விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "இனிமேல் மழை எல்லாம் இல்லையாம் வெயில் தான் என்கிறது வானிலை அறிக்கை. வெயிலுக்கு இதமாக நன்னாரி சர்பத் சாப்பிடுங்கள் ஐஸ் எல்லாம் போடவில்லை "என்று பரிவுடன் ஆபீஸ் பையன் நன்னாரி சர்பத் கொண்டு வந்து கொடுத்தார். "திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி எல்லாம் பிரச்சனை இல்லை நம்ம விட்டு அவர்கள் எங்கும் போக மாட்டார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்கு நமக்கு கிடைக்குமா என்பது தான் சந்தேகமாக இருக்கிறது என்று மேல்மட்ட அளவில் ஆலோசனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் விளைவு தான் பழைய ஓய்வூதிய திட்டம் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசனை சொல்ல மூன்று பேர் குழுவை அமைத்தது தமிழக அரசு" என்றார் விகடகவியார். ஆனால், எங்கள் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ சொல்லி இருக்கிறதே" என்று நாம் கேட்டோம். அது உண்மைதான் தேர்தல் நெருங்குவதால் கண்துடைப்புக்கு இந்த குழு அமைப்பு என்று சந்தேகம் அரசு ஊழியர்களுக்கு அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்போம் என்று அரசு ஊழியர் சங்கத் தலைவி தமிழ்ச்செல்வி என்பவர் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் தந்து கொண்டிருக்கிறது." என்றார் விகடகவியார்.
"சரி தமிழக அரசு என்ன செய்வதாக உத்தேசம் ?" என்று நாம் கேட்டோம் அவர்கள் இந்த பிரச்சனையை தீர்க்க பார்க்கிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாம் என்று யோசிக்கிறார்கள். ஆனால், நிதித்துறை அதிகாரிகள் அதற்கு போதிய அளவு நிதி வசதி இல்லை என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எப்போதும் தபால் ஓட்டு அரசு ஊழியர்கள் தான் செலுத்துவார்கள் அது எப்போதும் திமுகவுக்கு தான் கிடைக்கும். இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக தபால் ஓட்டுகள் கிடைத்தது. இப்படி எல்லாம் யோசித்து என்ன செய்வது என்று முழிக்கிறது திராவிட முன்னேற்ற கழக அரசு. அப்படியே அவர்கள் ஓய்வூதியம் தந்தால் கூட அவர்கள் மீதான நம்பகத் தன்மை அரசு ஊழியர்களுக்கு வரவில்லை. எடப்பாடி நாம் சொல்வது எல்லாம் கேட்டுக் கொண்டார். நாம் நினைத்தபோது அவரை சந்தித்து நம் பிரச்சினையை சொல்ல முடிந்தது. இப்போது அப்படி இல்லையே என்ற ஆதங்கம் அவர்களுக்கு என்றார் விகடகவியார். "நீர் சொல்வதைப் பார்த்தால் இந்த முறை அரசு ஊழியர்கள் வாக்கு திமுகவுக்கு இல்லை போல் தெரிகிறதே" என்று நாம் கேட்க "அந்த சந்தேகம் இப்போது திமுகவுக்கும் வரத் தொடங்கி விட்டது "என்றார்.
"சரி திருப்பரங்குன்றம் விஷயத்துக்கு வாரும் "என்றோம். இந்த விஷயத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார் முதல்வர். அவர் தேவையில்லாமல் போய் அங்கு பிரியாணி சாப்பிட்டது தான் மொத்த பிரச்சனைக்கும் காரணம். இதை பாஜக சரியாக பயன்படுத்திக் கொண்டு விட்டது நீதிமன்றம் அனுமதித்த அரை மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கு அதிகமான பேர் அங்கு கூடியது திமுகவை யோசிக்க வைத்திருக்கிறது. அதனால் தான் சேகர் பாபு உட்பட அமைச்சர்கள் யாரையும் இந்த விஷயத்தை பெரிதாக பேச வேண்டாம் அடக்கி வாசியுங்கள் என்று முதல்வர் உத்தரவுப் போட்டு இருக்கிறார் என்ற விகடகவியார் டெல்லி தேர்தலில் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தேறாது என்று சொல்லி இருப்பதை பார்த்த எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு நாம் வலுவான கூட்டணி அமைத்தால் தான் பாஜகவை எதிர்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload