வாசி யோசி - வேங்கடகிருஷ்ணன்
வாசி, யோசி என்றதும் என்னவோ அறுக்கப் போகிறார்கள் என நினைத்தேன். ஆனால், நம்முடைய வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை ஒரு புத்தக விமர்சனம் மூலம் மிக அழகாக விளக்குகிறார் வேங்கடகிருஷ்ணன்.
செல்வராணி, கமுதி
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை படிக்க படிக்க இன்ட்ரஸ்ட் அதிகமாயிடுச்சு. அதாவது, நாங்களே அந்த கண்ணனாக மாறி வெண்ணெயை ருசித்தது போலிருந்தது.
பார்த்தசாரதி, மாயவரம்
இன்றைய தினம் 17-09-2020
விகடகவியில் தினப் பலன், வாரப் பலன் மிக பயனுள்ள தகவல். எனினும், அதிகளவு ஜோதிட பலன்களை அறியும்போது திகட்டிவிடுமோ என்ற அச்ச உணர்வே மேலிடுகிறது.
விசாலாட்சி, கரூர்
70 வயது இளைஞர் மோடி ! - ராம்.
பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளன்று, அவரது 70 வகையான சிறப்புகளை பூங்கொத்தாக தொகுத்து வழங்கி ராம் அசத்திவிட்டார். வெரி இம்ப்ரசிவ்!
முருகானந்தம், திருவள்ளூர்
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
ஓய்வு பெற்ற எல்லோருக்கும் இந்த கஷ்டம் தான். ஒன்னு ஓய்வு வயதை 75 ஆக அதிகரிக்கணும். இல்லே, ஓய்வு பெற்றோரை சேர்த்து அரசியல் கட்சி ஆரம்பிச்சு அதகளம் பண்ணிடுங்க.
கோபாலகிருஷ்ணன், வந்தவாசி
காலமே போதி மரம் - 8 - என்.குமார்
கண்கள் கலங்கிவிட்டது சார் 😍😘
ராக்கி, ஈரோடு
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
To Mr. Aroor Sundarasekar Explained very charming about Tirumula's Thirumanthiram and its 9 tricks.
திவ்யா ஜி, நெமிலிச்சேரி
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Sir u have described about Tirmoolar and his tiru mandiram in a very nice way it is very useful for all to learn about his history that u have explained in nice manner once again tnq very much sir.
சாய்கீதா, சென்னை
தேடல்கள் முடிவதில்லை… - மாலா ரமேஷ்
தேடல்கள் முடிவதில்லை... உண்மைதான். நம்முடைய தேடல்கள் என்றும் முடிவதில்லை.
சுபத்ரா ரவிக்குமார், மாதவரம்
ஆன்மீக ஆசான்... - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
ஆன்மீக ஆசான் மகாபெரியவாளின் கருத்துகளை படிக்க படிக்க, இன்னும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம் என புரிந்து கொள்ள முடிந்தது.
ராஜேஸ்வரி சரவணன், சூளைமேடு
குக் வித் தேவி ... - ராம்
குலோப் ஜாமுன் பெயரை கேட்டதும் நாக்கு சப்பு கொட்டினேன். அடுத்து, நீங்க சொன்னபடி செஞ்சு வெச்சு, என் பேரண்ட்ஸை அசர வெச்சிட்டேன்ல!
ப்ரீத்தி சுந்தர், கலிபோர்னியா
நான் “ ஈ”…! – ஆர்.ராஜேஷ் கன்னா.
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதைதான், நான் 'ஈ'! இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.
தினேஷ், அம்பத்தூர்
அன்பு நெறி - பா.அய்யாசாமி
ஒரு மென்மையான காதலை வன்முறையாக மாற்றாமல், அன்பு நெறியுடன் கையாண்டு சுபமாக முடித்த விதம் ரியலி சூப்பர்!
