நாடாளுமன்ற தேர்தல் அனல் பறந்துகொண்டிருக்க அனைத்து கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் படு வேகமாக ஈடுபட்டு வருகின்றனர் .
ஊட்டியில் நீலகிரி தொகுதி அ இ அ தி மு கா வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிக்க ஊட்டிக்கு வந்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடியார்
நான்காம் தேதி காலை 11.30 மணிக்கு ஏ டி சி சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார் என்று காவல் துறை துரிதமான பாதுகாப்பை ஏற்படுத்தியது
அ இ அ தி மு கவினர் கூட்டம் காலை ஒன்பது மணிமுதல் மொய்க்க துவங்கியது .
அந்த பகுதியில் உள்ள சாந்தி விஜய் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் அறிவியல் பொது தேர்வு எழுத துவங்க மேள சப்தம் மற்றும் எம் ஜி ஆர் பாடல்கள் ஒலிபரப்ப அதன் சப்தம் தேர்வு எழுதும் மாணவர்களின் அமைதியை தொந்தரவு செய்தது .
படுக சமுதாய பெண்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது .
பழைய எம் ஜி ஆர் பாடலுக்கு ஏற்ப நடனங்கள் அரங்கேறின .
ஏழு நாடாளுமன்ற தொகுதிகளின் ஸ்போக்ஸ் பெர்சன் அப்சரா சென்னையில் இருந்து படு ஸ்டைலாக வந்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார் அவருடன் ஊட்டி அ தி மு க கட்சி பெண்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அசத்தினார்கள் .
மாவட்ட செயலாளர் வினோத் பளிச் என்று வந்து காவல்துறையிடம் பிரச்சார வாகனம் வந்தவுடன் கூட்டத்தை கயிறு தடுப்பு போட்டு தடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தார் .
கூட்டம் அதிகமாக காவல் துறை கட்சிகாரகளை ஒதுக்கி பத்திரிகையாளர்களை முன்னுக்கு நிறுத்தும் முயற்சி பலன் அளிக்கவில்லை .
பன்னிரெண்டு மணிக்கு எடப்பாடியார் பிரச்சார வேனில் வந்து சேர்ந்தார் உடன் வேலுமணி மட்டும் வேனில் நிற்க வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் தனி மேடையில் நிற்க அவரை எவரும் பார்க்கவில்லை .
அவருடன் கூடலூர் எம் எல் ஏ பொன் ஜெயசீலன் நின்று கொண்டிருந்தார் .
எடப்பாடியார் தன் பேச்சில், " அம்மா நேசித்த மாவட்டம் நீலகிரி அதனால் தான் அனைத்து வளர்ச்சி பணிகள் நடந்தன .என் ஆட்சியில் நவீன மருத்துவ கல்லூரி , மார்க்கெட் கட்டுமானம் சாலை வசதி என்று இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தோம் .
இப்பொழுது என்ன நடக்கிறது . தி மு க வேட்பாளர் ராசா காற்றிலே ஊழல் செய்தவர் இந்த மாவட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் எந்த குரலையும் உயர்த்தவில்லை .என்று தன் கையில் இருந்த பேப்பரில் இருந்த அனைத்தையும் படித்து முடித்தார் .
பா ஜ காவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை எடப்பாடியார் .
மாவட்ட செயலர் வினோத் இ பி எஸ் பேசும் போது விசில் அடித்து உணர்ச்சிவசப்பட்டார் .
எடப்பாடியரின் பிரச்சார உரை எந்த சுவாரசியம் இல்லாமல் முடிந்தது .
தன் பிரச்சாரத்தை முடித்து எடப்பாடியார் புறப்பட முன்னாள் ராஜ சபை உறுப்பினர் அர்ஜுனன் , குன்னூர் முன்னாள் எம் எல் ஏ சாந்தி ராம் மற்றும் மா. செ வினோத் அதே வேனில் தொற்றி கொண்டு சென்றார்கள் .
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டம் தான் ரசிக்கும்படி இருந்தது.
Leave a comment
Upload