தொடர்கள்
வலையங்கம்
இது சரியா

20250311133811609.jpg

சமீபத்தில் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விக்கு விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சொன்ன எழுத்துப்பூர்வமான பதில் அதிர்ச்சியும் கவலையையும் அளிப்பதாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடா மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பதினாறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில் 3090 பேர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தற்கொலைக்கு காரணம் போதிய மழை இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பு அல்லது வெள்ளத்தால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம், தனி நபரிடம் உரம் மற்றும் விதைகள் வாங்குவதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஏற்பட்ட அவமானம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் தெரிவிக்கிறார்.

விவசாயிகள் நவீன இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியமான தூண்கள் அவர்களின் இந்த தற்கொலை என்பது உண்மையில் கவலைக்குரிய விஷயம். அமைச்சர் தனது பதிலில் கூட இதை ஒரு தகவலாக தான் தெரிவித்து இருக்கிறார்கள், தவிர இது தடுக்க என்ன நடவடிக்கை என்பதை பற்றி எல்லாம் அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. இது சரியான நடவடிக்கையா என்று தெரியவில்லை. ஒரு பக்கம் விவசாயிகள் கோரிக்கைக்காக டெல்லியை நோக்கி பேரணி நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் விவசாயிகளுக்காக தங்கள் அரசு செய்த சாதனைகளை பட்டியல் போடுகிறார் பிரதமர். இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.