ப்ரயாக்ராஜ்ஜில் பிப்ரவரி 26, சிவராத்திரியன்றோடு நிறைவடைந்த மஹாகும்பமேளா .
ஐம்பூதங்களின் சங்கமம்
கோள்களின் சங்கமம்
மனிதரின் சங்கமம்
நதிகளின் நீர் சங்கமம்
எங்கும் நிறைந்த காற்றின் சங்கமம்
நம்பிக்கையின் சங்கமம்
போன மாதம் உத்திரப்பிரதேச மாநில அசைச்சரவை மீட்டிங்கை த்ரிவேணி சங்கமத்தில் நடத்திவிட்டு அமைச்சர்களோடு சங்கமத்தில் ஸ்நானமும் செய்துள்ளார் முதல்வர் யோகி.
உன்னாவோ ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு இந்த புனித நீரை அங்கேயே கொண்டு சென்று அவர்களை நீராடும் வசதி செய்து தந்த உபி அரசு மாநிலத்தின் அனைத்து 75 ஜெயில்களில் உள்ள சுமார் 90,000 கைதிகளுக்கும் பிப்ரவரி 21 ஆம் தேதி இந்த வசதி செய்து தந்துள்ளது.
66 கோடிக்கும் மேல் மக்கள் இந்த திரிவேணியில் புனித நீராடியுள்ளனர்.
சுமார் எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 3.5 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் பெற்றுத் தந்துள்ளது இந்த ப்ர்யாக்ராஜ் மஹாகும்பமேளா. செலவு என்னமோ ரூ 7,500 கோடி தான்.
இரு வாரங்களுக்கு முன்னம் தான் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கும்பமேளாவிற்கு சென்று வந்துள்ளார். அங்கு பார்த்த ஏற்பாட்டைக் கண்டு சபாஷ் சொல்லி விட்டார்.
போதாக்குறைக்கு இந்த சிவராத்திரியன்று இரவு கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மய்யத்தில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டங்களிலும் சத்குருவின் அழைப்பின் பேரில் சென்றும் வந்திருக்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்துகொண்டிருக்கிறார். இது பூதாகாரமாக வெடித்து கட்சி மேலிடம் இவர் மீது கோபித்துக்கொண்டுள்ளது.
கர்நாடகாவின் ஷிண்டே என்று இவரை கலாய்த்து வருகின்றனர். பொருத்திருப்போம். சிவகுமாருக்கும் முதல்வர் ஆகும் ஆசை இருக்காதா என்ன?
ஹாவார்ட் பேராசிரியர்கள் இந்த பிரயாக்ராஜ் கும்பமேளாவில் இந்த உலகின் மிகப்பெரிய சமயம் சார்ந்த மனித சங்கமத்தில் வர்த்தகம் மற்றும் ஆன்மீகத்தின் கலவையுடன் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் தனித்துவமான இணைப்பைக் காண்கையில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே,” கங்கையில் குளிச்சா ஏழ்மை விலகிடுமா?” என்று நக்கலடிக்க, அடுத்து தொடர்ந்த எதிர்வினைகளின் தாக்கத்தைத் தணிக்க சாரி சொல்லிவிட்டார்.
லல்லு பிரசாத் யாதவோ,” கும்ப்மேளா ஒரு வேஸ்ட்” என்றிருக்கிறார்.
பெங்காலின் மம்தா பானர்ஜி ஒரு படி மேலேயே சென்றுவிட்டார்.
கும்பமேளாவா, அது ம்ரித்யூ மேளா என்றிருக்கிறார். அதாவது, ஜனவரி 29 அன்று 30 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி மடிந்ததைச் சொல்கிறார் போல. இப்போது நான் சொன்னதைத் திரித்து சொல்கிறார்கள் என்று திருத்த அறிக்கை விடுகிறார்.
இந்த மேளாவில் ஏற்பாடுகள் சரியே இல்லை என்று அகிலேஷ் யாதவ் கூறிட, “ ஆமாம் ஏற்பாடே இல்லாமலிருந்தால் இந்த 66 கோடி மக்கள் எப்படி வந்திருக்கமுடியும்?
குறை சொன்னவர்,” இந்த மேளாவின் கொண்டாட்டங்களை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து வைய்யுங்களேன்” என்றும் கேட்டிருக்கிறார் தொடர்ந்து.
கட்டுப்பாட்டை மீறி சென்று பலியானவர்களுக்கு உபி அரசு இழப்பீடு கொடுத்துள்ளது.
மேளாவைக் குறை கூறியவர்களுக்கு நடந்து வரும் சட்டசபையில் பேசுகையில் யோகி,” மேளாவில் யார் யாருக்கு என்ன பார்க்க விரும்பினார்களோ அதைக் கண்டனர்.
கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம் பெற்ற இந்த மேளா வெகு சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது.
இந்த மேளாவில் பொறுமையாகவும், கட்டுப்பாட்டுடனும் பணியில் இருந்த சுமார் 75,000 போலீஸ்காரர்களுக்கு தலா 7 நாள் விடுமுறை, ரூ.10,000/- போனஸ் மற்றும் மஹாகும்ப சேவா மெடலும் அறிவித்திருக்கிறரர் யோகி.
மூன்று வருட திட்டமிடலும், செயல்பாடும், ரூ5,000 கோடி முதலீடும் செய்ததால் இந்த மேளாவுக்கு சுமார் 17000 ரயில்களை இயக்கி கிட்டத்தட்ட 5 கோடி மக்களை ஏற்றி சென்றுள்ளது என்கிறார் ரயில்வே அமைச்சர்.
கி.பி 2169 வரை….
Leave a comment
Upload