தன் காதலி அனிதா மொபைலில்,அசோக் நகரில் பில்லர் அருகில் உள்ள அந்த ஹோட்டலுக்கு வரசொன்னதும், அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் ரூமைப் பூட்டி அங்கு ஆஜரானன் சங்கர்.
."கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?
"நீ அவசரபட்டதினால் இப்போ நான் 3 மாசம் !"
."கிராமத்தில் இருக்கிற பொண்டாட்டி ராஜியை இப்ப எப்படிக் கழட்டி விடறது?"
“அதுக்கு ஒரு ஐடியா வைச்சிருக்கேன்”.
"அவன் காதில் அந்தச் செய்தியை சொன்னாள்.
“அங்குப் போய் நீ யாருன்னு காட்டிக்க வேண்டாம். டாக்டர்க்கு தெரியாம ஒத்தன் கிட்ட எப்படிப் பண்ணனும்னு சொல்லி இருக்கேன்.”
“அந்த ரிசல்ட் வந்தபிறகு நீ நான் சொன்ன காரணத்தைக் காட்டி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பு.”
“ஆனா, அதுக்கு முன்னாடியே அதிர்ச்சியில் அவளே செத்து விடுவாள்.". ஒன் மேல் பழி வராது.”
“சூப்பர் அனிதா. குட் ஐடியா.இதுக்குத் தான் படிச்ச பொண்டாட்டி வேணும்”.
“போதும் வழிசல். நான் சொன்ன வேலையைப் பாரு அப்புறம் கொஞ்சலாம்”.
.அடுத்தவாரம் கிராமத்திலருந்த பொண்டாட்டியிடம்,
"ராஜி கண்ணு உடம்பு ரொம்ப வீக்கா இருக்கே ! இப்ப மூணு மாசம்ன்னு வேறே சொல்றே?”
எனக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்ட ,
தெம்புக்கு இஞ்செக்சன் போடலாம் "வா
என்று வெளியே அழைத்துப் போய் ஹோட்டல் சினிமா என்று அன்று முழுவதும் அவளைச் சந்தோச படுத்தினான்.
“என்ன சார் பனையூர் கிராம ராஜலக்ஷ்மி கேஸ்ல ஒரு க்ளுவும் கிடைக்க மாட்டேங்குது”. கான்ஸ்டபிள் கந்தசாமி சப் இன்ஸ்பெக்டர் கிட்ட புலம்பிக் கொண்டிருந்தார்.
கொஞ்சம் ஆறப்போடனும் கந்தசாமி!
“ஆறப்போடலாம் சார்….மேலிடத்தில் நம்மளை ஊறப் போட்டு ட வாங்களே ?”
“இத பாருங்க! கந்தசாமி கேசை க்ளோஸ் பண்ணனும் நினைப்பில கண்டவங்களை அரெஸ்ட் பண்ண முடியாது?”.
“சரியான மெடரியல் எவிடென்ஸ் கிடைக்கணும்”.
“இந்தக் கேஸ் பத்தி என் மனசுல ஒரு ஆள் மேல சந்தேகம் இருக்கு அது மட்டும் கரெக்ட்டா இருந்துசச்சுனா அவன் தான்
அக்யூஸ்ட்.”
“யாரு சார் அந்தச் சங்கரா?”
“இத பாருங்க கந்தசாமி ரொம்ப அவசரபடுறீங்க?”
“நான் சொன்ன அசைன்மென்ட பண்ணுங்க .காதில் சொன்ன விசயத்தைக் கேட்டுக்கொண்டார் கந்தசாமி._
ஒரு வாரம் கழித்து
" அந்த மாசம் டாக்டர் கிட்ட செக்கப் செஞ்சப்ப, தன் இரத்தத்தில் எச்ஐவிபாசிடிவ் கலந்துள்ளது என்று டாக்டர் சொல்ல அதிர்ச்சி யானாள் ராஜி.
“எப்படிம்மா “
“தெரியலை டாக்டர்”
நீங்க சொன்ன வேலையின் ரிசல்ட் சக்சஸ் . , மிச்ச பணத்தை உடனே கூகிள் பே மூலம் அனுப்புங்க "என்று தன் கணவன் சங்கரிடம்
கம்பவுண்டர் பேசியதை ஒட்டு கேட்ட ராஜியை ஒரு ஜோடி கண்கள் கவனித்தது.
ஸ்டேஷனில் ஆமாம் கந்தசாமி ஒங்க மச்சினன் இப்ப என்ன பண்றார்.?
“சார் அவன் ஒரு பிரைவேட் கிளினிக்கில் கம்பவுண்டர் ஆக வேலை செய்யறான் சார்.?”
“எதுக்கு சார் கேக்கறீங்க ?”
“சும்மா ஞாபகம் வந்துச்சு. அதான் கேட்டேன். நான் சொன்ன அசைன்மென்ட் முடிச் சுங்களா?
“முடிச்சுட்டேன் சார்.”
“அத்தான் வாங்க ,அத்தான் அக்கா சௌக்கியமா? .அக்கா பணம் வேணும்ன்னு கேட்டுச்சு !”
“நானே வரம்னம்னு நினைச்சேன்!”
“நீங்க வந்துட்டீங்க இந்தங்கா இருபதாயிரம் பணம்.”