பத்மினி பாலசந்தர், வியாசர்பாடி
மூன்று இரவுக்கு மேல்… - ஆர்னிகா நாசர்
மூன்று இரவுக்கு மேல் கதை படிக்க நன்றாக இருந்தது. ஆனால், ஒருவனை இகழ்ந்து பேசுபவர்களிடம் மீண்டும் உறவு கொண்டாடச் சொல்வதை மனம் ஏற்றுக் கொள்ளாது.
ரகோத்தமன், மயிலாடுதுறை
வலைக்கள்ளன். நெட்டில் சுட்டவை.
வலைகள்ளனில் வந்த அனைத்து செய்திகளும் ரசிக்கும்படியாக இருந்தன. ஒவ்வொரு நாட்டு செய்தியும் அதனதன் ஸ்டைலில் கூறியிருப்பது மிக சிறப்பு.
கண்மணி சதீஷ்குமார், வாலாஜா
வாவ் வாட்ஸப்!
விகடகவி வாட்ஸ் அப் படங்கள் நவரத்தினங்களாக அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் மிக சிறப்பாக, ரசிக்கும்படியாக உள்ளன. சூப்பர்ப்!
கௌஷிக், தீட்சிதா, பெங்களூர்
எம்எல்ஏக்களுக்கு டெஸ்ட்... - நமது நிருபர்
அதுசரி... சட்டசபைக்கு வர்றவங்களுக்கு கொரோனா டெஸ்ட் பண்றீங்க. ஆனா, ஒரு அமைச்சர் மாஸ்க் போடாம அலையறாரே... அவருக்கு டெஸ்ட், எச்சரிக்கை எல்லாம் கிடையாதா? ஆளுங்கட்சி ஆளுங்க கும்பலா மாஸ்க் அணியாம, கும்பலா நின்னு பெண் அமைச்சர் முன்னால அடிச்சுக்கறாங்களே... இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா?
பார்த்திபன், வேலூர்
கலப்பில்லாமல் தமிழ் பேச முடியுமா? - மேப்ஸ்
இன்றைய இளைய தலைமுறையினர், ஆங்கிலம் கலந்த தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர். ஏனெனில், அவர்களின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்களுக்கே தூய தமிழ் வார்த்தைகள் தெரியாது. அவர்கள் தமிழ் தவிர மற்ற மொழிகளில் பேசுவதையே பெருமையாக நினைக்கின்றனர். சுத்த தமிழ் பேசுகிறவனை பைத்தியமாக கருதுவர்.
செல்வராணி, பொழிச்சலூர்
"செந்நாய்களின் மர்ம இறப்பு..” - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ! - ஸ்வேதா அப்புதாஸ்..
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் சரணாலயத்தில் 4 செந்நாய்கள் இறந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற அரிய வனவிலங்கு, உயிரினங்களை காப்பதில் மாநில வனத்துறை உரிய அக்கறை காட்டாதா? இனியாவது உயிர்ப்பலியை தடுக்கலாமே!
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
திருமூலரின் திருமந்திரம் குறித்தும், அதன் 9 தந்திரங்கள் குறித்து சுந்தரசேகர் மிக அழகாக விளக்கியுள்ளார். மிக சிறப்பு.
பிரதிபா சுந்தரராஜன், திருச்சி
5000 பேரை கொரோனாவில் இருந்து மீட்ட சித்த மருத்துவர் பேட்டி! - ஆர்.ராஜேஷ் கன்னா.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் வீரபாபு மிகவும் பாராட்டுக்கு உரியவர். அவரது சேவைக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகள் செய்தால், இன்னும் பலர் குணமடைவர்.
கலா கார்த்திக், அயனம்பாக்கம்
வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்
எத்தனை விவரங்கள்... இத்தனை அழகாக உங்களைப் போல் யாராலும் தர முடியாது...ஒற்றுமை இல்லாமல் தன் சுய கௌரவத்திற்காக வாழ்ந்த நம் மன்னர்களின் முகத்திரையை அழகாக காட்டிவிட்டீர்கள்... இன்று மன்னர்கள் மாறி நம் அரசியல்வாதிகள் அதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்... வேதனை...
