தொடர்கள்
அழகு
" மலர்களிலே ஆராதனை " -ஸ்வேதா அப்புதாஸ்.

ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் நடை பெரும் வருடாந்திர மலர் காட்சி உலக பிரசித்தி பெற்றது .

20220426083251901.jpg
மாநில ஆளுனர் அல்லது முதலமைச்சர் தான் இந்த சிறப்பு மலர் காட்சியை துவக்கி வைப்பது மற்றும் பரிசுகள் வழங்குவது .
கடந்த இரண்டு வருடமாக கொரோனவால் மலர் காட்சி நடக்கவில்லை .
இந்த வருடம் உலகமே மலர் காட்சியை திரும்பி பார்க்கவைத்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தான்.

20220426083936873.jpg
மலர்க்காட்சி கார்டனில் நடந்தாலும் நீலகிரி வாசிகளுக்கு தங்களின் வீட்டில் மலர் காட்சி நடப்பது போல தான் அவர்களின் சொந்த கார்டன் .

20220426084139921.jpg
தோட்டக்கலை துறை அதிகாரிகள் வீடுகளில் தயாரித்து பராமரிக்கும் காட்டேஜ் கார்டன்களை நேரில் விசிட் செய்து சிறந்த வீட்டு கார்டன்களுக்கு பரிசுகள் அறிவித்து மலர்க்கட்சி முடிவு நாளில் பரிசுகளை வழங்கும் ஒரு சிறந்த வழக்கத்தை கையாண்டு வருவதை பிரிட்டிஷ் காலத்தில் இருந்து ஊட்டி சந்தித்து வருகிறது .

20220426084232112.jpg
பெரும்பாலும் பெரிய இல்லங்களில் ஒரு கார்ட்னர் தான் பூக்களை பூக்க செய்யும் சிறந்த பணியை செய்து வருகிறார் . தமிழக மளிகை .பெரிய ஹோட்டல்கள் வெலிங்டன் ராணுவ கல்லூரி பூங்கா என்று அனைத்திலும் பணிபுரியும் தோட்டக்காரர்கள் தான் அழகிய மலர் பூங்காவை உருவாக்கி நாற்று நட்டு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து ஒரு பெஸ்ட் கார்டனாக உருவாக காரணகர்த்தா . இவர்களின் அயராத உழைப்பு தான் சிறந்த பூங்கா என்ற பரிசை பெற்று தருகிறது . இந்த பரிசை ஆளுநர் கரத்தால் பெறுவதை பெருமையாக கருதுபவர்கள் ஏராளம் .

20220426084548710.jpg
ஊட்டி , குன்னூர் , கோத்தகிரி கூடலூர் பகுதியில் வீடுகளில் அழகிய பூங்காக்களை பார்க்கமுடியும் அதில் பூத்து குலுங்கும் மலர்களின் அழகோ அழகு தான் .
ஊட்டி லவ் டேல் பகுதியில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற வீடு அந்த வீட்டின் கேட்டை திறந்தாலே மலர் கண்காட்சி தான் .அவ்வளவு அழகாக பூத்து குலுங்கும் வித்தியாசமான மலர்கள் .

20220426084700189.jpg
இந்த வீட்டிற்கு சொந்தமான விக்டர் பிரபுராஜ் தான் அந்த அழகிய கார்டனை பராமரித்து வருகிறார் . இவருடைய கார்டனில் மேரி கோல்ட் , பேன்சி பேன்சி , பெட்டுனியாஸ், டேலியா , ரோஜாக்கள் ஜெரோனியா என்று ஏகப்பட்ட மலர்

20220426085137660.jpg

செடிகள் இவரின் கார்டனில் பூத்து குலுங்குகின்றன . அழகிய பூல் தரை வேறு இவை அனைத்தையும் தனி கார்ட்னராக விக்டர் பிரபுராஜ் பராமரிப்பது சிறப்பான ஒன்று இந்த வருடம் ஊட்டி மலர் காட்சியில் முதல் மற்றும் இரண்டு பரிசுகள் இவருக்கு கிடைத்தது .

20220426085305357.jpg

விக்டர் பிரபுராஜை அவரின் இல்லத்தில் சந்தித்தோம் ,

20220426085509280.jpg

" சிறு வயதில் இருந்தே எனக்கு பூக்கள் மேல் கொள்ளை ஆசை நாங்கள் அடிக்கடி ஊட்டி பொட்டானிக்கல் கார்டனுக்கு செல்லுவது வழக்கம் அங்கு உள்ள மலர்களை பார்க்கும் போது ஏன்? நம் வீட்டு தோட்டத்திலும் மலர்கள் பூத்து குலுங்க வேண்டும் என்ற ஆசையின் பரிணாமம் தான் எங்க வீட்டு கார்டன் .


