பிரதமர் நரேந்திர மோடி மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ காப்பீட்டுக்கான ஆயுஷ்மான் திட்டத்துக்கான வரம்புகளை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார். வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பத்தினர் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு வசதி உறுதி செய்தது ஆயுஷ்மான் பாரத் என்கின்ற பிரதம மந்திரியின் திட்டம். இந்த திட்டத்தில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பிரதமர் அறிவித்திருக்கிறார். இதனால் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவரின் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் இந்த திட்டத்தில் சேரலாம். 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இந்த திட்டம் 60 வயது ஆனவர்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் பிரதமர் உத்திரவு செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த திட்டத்தை வரவேற்றுள்ள மூத்த குடிமகன்கள் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது மற்றும் புற்று நோய்க்கான சிகிச்சைக்கு இப்போது அதிக அளவு செலவாகிறது. மருத்துவமனைகள் மருத்துவக் கட்டணத்துக்கு வரம்பு நிர்ணயம் செய்வது நல்லது. ஒவ்வொரு மருத்துவமனையும் அவரவர் வசதிக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்கிறார்கள் அதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த திட்டம் வெற்றி பெறும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இது நியாயமான பார்வையாகத்தான் தெரிகிறது. அதே சமயம் பிரதமர் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் தவறான அணுகுமுறை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அந்த போக்கை மாற்றிக் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.
Leave a comment
Upload