தமிழ்நாட்டில் வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செம்முகப் பாறுஆகிய மூன்று வகையான பாறு கழுகுகள், இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இதைத் தவிர மஞ்சள் முகப் பாறு கழுகும் ஆங்காங்கே தொடர்ந்து தென்பட்டுவருகிறது. மேலும் இமாலயப் பாறு, யுரேசியப் பாறு, கருஞ்சாம்பல் பாறு கழுகுஆகியனவும் எப்போதாவது பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பாறு கழுகுகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக சத்தியமங்களம் முதுமலைச்சரணாலயங்கள் திகழ்ந்து வருகின்றன. இவை பேரழிவு அபாயத்தில் உள்ளன. இவற்றை மீட்க மத்திய மாநில அரசுகள் பெருமளவு முயற்சித்து வருகின்றன. அந்தமுயற்சியின் ஒரு பகுதியாக தொடர்ந்து மூன்றாவது முறையாக மூன்று மாநிலங்களைஇணைத்து ஒருங்கிணைந்த பாறு கழுகுக் கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசுநடத்தியது.
தமிழ்நாட்டில் முதுமலை மற்றும் சத்தியமங்களம் புலிகள் சரணாலயம் நெல்லைச்சமவெளியிலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கேரளத்தில் வயநாட்டிலும்கர்நாடகாவில் பந்திப்பூர், நாகர்கோலே புலிகள் சரணாலயங்களிலும் ஒரே நேரத்தில்கடந்த பிப்ரவரி 27, 28 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
மூன்று மாநிலத்திலும் சேர்த்து 106 உயரமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நூற்றுஆறு பறவை ஆர்வலர்களைக் கொண்டு இரண்டு நாட்கள் எட்டு மணிநேரம் கவனித்துக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இக்கணக்கெடுப்பின் மூலம் 3 வகையான பாறுகழுகுகளின் எண்ணிக்கையும் சேர்த்து 320 லிருந்து 388 ஆக உயர்ந்துள்ளதுதெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 157 ம் கேரளாவில் 125ம் கர்நாடகாவில் 108-ம் பதிவாகியுள்ளன. இதுதவிர கூடு இருக்கும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு அங்கும் தனியாகக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இக் கணக்கெடுப்பில் மூன்று இனத்தையும்சேர்த்து 75 கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இதில் முதுமலைச் சரணாலயத்தில் வெண்முதுகுப் பாறு கழுகு கூடுகளின்எண்ணிக்கை 67 லிருந்து 60 ஆகச் சரிந்துள்ளது கவனித்தில் கொள்ளத்தக்கது. அதேவேளையில் பந்திப்பூரில் 13 கூடுகளிலிருந்து 35 ஆக உயர்ந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த விசயமாக செம்முகப் பாறு கழுகின் கூடு ஒன்றுகண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாறு கழுகுகளின் பேரழிவிற்குக்காரணமான வலி மருந்துகளின் புழக்கம் இல்லாமல் செய்ய பெரும் முயற்சிஎடுக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. ஆயினும் இன்னும் நிறைய முன்னெடுப்புகள்தேவை.
கழுகுகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் கீழ்க்காணும்விசயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
இறந்த விலங்குகளைப் புதைக்காமல் பாறு கழுகுகளுக்குக் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். பாறு கழுகுகளின் நடமாட்டத்தை தடங்காட்டி கருவி கொண்டுஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் இறந்தகால்நடைகளில் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். மற்றும்தென்னிந்திய அளவில் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
Leave a comment
Upload