச்சு சொல்வதற்குள் தேர்தல் நடந்து முடிந்து விடும் ராகுல் காந்தி நடைப்பயணத்திற்கு சினிமா நடிகைகள் சினிமா நடிகர்கள் ரிசர்வ் பேங்க் கவர்னர் எல்லாம் வருகிறார்கள் ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் தோற்று விட்டீர்கள் டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி உங்களிடமிருந்து புடுங்கி கொண்டு விட்டது என்று பயமுறுத்தினேன். அப்போது இமாச்சலப் பிரதேஷ் தேர்தலில் உளவுத்துறை நம்பி நான் மோசம் போனேன் உளவுத்துறை எப்படியும் நீங்கள் இமாச்சலப்பிரதேசத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்வீர்கள் அறிக்கை தந்தார்கள் உண்மையில் இமாச்சலப் பிரதேசத்தில் இருப்பது 90 தொகுதிகள் தான் என்று அமித்ஷா சொல்ல உங்க உளவுத்துறையும் உங்கள மாதிரி இருக்கு நான் என்ன செய்ய என்று சொன்னதும் அவர் முறைக்க நான் எழுந்து வந்து விட்டேன் என்றார் எடப்பாடி.

சரி பிஜேபியுடன் கூட்டணி உண்டா இல்லையா அதைச் சொல்லுங்கள் என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு எடப்பாடி அவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்காமல் திமுகவுடனா கூட்டணி வைக்க முடியும் இங்க தானே வரணும் என்று எடப்பாடி சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் சிவி சண்முகம் திமுக பாஜக கூட்டணி என்று சொன்னாரே என்று கேட்க அப்படி ஒரு ரீல் சுத்த சொன்னதே நான் தான் அப்பத்தான் அண்ணாமலை டென்ஷன் ஆவாரு அதுக்காகத்தான் இந்த ரீல் என்று சொல்ல உடனே மிஸ்டர் ரிலுக்கு நம்ம வேலை இவங்களே செய்வாங்க போல இருக்கு என்று பயந்து போய் நெசமாவா என்று கேட்க கட்சியை உயிரோட்டமாக வைக்க இப்படி சில பல வேலைகள் செய்ய வேண்டி இருக்கு என்ன செய்ய என்று எடப்பாடி சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் ஆனால் அண்ணாமலை எடப்பாடி வாழ்க என்றெல்லாம் என்னால் கோஷம் போட முடியாது என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறாரே என்று கேட்க அதற்கு எடப்பாடி பாஜகவுடன் போடும் தொகுதி ஒப்பந்தத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அண்ணாமலை பேசுவதற்கு முன் 108 முறை எடப்பாடி வாழ்க என்று சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனையே இதற்கு அமித்ஷா ஓகே சொல்லிவிட்டார். இந்த விஷயம் பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் ஆனால் அண்ணாமலைக்கு தெரியாது என்ன செய்ய என்று எடப்பாடி சொல்ல ஏழை விவசாயி எடப்பாடி ரொம்ப தான் விவரம் யோசித்தப்படியே எழுந்தார் மிஸ்டர் ரீல்.