தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் இந்த வார பறவை - வெண் தொண்டை மீன் கொத்தி- ப. ஒப்பிலி

20250108084836646.jpeg

மிக அழகான மயில்தோகை நிறம் கொண்ட பறவை இந்த மீன் கொத்தி. தலை பகுதி சாக்கலேட் நிறத்தில்இருக்கும். மிகவும் கூறிய நீளமான அலகுகளை கொண்டது இந்த மீன் கொத்தி.

பெயருக்கு தான் மீன் கொத்தி. ஆனால் ஓணான், பல்லி, வெட்டுக்கிளி, மற்றும் பிற பூச்சிகளை உண்ணும் இந்தபறவை. இது தவிர சிறிய பறவைகள் மற்றும் எலிகள் இவற்றின் உணவில் அடங்கும்.

சிறிய குட்டைகள், நீர் நிலைகள், நீர் தேங்கிய இடங்கள், நீர் நிறைந்த வயல் வெளிகள், மற்றும் அடர்த்தியாகஇல்லாத வன பகுதிகளிலும் காணப்படும். மீன்களை கொத்தி சென்றாலும், தண்ணீர் பகுதிகளில் இருந்து மிகவும்தள்ளியே இருக்கும் இந்த பறவை.

மின் கம்பங்கள், தொலைபேசி தூண்கள் மேல் அமர்ந்து தன் இரை ஊர்ந்து செல்வதை கண்காணித்துமேலிருந்து ஜிவ்வென்று பறந்து சென்று தன் இரையை கொத்திக்கொண்டு அருகில் இருக்கும் மர கிளையில்அமர்ந்து அந்த இரையை குத்தி கிழித்து பின் தன் அலகால் எடுத்து அப்படியே விழுங்கி விடும்.

மார்ச்சிலிருந்து ஜூன் வரை இந்த பறவையின் இன பெருக்க காலமாகும். அந்த காலத்தில் கூட்டில் நான்கு முதல்ஏழு முட்டைகள் வரை இடும் பெண் பறவை. ஆண் மற்றும் பெண்பறவைகள் சேர்ந்தே குஞ்சு பொறிக்கமுட்டைகள் மேலே அமர்ந்து அடை காக்கும். அதே போல குஞ்சுகளுக்கு உணவு தேடும் வேலை, குஞ்சுகளுக்குஉணவு ஊட்டுதல் ஆகியன இரு பறவைகளும் சேர்ந்தே செய்யும்.