தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20250128083605598.jpeg

எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல், அதில் யாரும் ஏற மாட்டார்கள் ஓபிஎஸ்.

அவர் தான் உங்களை ஏற்ற மாட்டேன்னு சொல்றாரு !!

மாணவர் திமுகவினர் இந்தி எழுத்து அழித்துப்போராட்டம்.

கருப்பு பெயிண்ட் விலை ஏறப்போகுது !!

நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகல்.

பாவம் சீமானுக்கு கட்டம் சரியில்லை !!

கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமர்சிக்க வேண்டாம் செல்வப் பெருந்தகை.

காங்கிரஸில் இது சகஜமாம் !!

ஆடும், ஓநாயும் யார் யார் எடப்பாடியிடமே கேளுங்கள் செங்கோட்டையன் மழுப்பல்.

தலைவர் உஷாரா இருக்காராம் !!

சட்ட பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை சமயத்துக்கு தகுந்தவாறு முடிவு செய்வோம் புதுவை முதல்வர் ரங்கசாமி.

அடிக்கடி விஜய் மீட்டிங் எதுக்கு?

பஞ்சாபில் 32 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர்பில் காங்கிரஸ் தகவல்.

அவங்க எங்க கூட பேசிகிட்டு இருக்காங்கன்னு பாஜககாரங்க சொல்றாங்க !!

பிற மொழிகளில் கற்பது என்பது தனி நபர் விருப்பம் தொல் திருமாவளவன் கருத்து.

அப்புறம் ஏன் திணிப்புன்னு பேசுறீங்க ?

நிதி நெருக்கடியிலும் மக்கள் நலத் திட்டங்கள் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

ஆனா அரசு ஊழியர் கேட்டா பணம் இல்லைன்னு சொல்றீங்க ?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

அப்ப அந்த "சார்" எஸ்கேப்பா ?

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் முதல்வர் ஸ்டாலின்.

அதாவது அரசுப் பள்ளியில் மட்டும் அப்படித்தானே முதல்வரே !!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதியில் குறைக்கப்படும் சூழ்நிலை உள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

அப்ப கூட்டணி கட்சிகளுக்கு இதயத்தில் தான் இடமா !!

தங்கியிருந்த அறையில் தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கைது.

அவங்களுக்கு தெரிந்த விவசாயம் இதுதான் போல இருக்கு !!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் தலைமைச் செயலகம் முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

நாராயணா இந்த கூட்டணி கொசு தொல்லை ஜாஸ்தியா இருக்கு !!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன் ? வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி.

முதல்ல மத்திய அரசை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த சொல்லுங்க !!

ஓராண்டு பணி நிறைவு தந்தது எதிர்ப்புகளால் ஊக்கம் பெறுகிறேன். செல்வப் பெருந்தகை.

கார்கே இருக்க பயமேன் என்கிறார் !!