தொடர்கள்
ஆன்மீகம்
10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட வீணை - மாலா ஶ்ரீ

20250108084256188.jpg

சென்னையை சேர்ந்த நீரஜா விஜயகுமார் என்ற பக்தர், கடந்த 5-ம் தேதி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சாமி கும்பிட வந்திருந்தார். அப்போது, தனது நேர்த்திக்கடனுக்காக, காமாட்சியம்மனுக்கு 10 கிலோ எடை வெள்ளியில், தங்கமுலாம் பூசப்பட்ட வீணையை காமாட்சியம்மனுக்கு சென்னை பக்தர் நீரஜா விஜயகுமார் காணிக்கையாக செலுத்தினார். காணிக்கையாக வழங்கப்பட்ட வீணையை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், மணியக்காரர் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானிகர்கள் ஆகியோர் பெற்று கொண்டனர்.

பின்னர், அந்த தங்கமுலாம் பூசப்பட்ட வீணை காமாட்சி அம்மனிடம் வைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தங்க வீணையை காணிக்கையாக வழங்கிய சென்னை பக்தர் நீரஜா விஜயகுமாருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் காமாட்சியம்மனின் திருவுருவப் படம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.