நாட்டில் உள்ள நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, கடன் அளவு அதிகரித்து வருவதாக எச்சரித்து நிதிநிலைத் தன்மை அறிக்கையை சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி கடந்த பத்து ஆண்டுகளில் வங்கிகள் வழங்கும் சில்லறை கடன் மற்றும் கடன் அட்டை வழியான கடன் அளவு நாலு சதவீதத்திலிருந்து பதினோரு சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது. இதன் மூலம் நடுத்தர குடும்பங்கள் பெரும்பாலானவை கடன் வலையில் சிக்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
நாட்டின் முக்கிய பங்கு வைக்கும் நடுத்தர குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு, மாநில அரசின் பொருளாதாரக் கொள்கையை வடிவமைக்க வேண்டும். இது குறிப்பாக மத்திய அரசுக்கும் பொருளாதார கொள்கைகளை வடிவமைக்கும் நிதி நிதியமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் முக்கிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. நடுத்தர மக்களை கடன் சுமையிலிருந்து விடுவித்து மீண்டும் கடன் சுமையில் சிக்காமல் எப்படி தடுக்கலாம் என்று யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Leave a comment
Upload