“ஏதுடா இவ்வளவு பணம்?”
“அதுவா அத்தான்! ஒருத்தர்கிட்ட கடனா வாங்கினேன். பணம் எப்படி வந்துச்சுண்ணுங்கிறது ஒங்க கவலை இல்லை. கிளம்புங்க பாபுவுக்குக் காலேஜ் ஃபீஸ் கட்டுங்கநான் கிளினிக் போகணும்..”
“அப்படின்னு சொன்னான். நீங்க சொன்னபடி பணத்தை வாங்கிக்கிட்டேன் “
ஓகே கந்தசாமி வெல். நௌ யூ கோ அண்ட் அரெஸ்ட் ஹிம். அவனை ஸ்டேஷன் கூட்டிக்கிட்டு வாங்க.
“சார் என்ன சொல்றீங்க? “ அதிர்ச்சியானர் கந்தசாமி
இன்ஸ்பெக்டர் மதன் சொல்ல ஆரம்பித்தார்.
“ஆஸ்பத்திரி எதிரில் ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்கு . அந்த ஓனரும் ராஜி ஊருதான் இன்பாக்ட் ராஜி எதிர் வீடு தான்.. அங்கே போய்ச் சங்கரைப் பத்தி விசாரிச்சேன். “
அவர் சங்கரைப்பத்தி நல்ல அபிப்பார்யம் சொன்னாரு.
அன்னிக்கு . ஒங்க மச்சினன் ராஜுவும் வந்து அந்தக் கடையில் வழக்கமா டீ சாப்பிட்டு இருக்கான்.”
“அவன் யாரிடமோ பேசும்போது ஏதேச்சையாகக் கடைக்காரர் கவனிச்சுருக்காரு .”
“ஏதோ இஞ்செக்சன் போடணும் என்னு பேசிக்கிட்டு இருந்தான். ஆனா அவன் பேச்சில் அவருடைய எதிர் வீட்டுராஜி சங்கர்ன்னு பேர் அடிபட்டுருக்கு.”
“ஓகே அனிதா மேடம்
தழைஞ்சு தழைஞ்சு பேசினான்
.“நீங்க கவலைப் பட வேண்டாம் அனிதா மேடம் . நான் பாத்துக்கிறேன்.”
இதைப் பத்தி யார்கிட்டேயும் மூச்சு விடாதீங்க
“ஓகே மேடம் ன்னு இரண்டு மூணு தடவை தலையாட்டினான்.
டீ ஆறி போயிடுச்சு
வேறே டீ குடிச்சான், ஆஸ்பத்திரி கிளம்பிட்டான்”என்று என்கிட்ட சொன்னாரு.
.அடுத்த மாசம் டாக்டர் கிட்ட செக்கப் செஞ்சப்ப, தன் இரத்தத்தில் எச்ஐவி பாசிடிவ் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி இராஜிக்கு தெரிய வந்துள்ளது.
அன்று அவள் ஆஸ்பத்திரி வந்த போது
“சங்கர் சார் ஒங்க பொண்டாட்டி ராஜி இங்கே செக் அப் வந்திருக்காங்க”
நீங்களும் அனிதாவும் சொன்ன வேலையின் ரிசல்ட் சக்சஸ் . ,
மிச்ச பணத்தை உடனே கூகிள் பே மூலம் அனுப்புங்க
தன் பெயர் அடிபடவே அந்தப் பேச்சை கவனித்துள்ளாள் ராஜி
இதை நான் மப்டியில் இருந்தபோது நானும் கவனித்தேன்.
ராஜுவை இரண்டு தட்டு தட்டினதும் உண்மையைச் சொல்லிட்டான். கூகிள் பே மூலம் சங்கர் மூலமும் அனிதா மூலமும் டிரான்சாக்சன் மெட்ரியல்
எவிடேன்ஸ்..
. அவன் மேல் சந்தேகம் பட்டு தான் ஒங்களுக்கு அந்த வேலைக் கொடுத்தேன்.ஒங்களுக்குப் பணம் கொடுத்தது அனிதா கொடுத்த பணம் தான்.
போலீஸ் விசாரணையில் அந்த டாக்டரின் கிளினிக்கில் உள்ள கம்பவுண்டர் மூலமாக எச்ஐவி பாசிடிவ் இரத்தத்தைத் தன் உடம்பில் செலுத்த ஏற்பாடு பண்ணி ,அதைக் காரணம் காட்டி சங்கர் தன்னை டைவர்ஸ் பண்ண ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது.
“மிஸ்டர் சங்கர் ,அனிதா தண்ணீர் நுழையாத எடத்தில எண்ணையும் ,எண்ணெய் நுழையாத இடத்திலே புகையும் நுழையும்ன்னு சொல்வாங்க”
“ஆனா, புகை நுழையாத எடத்திலே கூடப் போலீஸ்காரன் நுழைஞ்சுடுவான். தெ
ரிஞ்சுகோங்க. கெடுவான் கேடு நினைப்பான்னு பழமொழி தெரியும்ல..”
இப்போது அந்த ஆஸ்பத்திரி டாக்டர்,கம்பவுண்டர் அனிதா சங்கர் ராஜு எல்லோரும். சிறையில் .
Leave a comment
Upload