தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

வேண்டாம் நயன்தாரா

தற்போது இந்தி படம் இயக்கும் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன் உள்பட சில இயக்குனர்களை தொடர்பு கொண்டு தனக்கு கதாநாயகி வாய்ப்பு தருமாறு கேட்டு இருக்கிறார் நயன்தாரா. உங்களுக்கு வயதாகி விட்டது அக்கா, அண்ணி இந்த வேடங்கள் வேண்டுமானால் ஓகே என்று சொல்ல நொந்து விட்டார் நயன்தாரா.

அப்பாவின் எச்சரிக்கை

20250108075542262.jpeg

சினிமாவில் எல்லை மீறாமல் நடிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் மீண்டும் மருத்துவராகப் போக வேண்டும் இந்த நிபந்தனையுடன் தான் அதிதியை சினிமாவில் நடிக்க அனுமதித்தார் இயக்குனர் சங்கர். இப்போது வரும் செய்திகள் எல்லாம் அப்படி தெரியவில்லை, சீக்கிரம் சினிமாவில் இருந்து மூட்டை கட்டிக் கொள் என்று எச்சரித்து இருக்கிறார் அப்பா சங்கர்.

வேண்டாம் அனிருத்

2025010808375698.jpeg

தான் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி போன்ற படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் அனிருத்தை இசையமைக்க வைத்தார். அடுத்து அவர் இயக்க இருக்கும் கைதி 2 படத்திற்கு அனிருத் வேண்டாம் என்று முடிவு செய்து ஷாம் சிஎஸ்ஐ ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

மாளவிகா மோகனன்

20250108083956322.jpeg

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடிப்பு பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக ராஜா சாப் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் என் தனித்திறமை வெளிப்படும் என்று நம்புகிறார் மாளவிகா மோகனன்.

சமந்தா

20250108084916713.jpg

நடிகை சமந்தா வெப் தொடர்கள் இயக்குனர் ராஜ் நிடமொருடா என்பருடன் காதல் வயப்பட்டு இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். நெட்டிசன்கள் இப்போது சமந்தாவை வறுத்தெடுக்கிறார்கள். அடுத்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். அந்தப் பெண்ணை கண்ணீர் விட வைத்து நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. யாராவது திருமணமாகாதவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளவும். உங்களை மணக்கோலத்தில் பார்க்க விரும்புகிறோம். அடுத்த பெண்ணின் கணவருடன் அல்ல என்று காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரெஜினா

20250108085116870.jpg

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா காசண்டரா. படத்தின் டீசரைப் பார்த்து என்னுடைய கேரக்டர் என்ன என்று முடிவு செய்யாதீர்கள். முழு படத்தையும் பாருங்கள் அதன் பிறகு நீங்களே என்னை பாராட்டுவீர்கள் என்கிறார் ரெஜினா.

பார்வதி

தைரியமாக கருத்துக்கள் சொல்லி வரும் மலையாள நடிகை பார்வதி சமீபத்தில் சொன்னது இது. "நான் சிலருடன் டேட்டிங்கில் இருந்தேன். திருமணத்துக்கு முன்பு ஒருவர் எப்படி என்பதை புரிந்து கொள்ள டேட்டிங் மிக அவசியம். அதே சமயம் எனது மோசமான தீனி பழக்கத்தால் ஒரு நல்ல டேட்டிங் நண்பரை இழந்து விட்டேன். எனது லைஃப் பார்டனர் சினிமாக்காரராக இருந்தால் நல்லது "என்கிறார் பார்வதி.

தமன்னா

எல்லா நடிகைகளுக்கும் ஆண்களால் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும் போல் தெரிகிறது. தமன்னாவுக்கும் அப்படி இருந்திருக்கிறது. கேரவனில் இருக்கும்போது அப்படி ஒரு மோசமான ஒரு அனுபவம் அவருக்கு ஏற்பட்டதாம். படப்பிடிப்புக்காக அவர் கண் மை போட்டிருந்ததால் அவரால் அப்போது அழக் கூட முடியவில்லையாம் என்று சொல்லி இருக்கும் தமன்னா. இது எப்போது நடந்தது யாரால் நடந்தது என்பதை சொல்லவில்லை.

சாய் பல்லவி

சாய் பல்லவி நாக சைதன்யா இணைந்து நடிக்கும் 'தண்டேல்' படம் பிப்ரவரி 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சந்திப் ரெட்டி 10 வருடங்களுக்கு முன்பு பிரேமம் படத்தில் நடிக்கும் போது எப்படி இருந்தாரோ சாய் பல்லவி அப்படியே இருக்கிறார் இன்னும் மாறவில்லை என்று புகழ்ந்து தள்ளினார்.

சூரி

குடும்பக் கதைகளில் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதைகள் தான் இனிமேல் நடிப்பாராம் சூரி.