விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "முதலில் தேசிய அரசியல் பிறகு தமிழ்நாடு "என்ற படி அமர்ந்தார். நாம் "அப்படியே ஆகட்டும் "என்றோம்.
."தேசிய அரசியலில் இண்டியா கூட்டணி கட்சிகள் இப்போது காங்கிரஸ் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டது "என்றார்.
"என்ன காரணம்? என்று நாம் கேட்க அவர்கள் விருப்பம் போல் எல்லா கட்சிகளும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸும் தனித்துப் போட்டி போடுகிறது. ஆம் ஆத்மி கட்சியை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கும் என்று அகிலேஷ் யாதவ் சொல்லி இருக்கிறார்.
உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி கூட்டணி எல்லாம் பாராளுமன்றத் தேர்தலோடு முடிந்து விட்டது நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி போட போகிறோம் என்று மகாராஷ்டிராவில் அறிவித்திருக்கிறார்.
சரத்பவர் கட்சியும் அப்படியே அறிவித்திருக்கிறது" என்று அவர் சொல்ல "சரி காங்கிரஸ் கருத்து என்ன ?" என்று நாம் கேட்க அவர்கள் இதைப் பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவர்கள் பாட்டுக்கு டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வேட்பாளர் தேர்வு தேர்தல் பிரச்சாரம் என்று பிசியாக இருக்கிறார்கள்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி இப்போதைக்கு இதுதான் நிலைமை.
பிரியங்கா காந்தி கட்சித் தலைமை ஏற்க வேண்டும் என்ற கலக குரலும் இப்போது கேட்க ஆரம்பித்திருக்கிறது.
ராகுல்காந்தி பெரிய ஓட்டு வாங்கி தலைவர் இல்லை என்ற கருத்தும் இப்போது காங்கிரஸ் கட்சியில் வர தொடங்கி இருக்கிறது. ராகுல்காந்தி கட்சியில் மூத்தவர்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டி கட்சிப் பொறுப்பு என்று பிடிவாதம் பிடித்தால் இளையவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது இதுதான் காங்கிரஸ் பின்னடைவுக்கு காரணம் என்கிறார் என்றார் விகடகவியார்.
" தமிழக அரசியலுக்கு வாரும்" என்றோம் .
இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று சிலர் தெரிவித்தார்கள் வேண்டாம் ஆளுங்கட்சி அதிகார பலத்தை பயன்படுத்தி நம்மை தோற்கடிக்க பார்க்கும் கிட்டத்தட்ட எல்லா பெரிய கட்சிகளும் புறக்கணிப்பு என்பது திமுகவுக்கு பின்னடைவு தான் தான்.
இதனால் அவர்களுக்கு கெட்ட பெயர் தான் வரும் இப்படி யோசியுங்கள் என்று சமாதானப்படுத்தி இருக்கிறார். கூடவே நான் எல்லா தொகுதிக்கும் சுற்றுப்பயணம் வர இருக்கிறேன் என்றால் ஏதோ பேசினோம் என்று வந்து விட மாட்டேன் கட்சிக்காரர்களுடன் பேசப்போகிறேன் கட்சியில் உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வேன். எனது பயணம் கோவையில் இருந்து ஆரம்பமாகும் எனது அருமை தம்பி வேலுமணி தொகுதியில் இருந்து என்று வேலு மணியை குஷிப்படுத்தி இருக்கிறார் "என்றார் விகடகவியார் .
திமுக செய்திக்கு வாரும் "என்று சொன்னோம்.
திமுக காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு தராமல் தானே போட்டியிடுகிறோம் என்று விருப்பம் தெரிவித்தது காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம் சலசலப்பு ஏற்படுத்தியது ஆனால் வேறு வழி இல்லாமல் அடங்கி போய் விட்டார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தவரைபெரிய கட்சிகள் புறக்கணிப்பு என்பதால் ஒட்டு மொத்த அமைச்சரவை பிரச்சாரம் எல்லாம் தேவையில்லை அமைச்சர் முத்துசாமி செந்தில் பாலாஜி இருவர் மட்டும் தேர்தல் பணி பார்க்கட்டும் என்று சொல்லிவிட்டார் முதல்வர். காங்கிரஸ் இறங்கி வேலை செய்யுமா என்று தெரியவில்லை ஆனால் அது பற்றி எல்லாம் திமுக கண்டு கொள்ளவில்லை. என்றார் விகடகவியார்
அதே சமயம் வேட்பாளர் தேர்வில் இந்த முறை இளைஞர் அணி சிபாரிசு கண்டுகொள்ளப்படவில்லை.முத்துசாமி விருப்பப்படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் இளைஞர் அணி செல்வாக்கு உள்ள அணி இல்லை என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்
Leave a comment
Upload