உக்கிரைன் –ரஷ்யா போர் தொடங்கி கிட்டதட்ட 100 வது நாளை நெருங்கிவிட்டது. உக்கிரைன் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகளின் குண்டு மழை தொடர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகமாகி கட்டிடங்கள் தரைமட்டமாகி விட்டது.
நன்றி : தினமணி
உக்கிரைன் போர் அவ்வளவு சீக்கிரம் முடியும் போல் தெரியவில்லை என்று உலக நாடுகள் கவலை தெரிவிக்கிறது, இதுவரை 40 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள் போரில் காயம் அடைந்துள்ளனர். 15 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளனர் என்று மேற்கத்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால் நடக்கும் போரில் ரஷ்ய படைகளின் தாக்குதலால் தனது நாட்டை சார்ந்தாவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 100 பேர் இறக்கின்றனர் என்கிறார் உக்கிரைன் அதிபர் ஜெலன்ச்கி.
அமெரிக்க தயாரிப்பான MQ-1C Gray Eagle drones ஆளில்லா டிரோன் முலம் எட்டு ஹெலி பயர் ஏவுகணை செலுத்தும் நவீன ஆயுதங்களை உக்கிரைன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் முலம் உக்கிரைன் நாட்டிற்கு அமெரிக்க தனது ஆயுதங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என நம்பதகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
போலந்து நாடு தனது பங்கிற்கு நவீன ரக பீரங்கிகளை உக்கிரைன் நாட்டிற்கு வழங்கி வருகிறது. ஆனால் ரஷ்ய ராணுவத்தினர் உக்கிரைன் வரும் தளவாட பொருட்களை வான்வழி தாக்குதல் முலம் அழித்து வருகிறது. உக்கிரைன் போர் ஆயுதம் விற்கும் சந்தையாக மாறி வருகிறது என சர்வதேச போர் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்தரங்கம் பற்றி பரபரப்பான செய்திகள் மீடியாவில் வலம் வருகிறது. 1983 வருடத்தில் ரஷ்ய அதிபர் தனது மனைவி லுட்மீளா ஷேகர்பினிவா என்பவரை மணந்து இரண்டு குழந்தைகள் பிறந்தது.
ரஷ்ய அதிபர் மனைவி புடின் தன் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தாலும் அவரது நடவடிக்கைகள் வித்தியசமாக இருந்ததை அவரது மனைவி உணர தொடங்கினார்.
2000 ஆண்டு ஒலிம்பிக் நடைபெற்றது,அதில் ஏலினா என்ற ரஷ்ய இளம் வீரங்கானை ஜிம்னாஸ்டிக் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து நான்காண்டுகள் கழித்து ஏதேன்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய சார்பாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். ரஷ்ய முழவதும் இளம் வீராங்கணை படுபிரபலம் ஆனார். அதே ஆண்டு ஜிம்னாஸ்டிக் வீராங்கணை ஏலினா ,ரஷ்யாவின் மேக்ஸிம் என்ற பத்திரிக்கையில் நிர்வாண படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிரபலமானார்.ஏலினா செக்ஸ் உணர்வு நிறைந்தவள் , அவரை நான் படப்பிடிப்பில் வற்புறுத்தவேண்டிய அவசியமே ஏற்படவில்லை அவ்வளவு அழகாக படு செக்ஸியாக போஸ்களை கொடுத்தார் என இவரை போட்டோ ஷுட் எடுத்த புகைப்பட கலைஞர் மிகைல் கொரோலோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
புடின் தன்னை விட 31 வயது குறைவான இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கணை ஏலினா மீது தீராத காதல் கொண்டார். தனது முதல் மனைவி இதற்கு தடையாக இருக்கிறார் என்று 2014 ஆண்டு தன் முதல் மனைவியிடமிருந்து பிரிந்து விவகாரத்து பெற்றுக்கொண்டார். இதுவரை புடின் வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருந்தாலும் அவரது புதிய காதல் வெளிச்சத்திற்கு வர தொடங்கியது. அதனை ரஷ்ய உளவு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் உளவு பிரிவு அதிகாரி புடின் – ஏலினா காதல் விவகாரத்தை கசியவிட்டார்.
