“அறைஞான்கயிறு” - வெ. சுப்பிரமணியன்
நெஞ்சில் நிற்கும், யதார்த்தமான கதை. ஏழ்மையும் நேர்மையும் எதிராக பயணிப்பது இல்லை என்பதை அழுத்தமாக பதிவிட்டுள்ளமை பாராட்டுக்குரியது. அதுசரி, கதைக்கான படம் வெகுஜோர்.
ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்.
விகடகவியார் வழங்கும் 50 தேர்தல் தகவல்கள்!
விகடகவியாரின் பல்வேறு கட்சிகளின் 50 அரசியல் தகவல்களும் பலே... பலே... ஜோருதான்! இதில் தேர்தலுக்கு பிறகு நடக்கும் பின்னணி தகவல்கள் செம கிரேட்! எல்லாம் மே 2-ல் வெட்ட வெளிச்சமாகிவிடும்.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
வலையங்கம்
வலையங்கத்தில் நீங்கள் குறிப்பிட்ட'தேவை கடுமையான சட்டம்' கட்டுரையில் அனைத்து வரிகளுமே உண்மை. ஆனால், இந்த பணப் பரிமாற்றத்தை தடுக்க வேண்டிய உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உடந்தையாக உள்ளதே? அதனால் கடுமையான சட்டம் வரும்... ஆனா வராது!
வளையாபதி, சேலம்
ஐந்தைந்தாய்… - கே.ராஜலட்சுமி.
கவிதை அருமையாய் படைத்தீர்...! நெஞ்சில் வேதனை துடித்தேன்... கண்ணில் நீரைத்தான் வடித்தேன்...! திருந்தாது இம்மக்கள் கூட்டம்... திருந்தவிடாது அரசியல்வாதி வட்டம்...! இன்னும் நாசமாய் போகும் இந்நாடு...! நாட்டுப்பற்றோடு இனி இங்கு யாரு...?
பாலகிருஷ்ணன், இந்தியா.
“அறைஞான்கயிறு” - வெ. சுப்பிரமணியன்
எதிர் பார்த்த முடிவு. ஆனாலும் நடை நன்றாக இருக்கிறது
தொலைந்த அடையாளங்கள்... - மரியா சிவானந்தம்
இந்த மாற்றங்கள் காலம் காலமாக எதொ ஒரு விதத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது பார்த்து ரசிக்கலாம், இன்னொரு மாற்றம் வரும் வரை!
Leave a comment
Upload