தொடர்கள்
சோகம்
கர்மயோகினிக்கு ஒரு இறுதி அஞ்சலி – ஹீராபென் மோடி மறைந்தார். பால்கி

20221130155051378.jpg

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும், தன் மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் !

ஏன் இருக்கமாட்டாள்? ஏன் இருக்கக்கூடாது?

தன்னுள்ளே இறுமாப்புடன் சென்றுவிட்டாள்

சென்றவிடமெல்லாம் சிறப்பு பெரும் தனயனை

ஈன்றளித்துவிட்டு

தனக்குள்ளே இறுமாப்புடன் சென்றுவிட்டாள்.

வைரம் இவள் பெயர் வைராகி இவள் ஈன்ற மகவு

தன்னுள்ளே இறுமாப்புடன் சென்றுவிட்டாள்

சனாதன தர்மத்தின் நெறியிலேயே திளைத்திட்டாள்

தன் மக்களையும் அவ்வழியிலேயே நடத்திட்டாள்

தன்னுள்ளே இறுமாப்புடன் சென்றுவிட்டாள்.

ம்ம்ம்ம்ம்…..30 டிசம்பர் 2022, அதிகாலை 3.30 மணிக்கு திருமதி ஹீராபென் மோடி தனது இறுதி சுவாசம் வாங்கிட, பாரத பிரதமர் மோடி தனது மகன் தாய்க்கான கடமை நிறைவேற்றிட உடனேயே காந்திநகர் வந்தார். அடுத்த சில மணிகளிலேயே அன்னாரின் உடலை தகனச் சாலைக்கு எடுத்துச்சென்று தமது சகோதரர்களுடன் ஈமக்கிரியைகள் அவரே முன்னின்று நடத்த, முடிந்தன.

20221130155238645.jpg

20221130155334731.jpg

20221130155426810.jpg

20221130155607727.jpg

20221130155645540.jpg

20221130155712292.jpg

அடுத்த ஒரு மணி நேரத்தில், வீடியோ நேர்காணல் மூலமாக கொல்கட்டாவில் வந்தே பாரத் ரயிலை பச்சைக் கொடி அசைத்து தொடக்கிவைக்கச் சென்று விட்டார்.

பிரதமரின் தாய் மரணம் என்ற செய்தி வருகிறது.

இதைப் படித்து முடிப்பதற்குள் அடுத்த செய்தியாக அவரது ஈமச்சடங்குகள் முடிந்தது என்ற செய்தி வருகிறது.

இதைப் படித்து முடிப்பதற்குள் நிகழ்ச்சி நிரலில் மாற்றமில்லை என்று பிரதமர் தேசப் பணிக்கு கிளம்பி விட்டதை செய்தி சொன்னது.

என்னைய்யா இது? யாரிவர் ? யாரு பெத்த புள்ளையோ என்று சொல்லி அண்ணாந்து நிற்குமுன் , அதோ அந்த புண்ணியவதி, சற்று முன்புதான் அக்னிக்கு தனது உடலை ஈந்து விட்டுச் சென்றாளே, அவளது தனயன் தானே இவன் என்றிட ஆச்சரியப்படத் தோன்றுதில்லையா? இந்திய அரசியல் உலகில் இது முதல் முறை. கர்மவீரரின் வாழ்வை கண்டு தரிசிக்கும் வாய்ப்பு.

தாய்க்கு மகனாய் ஆற்றவேண்டிய கடமைகளையும் செவ்வனே செய்திட்டு அடுத்த மணிகளிலேயே தாய்நாட்டுக்குத் தன் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சிகளில் தனது தனிப்பட்ட துயரம் நாட்டுப் பணிகளில் ஒரு சிறிதும் தென்படாமல் பார்த்துக்கொண்டது அவர் ஒரு கர்ம யோகி என்பதை நிரூபித்திட்டார். தவிர்க்கமுடியாத காரணத்தால் நேரில் இந்த விழாவில் வர இயலாது போனதிற்கு மன்னிப்பு கோரிவிட்டு தனது தலைமையுரையை சற்றும் பிசகாமல் கொடுத்திட்டதை தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினைக் கண்டவர் நெகிழ்ந்திடுவர்.

தனது தாயினைப்பற்றி இதயப்பூர்வமான குறிப்பாய், பிரதமர், ”ஒரு துறவியின் பயணம், ஒரு தன்னலமற்ற கர்மயோகியின் சின்னம் மற்றும் சனாதன தர்ம வழி மதிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை எனது தாயிடம் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்" என்று கூறிய அவர்,”ஒரு முழுமைபெற்ற நூற்றாண்டு வாழ்க்கை கடவுளின் காலடியில் உள்ளது' என்று அம்மாவுக்கு அஞ்சலி கூறுகிறார்.

மறைந்த ஹீராபென் எப்போதும் சொல்வது ,”புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், வாழ்க்கையைத் தூய்மையுடன் வாழுங்கள்” பிரதமர் தனது அடுத்த ட்வீட்டில்.

மறைந்தவரின் குடும்பத்தார்.” இக்கட்டான இந்நேரத்தில் அனைவருக்கும் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். பிரிந்த ஆன்மாவை உங்களின் எண்ணங்களில் வைத்திருக்கவும், மேலும் அவரவர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தத்தம் பணி அட்டவணை மற்றும் அர்ப்பணிப்புகளை அன்றாட பணிகளை, தொடரவும் என்பதே எங்களின் பணிவான வேண்டுகோள். அதுவே ஹீராபாவுக்கு ஒரு பொருத்தமான அஞ்சலியாகவும் இருக்கும்" என்று தெரிவிக்கின்றனர்.

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே.

ஒரு தூய்மையான தலைவனை எனது பாரததேசத்திற்கு அர்ப்பணித்த அன்னையே உனது ஆத்மாவுக்கு சத்கதி கிடைத்திட படைத்தவனை ப்ரார்த்திக்கிறேன்.

சமீபத்தில் தனது தாயாரின் பிறந்த நாளில் மோடி கலந்து கொண்ட போது....

20221130155955876.jpg

20221130160027908.jpg

20221130160059378.jpg

20221130160125904.jpg

20221130160151451.jpg

ஒரு முறை தனது தாயாரை பிரதமர் தனது பிரதமரில்லத்திற்கு அழைத்துச்சென்ற போது

20221130161023661.jpg

இந்த இடத்தில் ஒப்பிடக் கூடாது. இதுவே ஒரு சின்ன குட்டி அரசியல் தலைவர் வீட்டில் நடந்திருந்தால் கூட அதை ஒரு பெரிய நிகழ்வாக நடத்தி அனைத்து வி.ஐ.பி.க்களையும் வரவழைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையை சலனப்படுத்தியிருப்பார்கள் நம்மூர் அரசியல்வாதிகள்.

இது ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பு. எனக்குத் தெரிந்த சில ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் இதே போல தங்கள் தாயின் மரணத்தைக் கூட ஒரு நிகழ்வாக கடமையாக கடந்து சென்றதை அறிவேன்.

ஒரு சமயம் கோபம் கூட வந்தது. உலக தலைவன் ஒருவனின் அன்னையை இப்படி அவசர அவசரமாக வழியனுப்ப வேண்டிய அவசியம் என்ன ?? ஆறஅமர அவருக்கு ஒரு வழியனுப்பு அமைத்திருந்தால், அதன் மூலம் ஹீராபாவின் அறிய வாழ்க்கை தெரிய வந்திருக்குமல்லவா ?? அது மேலும் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாமே .......

மாட்டார் மோடி. ஏனெனில் அவர் ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பு.

ஒரு பரிபூரண வாழ்வின் மறுபொருள் ஹீரா பென்.