சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய கொரோனா பெரும் தொற்று உலகையே உலுக்கி எடுத்தது. அதன் பாதிப்பிலிருந்து நாம் இப்போதுதான் விடுபட்டு இருக்கிறோம். இப்போது திடீரென எச். எம். பி. வி எனப்படும் ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது என்ற செய்தியும் அதைத்தொடர்ந்து சென்னை, சேலம், கர்நாடகா, பெங்களூர், குஜராத், அகமதாபாத் நகரங்களில் ஐந்து குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இது பயப்படும்படி அவ்வளவு முக்கியமானது அல்ல. பாதுகாப்பாக இருங்கள் என்று சுகாதாரத்துறை நம்மை எச்சரிக்கிறது. இந்த நோய் குழந்தைகளை தாக்கும் என்றும் சொல்கிறார்கள். கொரோனா நோய் தொற்றுக்கு நாம் மருந்து கண்டுபிடித்தது போல் இதற்கான தடுப்பு மருந்தையும் உடனே கண்டுபிடிக்க வேண்டும். மக்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
மக்களும் பொறுப்புணர்ந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம்.
Leave a comment
Upload