தினமும் காலை ஐந்து முப்பது மணிக்கு எழுந்து என் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது தான் என் முதல் வேலை... நான் பள்ளி படிக்கும் போதே பூச்சட்டிகளில் நிறைய பூ நாற்று நட்டு அது பூப்பதை பார்க்கும் போது பெரிய அளவில் வீட்டு கார்டன் அமைக்கும் எண்ணம் வந்து ஊட்டி அரசு கல்லுரியில் படிக்கும் போது துவங்கின வீட்டு தோட்ட கார்ட்னர் வேலை நான் சர்வே துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னும் தொடர்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள் . என் வீட்டு தோட்டத்தின் பூக்களை கேட்டு பாருங்கள் என் கார்டன் வேலையை பற்றி எடுத்து சொல்லும் " என்று பூரித்து சிரிக்கிறார் .

20220426085939714.jpg
கடந்த 124 வது மலர்க்காட்சியில் முதல் இரண்டு பரிசுகளை பெற்ற விக்டர் அந்த பரிசு கோப்பையை எடுத்து வந்து தன் பூ தோட்டத்தில் பூத்து குலுங்கும் மலர்களின் நடுவே வைத்து ஆராதித்துள்ளார் .
அவர் மேலும் கூறும் போது இந்த வருடம் நான் பெரும் பரிசு 15 ஆவது முறை முன்னாள் முதல்வர் எம் .ஜி.ஆரிடம் பரிசு பெற்றதை இன்னும் மறக்கமுடியவில்லை . தமிழகத்தின் எல்லா ஆளுநர்களிடம் நான் பரிசு பெற்றுள்ளேன் . 2000 வருடம் நீலகிரி தேயிலை பிரச்சனை சமையத்தில் மலர் காட்சி நடக்கவில்லை , பின் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்றால் நடக்கவில்லை . அதே சமயம் என் வீட்டு தோட்டத்தில் மலர்கள் பூத்து குலுங்கின அவைகளுக்கு நானே பரிசுகளை கொடுத்தேன் .

20220426090239587.jpg
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் என் கார்டனை ரெடி செய்ய ஆரம்பித்தேன் . மலர்க்காட்சிக்கு காட்டேஜ் கார்டன் என்ட்ரியில் பதிவு செய்ய தோட்டக்கலை அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து கார்டனை பார்வையிட்டு பூக்களை ரசித்து விட்டு சென்றனர் .

20220426090511431.jpg

எனக்கு முதல் இரண்டு பரிசு கிடைத்தது .என் பூக்களும் பூரித்தது நானும் பூரித்து போயுள்ளேன் என் சொந்த முயற்ச்சி தான் . என் மலர்களை பார்க்கும் போது நான் பணி ஓய்வு பெற்றவன் என்பதை மறந்து விட்டேன் என் மலர்களால் நான் இளமையாக இருக்கிறேன் .

20220426093839351.jpg

என் வீட்டில் 100 பூச்சட்டிகள் உள்ளன அனைத்திலும் வித வித மான மலர்கள் பூத்து சிரிக்கின்றன . என்னிடம் உள்ள லில்லி மலர்களுக்கு என்னை பார்த்தால் அப்படியொரு கொண்டாட்டம் " என்கிறார் விக்டர் .20220426090627126.jpg
முதல்வர் ஸ்டாலின் கரத்தால் பரிசு பெற காத்திருந்தேன் அது முடியாமல் போனது ஒரு பெரிய ஏமாற்றம் எனக்கு மட்டுமல்ல என் அழகிய மலர்களுக்கும் தான் .

20220426095021792.jpg

வருடம் முழுவதும் மலர்களை பராமரிக்கும் விக்டர் நிறைய தோட்ட வேலையை கற்று கொண்டுள்ளார் . பூச்செடிகளுக்கு எரு போடுவது களையெடுப்பது, அதற்கு இயற்கை உரம் என்று தினமும் இதே சிந்தனை தான் . தற்போது ஊட்டியில் அதிக மழை கொட்டியதால் இவரின் மலர்களும் அழுகி விட்டதாம் . ஜூலை மாதத்தில் இருந்து இரண்டாவது சீசனுக்கு ரெடியாகும் விக்டர் அதற்குள் கொல்கொத்தாவில் உள்ள தன் மகன் வீட்டிற்க்கு சென்று திரும்பி விடுவாராம் .

20220426094551834.jpg

ஹாலந்து நாட்டில் வளரும் டுலிப் மலர்களை தன் கார்டனில் பூக்க செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் ஊட்டி சீதோஷ்னநிலைக்கு அவை வளருவது இல்லை என்ற வருத்தம் இவருக்கு உண்டு .
அடுத்து தன் வீட்டு பூங்காவில் ஆர்டிக் மலர்களும் காக்டஸ் செடிகளை வளர்க்கும் அதிதீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளார் விக்டர் .
தினமும் விக்டருக்கு மலர்களிலே ஆராதனை தான் .