இந்தியர்களுக்கு ஹைக்கிங் அதாவது மலையேறுவது என்றால் ஏதேனும் கோவில் உச்சியில் இருந்தால் தான் உண்டு என்று ஒரு கேலி சமூக ஊடகங்களில் படித்திருக்கலாம்.
உண்மைதான். நம்மூரில் ஏதேனும் மலை மீது கோவில் இருந்தால் மட்டுமே நம்ம ஆட்கள் மலையேறி பழக்கம். சாதாரணமாக மலையேறுவது இல்லை. சமீபத்தில் தான் டிரெக் தமிழ்நாடு என்ற விஷயம் பிரபலமாகிக் கொண்டு வருகிறது.
ஆனால் வெளிநாடுகளில் மலை மீது பெரும்பாலும் கோவிலோ சர்ச்சோ இருப்பதில்லை. ஹாங்காங்கில் அப்படி நூறு மலைஉச்சிகளுக்கு மேல் இருக்கிறது.
இருந்தால் ம் துங் சாய் என்ற ஒரு மலையில் நீர்வீழ்ச்சிகள் சூழ்ந்த ரம்மியமான ஒரு நிலப்பரப்பில் தான் ஒரு முறை வழிதெரியாமல் நாங்கள் தொலைந்து போனோம்.
அன்று நண்பர் ஒருவரிடம் பேசும் போது அந்த இடத்திற்கு மீண்டும் போன போது ஏன் அங்கே சுவாமி ஐயப்பனை கொண்டு சென்று ஒரு பூஜை செய்யக் கூடாது என்று யோசனை கொடுக்க, இந்த முறை மூன்றாவது தடவையாக இந்த மலை பூஜை நடக்கிறது.
பம்பாவிலிருந்து சபரி மலை ஏறும் உயரம் 360 மீட்டர். ம் துங் சாய் மலை 430 மீட்டர்.
என்ன ஒற்றுமை. கொஞ்சம் கடினமான மலையேற்றம் தான். இருந்தாலும் ஐயப்பன் பூஜையை மலை மீது ஏறி அங்கு இருக்கும் மிக உயரமான நீர் வீழ்ச்சிக்கு அருகே அமைத்து பூஜையும் பஜனையும் அந்த கடுங்குளிரில் மீண்டும் ஒரு முறை நிறைவேற்றியதற்கு உற்சாகமாக மலையேறிய பக்தர்கள் காரணம் என்றாலும் தனக்கான பூஜை நடக்கும் இடத்தை தேர்ந்தெடுத்ததும் சாட்சாத் அந்த ஐய்ப்பனே தான்.
Leave a comment
Upload