தொடர்கள்
அழகு
பறவைகள் பலவிதம் ! இந்திய வெளிர்உடல் அல்லது கருந்தலை அரிவாள் மூக்கன்  - ப ஒப்பிலி

2025001800582958.jpeg

இப்பறவை அரிவாள் மூக்கன் என்ற இனத்தைச் சார்ந்த ஒரு பறவையாகும். இந்தியாவில் தமிழ் நாட்டுப்பகுதியைச் சார்ந்த பறவையான இந்தியா, இலங்கை, நேபால், பங்களாதேஷ், மியான்மார் போன்ற நாடுகளிலும், ஜப்பான் போன்ற கீழ்திசை நாடுகளில் பரவியுள்ளது.

பெரிய மரக்கிளைகளின் மேல் கூடுகட்டி 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகிறது. நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்துள்ள புல்வெளிகளில் காணப்படும் பூச்சிகள், சிறிய தவளைகளைப்பிடித்து உட்கொள்கிறது.

மென்மையான தனது பாதங்களைக் கொண்டு குறைவான நீர் நிலைகளின் தனது வளைந்த அலகால் உணவுகளைப் பிடிக்கிறது. தனது உணவைத் தேடும்போது சன்னமாக ஒலிஎழுப்புகிறது.

இவற்றில் ஆண் பறவை 75 செமீ உயரம் வரை வளருகிறது. உடல் முழுவதிலும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் இதன் அலகு மட்டும் கருமையான நிறம் கொண்டு காணப்படுகிறது.

இந்த பறவை கரண்டிவாயன் பறவையின் நெருங்கிய சொந்தம். கரண்டிவாயன் வாழும் பகுதிகளில் அதிகம் காணப்படும். சதுப்பு நிலங்களில் உள்ள மிருதுவான களிமண்ணை தனதுஅலகால் அலசி அதனுள் இருக்கும் புழு பூச்சிகளை எடுத்து உண்ணும் குணம் கொண்டது. பொதுவாக ஆழமற்ற நீர்நிலைகளில் தனது தலை மறையும் படி குனிந்து உணவு தேடும் பழக்கம்உடையது.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, கோவளம் முகத்துவாரம், பெரும்பாக்கம் நீர்நிலை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றில் காணப்படும் ஒருபறவையாகும்.