பாலகிருஷ்ணன்
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
திருமூலரின் திருமந்திர விளக்கம் தெளிவாகவும், சிறுவயதினர் கூட புரியும்படி கொடுத்துள்ள ஆரூர் சுந்தரசேகர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சவிதா, பெங்களூரு
அழ வைக்கறீங்களே சுதாங்கன் சார்!.... - சுபா வெங்கட்
திரு சுதாங்கன் மறைவு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது... பன்முக திறமை வாய்ந்த நல்ல பத்திரிகையாளர்... எந்த மேடையிலும், பேச்சு அரங்கத்திலும் எத்தனை அழகாக தண்மையாக தன் கருத்துக்களை சொல்லுவார்... இன்றைய ஊடகத்தில் இப்படிப்பட்ட நல்ல மனிதரை காண்பது அரிது... நம்ம விகடகவி குழுவிற்கு ஒரு பேரிழப்பு... ஆழ்ந்த அனுதாபங்கள்.... நல்ல ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்....
பாலகிருஷ்ணன்
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
திருமூலர் அருளிய திருமந்திரப் பாக்களின் தொகுப்புச் சாரத்தை கொடுத்து அவரின் வாழ்க்கைக் குறிப்புகள் கொடுத்த ஆசிரியருக்கு முதல் நன்றி...நம்மால் ஞானியர் போன்று பாவபுண்ணியங்களைக் கடக்க இயலா விட்டாலும், பாவங்கள் செய்வதையாவது தவிர்ப்போம். இயன்றவரையிலும் தான-தருமங்கள் செய்து, திருமந்திரம் போன்ற ஞானநூல்கள் காட்டும் அறவழியில் வாழ்வோம். அப்போது நம் மனவளமும் வாழ்க்கையும் சிறக்கும்.
எஸ். சாய்லக்ஷ்மி, சென்னை
வேற்று மொழிகளால் தமிழ் மொழி அழியுமா? - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
வேற்று மொழிகளால் நமது தமிழ் மொழிக்கு என்றும் ஆபத்தில்லை. அதற்கு பதிலாக, நம்ம ஆட்களே தமிழ் வார்த்தைகளை கடித்து குதறி பேசுவதும் எழுதுவதுமாக அரசியல் போர்வையில் சுற்றி திரிகிறார்களே... வேறு நபர் வேண்டுமா?
ரேணுகா ஹரிஹரன், விருகம்பாக்கம்
ராக தேவதைகள்... - மாயவரத்தான் சந்திரசேகரன்
சுத்த தன்யாசி ராகத்தை போல் இக்கட்டுரையும் அதற்குரிய திரையிசை பாடல்களும் இனிமை கூட்டின. தொடரட்டும், உமது ராக தர்பார் ஆலாபனை!
அமிர்தா வேலன், திருப்போரூர்
உலகை குலுக்கிய வழக்குகள்! – ஆர் .ராஜேஷ் கன்னா.
லண்டனில் 5 விலைமாது பெண்கள் தொடர் கொலைகளை படித்தபோது, எனது உடல் ஜிலீரிட்டது. இத்தகைய கொடூர குணமுள்ள ஒருவரை நினைத்துப் பார்க்கும்போதே மீதமுள்ள வாழ்க்கையை எப்படி கடக்கப் போகிறோம் என்ற அச்ச உணர்வு மேலிடுகிறது.
