கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது... எந்த அண்ட்ராய்டு மொபைல் போனை, குழந்தைகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் உபாயயோகிக்கக் கூடாது என்று இருந்ததோ... அதே மொபைல் போனை கட்டாயம் உபாயயோகிக்கச் செய்து விட்டது கொரோனாவின் தாக்கம்.
எல்லா விஷயங்களிலும் ஆன் லைன் செயல்பாடு, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துவங்கி விட்டது.
தற்போது, எல்லா வகுப்புகளும் ஆன் லைனில் தான் நடந்து கொண்டிருக்கிறது... அதைத் தொடர்ந்து இசை பயிற்சியும் கூட ஆன் லைனில் துவங்கி விட்டது. முக்கியமாக மேற்கத்திய இசையான பியோனாவை பொறுத்தவரையில், ஒரு மாணவருக்கு நேரடியாக மட்டும்தான் அதனை சொல்லிக் கொடுக்க முடியும்... ஆன் லைன் வகுப்பு எல்லாம் அதற்கு ஒத்தே வாராது என்று தான் இந்த இசைக்கருவியை சொல்லிக் கொடுப்பவர்கள் இன்று வரையிலும் கூறி வருகிறார்கள்.
அதே வேளையில் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த எம்மி என்ற இசை ஆசிரியை, ஆன் லைனில் பியோனா கற்றுக் கொடுக்க முன் வந்துள்ளார். அதற்கான பிரத்தியேக விளம்பரத்தையும் ஆன் லைனில் கொடுத்துள்ளார்.
எம்மியை தொடர்பு கொண்டு பேசினோம்...
“வழக்கமாக பியோனா, கி போர்டு, வயலின் போன்ற இசைக் கருவிகளை கற்றுக்கொள்ள ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டி இருக்கும்... காரணம், அந்த இசைக் கருவிகளின் விலையும் அதிகம்... அதற்கான நோட்ஸ், வெளிநாட்டில் இருந்து தான் வரவேண்டும்... இந்த இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற கடினமாக உழைக்கவேண்டும். தேர்வுக்கு வெளிநாட்டில் இருந்து தான் எக்ஸாமினேர் வருவார்.... இதனால் ஒரு கிரேடு படிக்கவே நிறைய செலவு செய்து ஆகவேண்டிய காட்டயமும் உண்டு... இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கொரோனா தொற்றின் தாக்கம், இந்த மேற்கத்திய இசையையும் நிறுத்தி விட்டது என்று கூட சொல்லலாம்... இந்த கொரோனா காலத்தில் அடுத்து என்ன என்று யோசிக்க முடியாமல் அனைவரும் வீட்டினுள் முடங்கி திணறிக்கொண்டிருந்தோம்... இப்பொழுது தளர்வுகள் ஏற்பட்டிருந்தாலும், அது பாதுகாப்பானதா என்ற கேள்வி கூறி எழுந்துள்ளது. நம் நாட்டின் தலை நகர் டெல்லியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது கொரோனா... மீண்டும் ஒரு பெரிய லாக் டவுன் வரலாமோ என்று கூட தோன்றுகிறது..... இதை எல்லாம் மனதில் வைத்து தான், நான் நன்கு கற்று தேர்ச்சி பெற்ற பியோனா இசையை, ஆன் லைன் மூலம் வீட்டில் இசை ஆர்வத்துடன் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு பயன்படுத்த முடிவு செய்தேன். வீட்டுப் பெண்களுக்கும் பியோனா இசையை கற்றுக் கொடுக்கலாமே என்று உதித்து தான் Capriccio என்ற பியோனா இசை வகுப்பு...! அவர்கள் மனதிலும், வீட்டினுள்ளும் பொதிந்திருக்கிற இசைத் திறமையை உலகளவில் வெளியே கொண்டுவரும் முயற்சி இது!
பெண்கள்தான் இலக்கு என்றாலும் என் இசைப்பயிற்சி வகுப்புகளில் ஆண்களுக்கும் இடம் உண்டு.
ஆன் லைனில் எந்த தயக்கமும் இல்லாமல், நேருக்கு நேர் கற்றுக் கொள்ளும் இசை பயிற்சியை கற்றுக் கொடுக்க நான் ரெடி... நீங்க ரெடியா..? கட்டணம் எல்லாம் விரலுக்கு தகுந்தாற் போல்.... Capriccio என்றால் அழகிய இனிமையான இசை, விரல்களால் பேசக்கூடியது, சுலபமாக கற்றுக்கொள்ளக்கூடியது... இனிமையாகவும்.. எளிமையாகவும் ஆன் லைனில் பியோனா மற்றும் கீ போர்ட் இசையை கற்றுக் கொள்ள எல்லோரையும்..குறிப்பாக பெண்களைஅழைக்கிறேன்” என்று கூறும் எம்மி... தன் படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டார்...
“என் விரல்களும், குரலும் தான் இந்த இசையை கற்றுக் கொடுக்கப் போகிறது. இதில் எதற்காக என் படம்?” என்று கூலாகக் கூறுகிறார்.
பெண்களே... இந்த அரிய இசை வாய்ப்பினை மிக நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்!
Leave a comment
Upload