வழிப்பறி வழக்கில் தலைமறைவான சிறப்பு எஸ் ஐ டேராடூனில் கைது.
சிறப்பு மிக சிறப்பு ....!!
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் 101 கோடி சொத்துக்கள் முடக்கம்.
அடடா சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவாரே !!
ரெண்டு நாளில் 453 கோடி அள்ளியது டாஸ்மாக்.
பொங்கல் பரிசுப் பணம் தந்திருந்தால் இன்னும் நிறைய அள்ளி இருக்கலாம் இல்ல !!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 1.20 லட்சம் வித்யாசத்தில் வெற்றி பெறுவோம் அமைச்சர் முத்துசாமி.
அமைச்சரே நிறைய செலவாகும் போல் தெரியுது !!
கடனை அடைக்கும் திறனும் திறமையும் முதல்வருக்கு உண்டு அமைச்சர் துரைமுருகன்.
நிறைய டாஸ்மாக் கடை திறப்பாங்க போல தெரியுது !!
ஈ.வே.ரா பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாக தயாரா நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை !!
பகுஜன் சமாஜ் கட்சி டெல்லி தேர்தலில் முழு ஆயத்தத்துடன் போட்டியிடுகிறது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
டெபாசிட் வாங்கிடுவாங்களாம் !!
டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பதில் ஆம் ஆத்மியை சமாஜ்வாதி ஆதரிக்கும் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.
இந்த முறையும் காங்கிரசுக்கு டெபாசிட் கிடைக்காதா !!
முதல்வரை கடும் வார்த்தையால் சாடும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ஆளுநர் அண்ணாமலை கருத்து.
அப்போ பதவி நீட்டிப்பு கிடைத்திடும்ன்னு சொல்லுங்க !!
நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி.
உங்களுக்கும் தான் பாவம் !!
2026 தேர்வில் திமுக அணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் உதயநிதி ஸ்டாலின்.
அதாவது அடுத்த பொங்கலுக்கு பரிசு பணம் உண்டாம் !!
அனைவரும் சேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் எடப்பாடி அறிக்கை.
ஆனா தலைவரே அந்த வெற்றிப் பாதை எங்கே என்று தெரியாமல் தான் நாலு வருஷமாக நம்ப திணறுகிறோம் !!
தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.
எப்பவும் தேர்தல் ஆணையம் தான் நோட்டீஸ் தருவாங்க இது புதுசா இருக்கு !!
திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் நாள் தொலைவில் இல்லை சீமான் காட்டம்.
அவங்களும் உங்களை ஜெயிலுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை என்று அவங்க சொல்றாங்க !!
கட்சி ரகசியங்களை புஸ்ஸி ஆனந்த் கசிய விடுகிறார் தமிழக வெற்றி கழக வியூகத் தொகுப்பாளர் குற்றச்சாட்டு.
கட்சியே நாலு சுவருக்குள் தான் இதில் ரகசியம் எங்க இருக்கு?
சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை உத்தரபிரதேச வாலிபர் கைது.
பேசாம மாணவிகள் வீட்டிலிருந்து ஆன்லைன் கிளாஸில் படிக்கட்டும். அதுதான் உத்தமம் !!
அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் துரைமுருகன் குற்றச்சாட்டு.
அதுக்கு காரணம் நீங்க தானே !!
கடவுள் என்னைக் காப்பாற்றுவார் கெஜ்ரிவால் பேட்டி.
என்ன வேண்டுதலோ தெரியலையே, அமலாக்கத்துறையா , தேர்தலா தெளிவா கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க !!
உலகின் கடல்சார் சக்தி இந்தியா பிரதமர் மோடி பெருமிதம்.
இந்த சக்தியை வைத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை தடுக்கலாம் இல்ல ?
Leave a comment
Upload