ஏலினாவை புதின் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற அரசல் புரசலாக ரஷ்ய அதிபர் மாளிகையில் பேச்சு கசிய தொடங்கியது. அப்போது ஏலினாவுடன் புடினின் நம்பிக்கைக்குரிய இரண்டு நண்பர்களுடன் செக் தலைநகர் பிராகாவிலிருந்து தெற்கு ரஷ்ய நகரமான சோச்சிக்கு விமானத்தில் பறந்து சென்றதாக தகவல் வெளியானது.
ஏலினா –புடின் உறவின் முலம் 2012 ஆண்டில் பெண் குழந்தை முதலில் பிறந்தது என்றும் அதன்பின் 2015 மற்றொரு குழந்தை பிறந்தது என்றும் தி நியூயார்க போஸ்ட் பரபரப்பு செய்தி வெளியிட்டது. இதனை ஏலினா மறுத்தார்.
ஏலினா தனது 30 வது பிறந்தநாளில் ரஷ்ய தொலைகாட்சி நடத்தும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் அப்போது தனக்கும் புடினுக்கு உள்ள உறவு குறித்து பட்டவர்த்தனமான தகவலை வெளிப்படுத்தி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
ரஷ்ய அதிபர் கிரம்ப்ளின் மாளிகையின் முக்கிய இடங்களில் ஏலினா துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வலம் வந்ததை ரஷ்ய பத்திரிக்கைகள் சுட்டி காட்டின.ரஷ்ய அதிபரின் மனைவிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏலினா விற்கு செய்யப்பட்டு இருந்ததை ரஷ்ய உளவு துறையினரும் அப்போது உறுதிபடுத்தினர்.
ஏலினா தற்போது புடின் உடன் உறவில் இருந்தாலும் தற்போது அவரது ஸ்வீட்சர்லாந்து நாட்டில் தனது குழதைகளுடன் தங்கி இருப்பதாக ரஷ்ய ராணுவ உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி மேற்கத்திய நாடு உளவு அமைப்புகள் தெரிவிக்கிறது.
2018 ஆண்டிற்கு பிறகு ஏலினாவை ரஷ்ய நாட்டுமக்கள் பார்க்கவில்லை .அதன்பின் ஏலினாவிற்கு இரட்டை குழந்தைகள் புடின் முலம் பிறந்தது என்ற வதந்தி ரஷ்ய முழவதும் முக்கிய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.
என்னுடன் உள்ள உறவினை பற்றிய செய்திகளை ஏலினா மறுக்க தவறிவிட்டார்.ஒரு நாள் எனக்கும் ஏலினாவிற்கும் இடையே பரப்படும் கிசுகிசுக்கள் அமைதியாகி விடும் என்று நான் நம்புகிறேன் என்று புடின் கூலாக செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இப்போது உக்கிரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து , கிட்டதட்ட உக்கிரைன் நாடு ரஷ்யாவின் குண்டுமழையில் தரைமட்டமாகி விட்டது. இது போன்ற காதல் கதைகளை மேற்கத்திய நாடுகள் பரப்பி புடின் மனநிலையினை குலைக்க சதி நடக்கிறது என்று ரஷ்ய ராணுவத்தினர் கருத்தாக உள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் மிகவும் பலவீனமாக நடக்க முடியாமல் ஊன்று கோலுடன் நடந்து வருகிறார். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ரஷ்ய அதிபர் கண்பார்வை முழவதுமாக இழந்துவிடுவார் என்றும் தற்போது ஜிம்னாஸ்டிக் வீராங்கணை ஏலினாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பிறந்துள்ளது என்ற செய்திகள் ரெக்கை கட்டி பறக்கிறது.
ரஷ்ய அதிபர் தன் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியிடும் வரை இதுப்போன்ற கிசுகிசுக்களுக்கும் பஞ்சமிருக்காது .!
கலவர பூமியில் என்ன கிளுகிளுப்போ !!
Leave a comment
Upload