தொடர்கள்
அரசியல்
அஞ்சி நடுங்குகிறதா அமெரிக்கா ? -ஜாசன்

20250108075341348.jpeg

(ஏ.ஐ. உருவாக்கிய படம்)

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல தடாலடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் உடனே நாடு கடத்தப்படுவார்கள் என்பது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். அதில் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் ஏழு லட்சம் இருக்கும். அதில் தற்சமயம் 18,000 பேர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அதில் முதல் தவணையாக 104 பேர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். உரிய அரசு ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவர்கள் அனைவரையும் நாடு கடத்துவது என்பது அதிபர் ட்ரம்ப் அரசின் கொள்கை முடிவு. அதன் முதல் தவணை தான் இந்த 104 பேர்கள் இவர்களை சாதாரணமான பயணிகள் விமானத்தில் அழைத்து வராதது, அவர்கள் கை கால்களுக்கு விலங்கு போட்டு அழைத்து வந்தது, தற்சமயம் சர்ச்சையாக இருக்கிறது.

இதைக் கண்டித்து மக்களவை மாநிலங்கள் அவை இரண்டிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டார்கள். இது பற்றி சபையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் சொன்னபோது. சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளில் கடமை. இப்படி திருப்பி அனுப்புவது புதியது கிடையாது. ஏற்கனவே அமெரிக்கா கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் இப்படி சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் 15,652 பேர்கள் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். திருப்பி அனுப்பப்பட்ட ஆண்களுக்கு மட்டுமே கை கால்களுக்கு விலங்குகள் போடப்பட்டுள்ளது. பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர்.

20250108075758331.jpeg

திருப்பி அனுப்பட்ட இந்தியர்களிடம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த ஏஜென்ட் யார் எப்படி போனீர்கள் போன்ற விவரங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ் பால் சிங் இது பற்றி கூறும் போது வேலை வாய்ப்புக்காக ஒரு ஏஜென்டிடம் 42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைந்தேன். தற்போது கை கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல் இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன் என்று கூறியுள்ளார். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு போன எல்லோருடைய சோக கதையும் இதுதான்.

இந்தியா இதை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். அதனால்தான் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உரிய ஆவண சோதனைக்கு பிறகு இந்தியாவிற்கு திரும்ப அழைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் ராணுவ விமானத்தில் கை கால்களை கட்டி அவர்களை இறக்கி விட்டிருக்கிறது அமெரிக்க அரசு.

இதற்கு முன் அமெரிக்க அதிபராக இருந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளை சில சலுகைகள் தந்து அமெரிக்க பிரஜைகளாக மாற்றி இருக்கிறார்கள். கால நீட்டிப்பு மன்னிப்பு போன்றவையும் வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த வேண்டும் என்பதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார்.

இதில் டிரம்ப் மோடி நெருங்கிய நண்பர்கள், தேர்தலுக்கு முன்பே அவரை வாழ்த்தி பிரதமர் பேசியிருக்கிறார். ட்ரம்பும் மோடியை உறுதியான இரும்பு மனிதர் என்று பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது இப்போது இப்படி எப்படி நடந்தது என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம். அமெரிக்காவைப் பொறுத்தவரை அது தனது தன்னை நிரந்தர நாட்டாமையாக நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை மோடியின் உறுதியான கொள்கை உலக நாடுகளில் மோடியின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. ரஷ்ய அதிபர் கூட உக்ரைன் போரை மோடி நினைத்தால் ஒரே நாளில் முடித்து விடுவார் முடித்து விடலாம் என்று பேசி இருக்கிறார். என்னதான் உயிர் நண்பர் என்றாலும் டிரம்ப் தனது நாட்டான்மை பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

சில நாடுகளுடன் டாலருக்கு பதில் ரூபாயில் வர்த்தகம், ரஷ்யாவுடன் நெருக்கம் அரபு நாடுகளிடம் பரிவு இதெல்லாம் அமெரிக்காவை கொஞ்சம் மிரட்டிக் கொண்டிருக்கிறது அதனால்தான் அவர்களுக்கு மோடி பயம் வந்திருக்கிறது

அமெரிக்காவையும் மீறி ஒரு சூப்பர் பவராக இந்தியா வந்துவிடுமோ என்ற பயம் ட்ரம்புக்கு இருக்கிறது என்கிறார்கள். விவரம் அறிந்த அரசியல் பார்வையாளர்கள்.

இந்த கைதும் உடனடி நாடுதிருப்புதலும், இந்த பயத்தை உறுதி செய்கின்றன....

அத்தனை பெரிய நாட்டில் இந்த 104 பேர் இருந்தால் குடியா முழுகி விடும். பரமா கண்ல பயத்த பாத்துட்டேன் பரமா என்பது தான் இந்த செயல் காட்டுகிறது.