தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250108081845564.jpeg

திமுக ஆட்சியில் தூங்கா நகரமாக சென்னை இருக்கிறது ஆர்.எஸ்.பாரதி.

கரெக்டு தான் எப்ப யாரு யாரை வெட்டுவாங்கன்னு தெரியாம மூழிச்சுகிட்டே இருக்க வேண்டி இருக்கு !!

மத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை எடப்பாடி பழனிச்சாமி.

நம்ம புதுசா இனிமே யோசிச்சு சொல்லணும் தலைவரே !!

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் குடிசைகள் அகற்றப்படாது பிரதமர் மோடி.

அப்ப ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் சும்மாணாங் கட்டி தானா ?

ராணிப்பேட்டை அருகே சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு.

பாவம் போலீஸ்காரங்களுக்கே பாதுகாப்பு இல்லை !!

சீனா கடந்த 10 ஆண்டுகளில் பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது ராகுல்காந்தி.

இவர் தான் சீனாவுக்கு மார்க்கெட்டிங் மேனேஜர் போல தெரியுது !!

பணம் பறித்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐக்கு ஜாமீன்.

அப்ப மறுபடியும் கிளம்பிவிடுவார் பணம் பறிக்க !!

தேசியக் கூட்டுறவு இணையம் நெல் கொள்முதல் செய்வது ஏன் ? அமைச்சர் விளக்கம்.

நாங்க கொள்முதல் செய்தால் நாங்க தானே பணம் தரணும் இனிமே அவங்க தருவாங்க அதான் !!

மத்திய அரசின் ஜல்ஜுவன் திட்டம் போன்ற பல திட்டங்கள் டெல்லியில் குடிநீருக்கும், வடிகால் நீருக்கும் வித்தியாசம் தெரியாத நிலை நிலவுகிறது டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

டெல்லியில் தண்ணி தண்ணி காட்டுகிறது !!

உதிரிகளை தூண்டி விட்டு ஈரோடு கிழக்கில் மறைமுக யுத்தம் முதல்வர் ஸ்டாலின் பாய்ச்சல்.

பாவம் உதிரிகளையே சமாளிக்க முடியாமல் திணறுகிறார் போல் தெரிகிறது !!

அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம் கட்சியினருக்கு விஜய் அழைப்பு.

அதுக்கு முதல்ல நீங்க வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்!!

மத்திய அரசிடம் திமுக சரண் ராமதாஸ் குற்றச்சாட்டு.

நெசமாலுமா !!

வெளியில் சொல்ல வெட்கமா இருக்கு டெல்லி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.

தேர்தல் வந்தால்தான் வெட்கம் மானம் எல்லாம் வருது !!

தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் பாதுகாப்பை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

அதாவது டோல்கேட் கட்டணத்தை உயர்த்த போராரம் !!

வளர்ச்சிக்கு வலிமை வழங்கும் நடுத்தர வர்க்கம் நிதியமைச்சர் பாராட்டு

ஆமா அவங்க தான் கரெக்டா வரி எல்லாம் கட்டிடறாங்க !!

களத்துக்கு செல்ல யாரும் தயங்க கூடாது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

முதல்ல நீங்க தயங்காம இருங்க தலைவரே வீட்டை விட்டு வெளியே வாங்க !!

கூட்டணியில் எந்த கட்சிக்கும் எந்த தொகுதியும் பட்டா போட்டு கொடுக்கவில்லை கார்த்திக் சிதம்பரம்.

அப்ப அண்ணனுக்கு இந்த முறை சிவகங்கை தொகுதி கிடைக்காதா !!