டாக்டர் காமராஜ்
நீண்ட காலமாகவே பாலியல் துறை சம்பந்தப்பட்ட விஷயங்கள் மேம்போக்காக இங்கே அலசப்படுகிறதே தவிர சற்று ஆழமாக, அறிவியல் பூர்வமாக கவனிக்கப்படுவது சற்று குறைவாகவே உள்ளது. சாதரண மனிதனுக்கு பிடித்தமான சுவாரஸ்யமான தீனியோடு பத்திரிக்கைகளும் சரி, சமூக வலைதளங்களும் சரி, நிறுத்திக்கொள்கின்றன. விகடகவி இந்த இடத்தில் மாறுபட்டு செக்ஸாலஜி தொடர்பான நியாயமான சந்தேகங்கள், கேள்விகள், நமது சமூகத்தில் காலம் காலமாக நிலவி வரும் கட்டுக்கதைகள் (Myth) போன்றவற்றுக்கு விடை காண முயல்கிறது. இந்த புதிய தொடரில் இடம் பெறும் பல வினாக்கள், நீங்கள் இளம் வயதிலிருந்து ‘கேட்டால் தப்பாக நினைப்பார்களோ’ என்று எண்ணி மனதிலேயே பூட்டி வைத்திருப்பவை. அல்லது போலி மருத்துவர்கள் நள்ளிரவில் ஊடகத்தில் உங்களுக்கு சொன்ன தவறான, கிளுகிளுப்பான தகவல்களை விடையாக நினைப்பவை.
இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு சரியான அதேசமயம் சுவைபட விடை காண்பதுதான் விகடகவியின் இந்த அரிய முயற்சி. பதில் தரப்போகிறவர் பாலியல் துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வரும் டாக்டர் T. காமராஜ். இன்று இத்துறை விஷயங்கள் பொதுமக்களிடம் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது என்றால் அதில் இவரின் பங்கு முக்கியமானது. அதற்கு சென்னை வடபழனியிலுள்ள அவரது மருத்துவமனையில் ததும்பி வழியும் கூட்டமே சாட்சி. பல சர்வதேச மருத்துவ அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார்.
பாலியலில் பல முன்னேறிய நாடுகளின் மருத்துவ சிகிச்சை முறையை உடனுக்குடன் தமிழகத்திற்கு கொண்டு வருகிறார்.
ஆக சரியான மனிதரிடம்தான் சரியான கேள்விகளை கேட்கப்போகிறோம்!
வரும் வாரங்களில் நீங்களும் உங்களது சந்தேகங்களை ‘விகடகவி’க்கு அனுப்பலாம். உங்கள் சார்பாக அவை கேட்கப்படும்.
https://vikatakavi.in/maruthuvam.php
டாக்டர் காமராஜின் பல பதில்கள் உங்களை சிந்திக்க வைக்கும். பல பிரமிக்க வைக்கும். சில திடுக்கிட வைக்கும். ஆனால் எல்லாமே நிரூபிக்கப்பட்ட உண்மைகள்!
என்ன நீங்க ரெடியா?
சந்திப்பு: மாயவரத்தான் வி.சந்திரசேகரன்
ஒளிப்பதிவு: முத்ரா
எடிட்டிங்: மேப்ஸ்
Leave a comment
Upload