லஷ்மி பிரபா, சோளிங்கர்
ராக தேவதைகள்... - மாயவரத்தான் சந்திரசேகரன்
சபாஷ்! ஒவ்வொரு பாடலைப் பற்றியும் படிக்குபொழுது நீட்சியாக அவ்வந்த காலகட்டங்களின் நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே படித்தேன். மலரும் நினைவுகள்! மிக அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
ராஜேஷ் ஜெயராமன், ஹாங்காங்
அழ வைக்கறீங்களே சுதாங்கன் சார்!.... - சுபா வெங்கட்
The article shows his multifaceted characteristics. No wonder his friends will miss him much.My heartfelt condolences to the Team Vikatakavi.
சிஏ சுரேஷ், பாண்டிச்சேரி
வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்
டெல்லி என்றாலே எப்பவும் எல்லோருக்கும் கிரேஸ்தான்.அக்காலத்துல முகமது கோரி போன்ற இஸ்லாமிய மன்னர்கள் நம்மூர் இந்து புராதன கோயில்களின் செல்வங்களை கொள்ளையடித்து சென்றனர். இப்போ... நம்மூரூ அரசியல்வாதிங்க, செல்வாக்கு மிக்க விவிஐபிங்க கோயில் சொத்தை கொள்ளையடிச்சுட்டு இருக்காங்க. செம இன்ட்ரஸ்டிங்!
மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை
உள்ளதைச் சொல்வேன்! - அண்ணாதுரை கண்ணதாசன்
தனது மனதில் பட்டதை அப்படியே சொல்லி, பழைய புத்தகங்களில் சுட்ட கதைகள், இயக்குநராக முடியாத நிலை ஆகியவற்றை பட்டவர்த்தனமாக சொல்லி, உள்ளதை சொல்வேன் என்ற தலைப்பை சிறப்பித்திருக்கிறார் அண்ணாதுரை.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
கங்கணம் கட்டியிருக்கும் கங்கணா ரணாவத்! - ராம்
பொதுவாக நம்ம அரசியல்வாதிகளுக்கு சின்ன சின்ன விஷயங்களை ஊதி ஊதி பெரிசாக்குவதுதான் வேலையே. ஏன்னா, எல்லாத்திலயும் அவங்க சம்பந்தப்பட்டு இருக்காங்களே! அதுதான் கங்கணா விஷயத்திலும் நடந்திருக்கு. உத்தவ்வுக்கு இது தேவைதானா? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்திட்டாரே!
நடேசன் பால்ராஜ், பெங்களூர்
அழ வைக்கறீங்களே சுதாங்கன் சார்!.... - சுபா வெங்கட்
சுதாங்கன் குறித்து சுபா எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவருடன் பழகிய, அவரால் பட்டை தீட்டப்பட்டவர்களின் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தியது. அவரை போல் இன்னொருவரை இனி எங்கு காண்போம்? அவர் நினைவை போற்றி வணங்குவோம்.
மாலாஶ்ரீ, சென்னை
வாசகர் மெயில்
condolences on the sad demise of Mr Sudhangan ..RIP
எஸ். பார்கவன், அமெரிக்கா
வலையங்கம்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் இந்தளவு தடம் மாறி போனதற்கு மாநில துறை அதிகாரிகளின் அலட்சிய, எதிலும் பணம் சம்பாதிக்கும் போக்கே காரணம். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என புரட்சி தலைவர் கூறினார். அதிகாரிகள் திருந்தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.
உமாபதி, விழுப்புரம்
காலமே போதி மரம் - 10 - என்.குமார்
ஆகாயப் பவழமல்லி உதிர்ந்திருந்த பவழமல்லிகள் படத்தைப் பார்த்ததும் நினைவுகள் 25 ஆண்டுகள் பின்னோக்கிப் பறந்தது. ஆம் எங்கள் வீட்டு கேட் அருகே இந்த மரம் இருந்தது. தினமும் நானோ அம்மாவோ காலையில் கம்பளம் விரிக்கும் பூக்களை கால் படாமல் சேகரித்து, ஊசியில் நூல் கோத்து பவழக் காம்பில் உள் நுழைத்து மாலையாக்கி ஸ்வாமி படத்திற்கு அணிவிக்கத் தயார் செய்வது வழக்கம். இந்த பூக்கள் மட்டும் ஏனோ ஒரு மனவமைதியை ஏற்படுத்தும் - படங்களில் கூட. நர்மதா அக்கா பற்றிய உங்கள் விவரிப்புகள் அழகு. குமார் குமார பருவத்திலேயே நுட்பமாக கவனித்திருக்கிறீர்கள், நினைவில் வைத்திருக்கிறீர்கள். நர்மதையை மேற்கு நோக்கி ஓடுவதால் நதம் என்பார்கள். நர்மதா அக்காவும் அதனால் தான் மேற்கிலிருக்கும் மும்பைக்கு புலம் பெயர்ந்தார்களோ! பத்தில் கண்டதை முப்பதில் கேட்டிருக்கிறீர்கள். சொல்லாமல் கைக்கிளையாய் கடந்த காதல் கதைகளே அதிகமாயிருந்த காலமது. சிறு வயதில் கைப்பிடித்து அழைத்துப்போய் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய் சினேகத்துடனும் வாஞ்சையுடனும் பதில் சொன்ன அக்கா, இருபதாண்டுகள் கடந்ததும் ஒரே கேள்விக்கும் பதில் சொல்லத் தயங்கி இரயில் சினேகமாய் பிரிந்தது வருத்தம். நீங்கள் கேட்ட கேள்வி அவர் மனதில் அவராலேயே பலமுறை கேட்கப்பட்டிருக்கும். விடை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் காரணிகள் விளையாடுவதுண்டு. சரி எது? தவறு எது? தீர்மானிக்க நாம் யார்? விடையில்லா கேள்விகள் தடையில்லாமல் எப்போதும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும். மேகமே .. மேகமே...ஒரு காரணத்திற்காகத் தான் அவருக்கு பிடித்திருக்க வேண்டும்... பாவையின் ராகம் சோகங்களோ நீரலை போடும் கோலங்களோ..
முரளிகிருஷ்ணா, பெங்களூரு
காலமே போதி மரம் - 10 - என்.குமார்
பத்மா அக்கா, (பழைய நடிகை சந்திரகலா முகம் அவருக்கு) எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலைத் திருத்தமான கோலத்தால் தினமும் அலங்கரிப்பவர்.முன் பனிக்காலம் நழவிப் பின் பனிக்காலம் ஆரம்பிக்கும் காலை வேளைகளில் அடர் ஊதா நிற டிசம்பர் பூக்கள் வாங்க அவர் வீட்டிற்குப் போவோம். அவர் வீட்டில் ஒரு இளைஞனின் புகைப்படம் அதை நான் லக்ஷ்மணன் போலீஸ்காரர் வீட்டிலும் பார்த்திருக்கிறேன். பொன்னம்மா அக்கா அந்தக் கதையை சொன்னார், பத்மா அக்காவைத் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார் என்று. தவவுடை தரிக்காத துறவி போல் தோன்றினார் பத்மா அக்கா எனக்கு. நான் பழகாத பத்மா அக்காவின் வாழ்க்கை என் மனதில் என்றும் வியப்பு. உங்கள் கையைப் பிடித்து நடந்த நர்மதா அக்கா எவ்வளவு பாரத்தை அந்த புகைவண்டியில் தினமும் தன்னோடு சேர்த்து ஏற்றி இறக்கிக் கொண்டு இருந்தாரோ... எரியும் தூரிகை எழுதிச் சென்ற கவிதையைத் தேடும் இவரைப் போன்ற சிலருக்கு, சில ஆற்றும் நினைவுகளோடு வாழும் துணிவு சுலபமாக வருகிறது ஆனால் அதற்கு முன் போராடும் நம்பிக்கை வருவதில்லை.. பதிலிறுக்க முடியாத கேள்வியாய் மாறியது உங்கள் ஆகாயப் பவழமல்லி, மாற்றியது பதிலிறுக்க முயலாத காலம். எத்தனை முறை காலப்பயணம் செய்தாலும் பதிலின்றி திரும்பும் விநோத செல்கை. புனிதம் தாண்டிய பூக்களால் நிரவப்பட்ட போதிமர நிழலில் உலாவ விட்டீர்கள். நன்றி குமார்🙏
பவானி, பெங்களூரு
அழ வைக்கறீங்களே சுதாங்கன் சார்!.... - சுபா வெங்கட்
திரு. சுதாங்கன் சார் மறைவு அதிர்ச்சியையும், மிகவும் துயரத்தையும் தந்தது. இது விகடகவி குடும்பத்தினருக்கு பேரிழப்பாகும். அவருக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாம் அனைவரும் வேண்டிக் கொள்வோம். ஆரூர் சுந்தரசேகர்.
எஸ். சேகர், சேலையூர்
கங்கணம் கட்டியிருக்கும் கங்கணா ரணாவத்! - ராம்
செம கம்பேரிஸன். உண்மைதான். வேலியில் போற ஓணானை பனியன்ல உட்டுகிட்டாங்கன்னு உத்தவசேனைன்னு தோணுது. உக்காட் தியானா (கெளப்பிட்டம்ல)என்று கொக்கரித்தது சிலசேனையின் சாம்னா தினசரி. ஏனோ சாய்ங்காலமே, இதுக்கும் எங்குளுக்கும் ஒண்ணுமில்லைன்னு ஒரு சால்ஜாப்பு. கங்கணம் கட்டியாச்சு கங்கணா என்றே அடிச்சு சொல்லலாம். இடிக்கப்பட்ட இந்த எனது ஆபீஸிலேயே எனது பணி தொடரும். உனது சரிவு தொடங்கும்னு தொடர் சவால் விட்டாங்களே.. பத்தாயிரம் வாட்ஸ் ஷாக் அட்ச்சாப்ல இல்ல ஆயிறுச்சி நெலமை. இந்த கட்டுரையில் SWOT analysis மூலமாகவும் விளக்கியதற்கு கட்டுரையாளர் திரு. ஹாங்காங் ராமுக்கு ஒரு ஷொட்டு இப்ப புதுசா ஒரு கோஷம் கெளம்பியிருக்கே ஊர் ஃபுல்லா. நிதீஷ் பிஹார கௌரவம்ங்கறார். ஹிமாசல முதல்வரோ ஹிமாசலின் கௌரவம் என்று Y category செக்யூரிட்டி கொடுத்திருக்கிறார். அந்த வங்காளத்ல இந்திரா காங்கிரஸின் லோக்சபா தலைவர் அதிர் ரஞ்சன் தாஸோ ரிஹா சக்ரபர்த்திக்கு ஆதரவாக வங்காள கௌரவத்திற்கு வக்காலத்து வாங்குறார். பாரத கௌரவமே பெரிஸுன்னு இந்தியர்கள் நினைத்து வெளிப்படுத்துவது எப்போது.
கிருஷ்ணமூர்த்தி பாலசுப்ரமணியன்
தேடல்கள் முடிவதில்லை… - மாலா ரமேஷ்
மிகப்பெரிய தத்துவத்தை எளிமையாக சொல்லிவிட்டார். ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துப்பதிவு.
ராமநாதன், சென்னை
அன்பு நெறி - பா.அய்யாசாமி
அருமையாக காதல் கொண்ட இரு மனதை இனைய வைத்த அய்யாசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள். நல்ல தீர்வு.
சாவித்ரி நடராஜன்
தேடல்கள் முடிவதில்லை… - மாலா ரமேஷ்
Thedalgalukku mudivillai anal thevaiya enbadhai kavignar azhagaga vadivamaithillar. Arumai.
சூர்யா, சென்னை
Leave a comment
Upload