சரண்யா மாதிரி ...
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா நடிகர் பிரபுதேவா படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறார். தற்போது அந்த படங்களை பிரபுதேவா வலைதளத்தில் பகிர்ந்து புதியதாக ஒரு அம்மா நடிகை என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் நிரந்தர அம்மா கேரக்டர் சரண்யா பொன்வண்ணன் தான் அவர் உணர்ச்சிபூர்வமாக நடிப்பார். நகைச்சுவையாகவும் நடிப்பார் புதுவரவு சுசித்ரா எப்படி என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும் தொடர்ந்து சினிமாவா இல்லை சின்ன திரையா.
சர்ச்சையில் சிக்கிய ரன்வீர்சிங்
நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் தந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மும்பையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் பெண்கள் உணர்வை ரன்வீர்சிங் அவமதித்து விட்டார் என்று போலீசில் புகார் தந்து இருக்கிறது. சில சமூக இயக்கங்கள் ரன்வீர் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. இதன் நடுவே தொண்டு நிறுவனம் ஒன்று பாவம் ரன்வீர் சிங் ஆடையின்றி கஷ்டப்படுகிறார் அவருக்காக பழைய துணிகளை சேகரித்து வருகிறோம் விரைவில் அவருக்கு அனுப்பயிருக்கிறோம் என்று சொல்லி வருகிறது ரன்வீர் சிங் மனைவி தீபிகா படுகோனே இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிப்பது தனிக்கதை .இதன் நடுவே தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் தனது நிர்வாண படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். இதில் எந்த ஆபாசம் இல்லை என்று பேட்டி வேறு தருகிறார் விஷ்ணுவிஷால்.
ரஜினியிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் தி லெஜன்ட் என்ற பிரம்மாண்டமான படத்தை தயாரித்து நடித்து வெளியிட்டிருக்கிறார். சமீபத்திய நிருபர்கள் சந்திப்பில் ஒரு நிருபர் இந்த வயதில் நடிக்க வந்தது ஏன் என்று கேட்க இதே கேள்வியை என்னை விட வயதான ரஜனி, கமல், சரத்குமார் ஆகியோரை சந்தித்து கேட்டு இருக்கிறீர்களா என்று எதிர்கேள்வி கேட்டார் சரவணன். கூடவே சினிமா என்பது என் கனவு அந்த கனவை நினைவாக்க வியாபாரம் மூலம் பணம் சேர்த்தேன் அந்தப் பணம் வந்ததும் நடிக்க வந்தேன் இதில் என்ன தவறு என்று கேட்டார்.
கேஜிஎஃப் விக்ரம் மாதிரி
பேயை வைத்து யாமிருக்க பயமேன் என்று நகைச்சுவைப் படத்தை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கும் படம் காட்டேரி. இந்தப்படத்தில் வைபவ் கருணாகரன் வரலட்சுமி சரத்குமார் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் இந்தப் படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகிறது. கே ஜி எஃப் விக்ரம் மாதிரி இந்த படமும் ரசிகர்களை திரையரங்குக்கு வர செய்யும் என்று பெருமையாக சொல்லி இருக்கிறார் இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்திருக்கிறது.
இயக்குனர் வாங்கிய ஆடி கார்
இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் பாடகர் என பல அவதார திறமைசாலி அருண்ராஜா காமராஜ். இவர் சமீபத்தில் ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியவர். தற்போது அமெரிக்க மாப்பிள்ளை என்ற வெப்தொடரை இயக்கி வருகிறார். அருண்ராஜா காமராஜ் இப்போது ஆடி கார் வாங்கி இருக்கிறார். இந்த கார் முன்பு தனது தாயாருடன் நின்றபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தான் ஆடி கார் வாங்கியதை பெருமையாக சொல்லி இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் குவிகிறது.
Leave a comment
Upload