1.தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயர்?
நான் அகதா கிறிஸ்டியின் விசிறி. அனேகமாக அவருடைய எல்லா புத்தகங்களையும் கல்லூரி வயதிலேயே படித்து விட்டேன். இருந்தாலும், இப்போது மீண்டும் இரண்டாம் முறையாக அவருடைய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கொலையாளி யார் என்பது எனக்கு மறந்து விட்டதால், அதே திரில் இப்போதும் படிக்கும் போதும் இருக்கிறது.அகதாவின் ஜீனியஸ் என்னவென்றால், நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் கொலையாளியை ஊகிக்க முடியாது.
2.ராஜீவ் கொலையாளிகளில் உங்களைக் கவர்ந்தவர் யார்?( என்ன செய்வது நிலைமை இப்படி ஆகிவிட்டது)
நல்ல கேள்வி ஒன்றைக் கேட்டுவிட்டு ,உடனே இப்படி ஒரு மோசமான கேள்வியையும் கேட்கிறீர்களே? வருத்தமாக இருக்கிறது!.
3. உங்களை கட்டாய மதமாற்றம் செய்ய வந்தால் என்ன செய்வீர்கள்?
நான் பிறவியில் இந்து. எனக்கு என்று ஒரு மதத் தலைவரோ, என்னுடைய இந்து மதத்தை தோற்றுவித்தவரோ கிடையாது.இந்து மதம் அவ்வளவு லகுவானது. எனக்கு எந்த கட்டுப்பாடும் அது விளைவிக்கவில்லை. நான் இந்துவாகப் பிறந்தது என் அதிர்ஷ்டம். அப்படி இருக்க நான் மதம் மாற ஒப்புக்கொள்வேனா? ஆனால் கத்தி முனையில் என்றால் மாறுவேன். 'டெம்பரவரியாக!' இதற்காக நான் உயிர் விட தயாரில்லை!அதே சமயம் இஸ்லாமிய, கிறித்துவ, புத்த மதங்களில் பல விஷயங்கள் எனக்கு பிடிக்கும்!
4. அமீர்கான் நடிப்பதை நிறுத்துவது யாருக்கு பெரிய பாதிப்பு? (அவருக்கு என்று சொல்லக்கூடாது!)
அமீர்கான் அப்படி ஒரு சிறந்த நடிகர் ஒன்றும் இல்லை .ஆகவே யாருக்கும் பாதிப்பு இல்லை. ஏனெனில் திரைத்துறையில் அவர் இல்லாமல் இருக்க மாட்டார்.ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக செயல்படலாம் இல்லையா?!.
5. யுகப் புரட்சி என்றவுடன் உங்களுக்கு தோன்றுவது எது?
"செல்ஃபோன்" தான்!!.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload