தொடர்கள்
அனுபவம்
கேல் ரத்னா குகேஷ் - மாலா ஶ்ரீ

2025001800511690.jpeg

புதுடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமை தாங்கி, ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் பிரவீன்குமார் ஆகிய 2 பேருக்கும் ‘கேல் ரத்னா’ விருதுகளை வழங்கினார்.

மேலும், துப்பாக்கி சுடும் போட்டியில் இளம் வீராங்கனை மனுபாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராவார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விளையாட்டு போட்டியில், 10 மீ ஏர்பிஸ்டல் மற்றும் 10 மீ ஏர்பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் மனுபாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அதே போல், சென்னையை சேர்ந்த இளம் செஸ் சாம்பியன் குகேஷ், தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். முன்னதாக, செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் 2-வது நபர் எனக் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துப்பாக்கி சுடுதலில் மனுபாக்கர் மற்றும் சென்னையை சேர்ந்த செஸ் சாம்பியன் குகேஷ் ஆகிய இருவருக்கும் ‘கேல் ரத்னா’ விருது வழங்கி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.