தொடர்கள்
அரசியல்
தேர்தல் திருவிழா-ஆர்.ராஜேஷ் கன்னா

2024030516580308.jpg

நன்றி: தினமணி

தமிழகத்தில் 39 எம் பி தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் அறிவிப்பும் வந்துவிட்டது. தமிழகத்தில் எம்பி தேர்தல் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

திமுக தனது வாக்கு பலத்தால் அனைத்து தொகுதிகளும் ஜெயித்து விடலாம் என்று கணிப்பில் இருக்கிறது.

பி ஜே பி ,தேர்தல் களத்தில் தங்களுக்கு ஓட்டுக்கள் அதிகளவில் விழும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்று பிரச்சாரம் செய்து விருகின்றனர்.

அதிமுக, தமிழக மக்கள் ஆளும் கட்சி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் இதனால் வெற்றி நமக்கே என்று ஓற்றை விரலால் அடிப்போம் என்ற வாசகத்தோடு களத்தில் எடப்பாடி டீம் சுற்றி சுழன்று வருகிறது.

கடந்த ஒரு வாரமாகவே சூரிய பகவான் கத்திரி வெயிலில் காயும் 100 °F வெப்பத்தினை தமிழகம் முழுவதும் உமிழ்ந்து வருகிறார். பல கட்சி வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலால் கருகி போய் காட்சி தருகின்றனர்.

விட்டமின் “ப “இருந்தால் மட்டுமே தேர்தல் வெற்றியை தமிழகத்தில் ஈட்ட முடியும் என்று பிரதான கட்சிகள் யோசித்து வருகிறது.

வருமான வரித்துறையோ சென்னையை மையமாக வைத்து வாகனசோதனைகளை தேர்தல் ஆணையம் முலம் முடுக்கி விட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ரெய்டு செய்து வருகிறது.

ஆந்திராவில் இருந்து தனது மகன் திருமணத்திற்கு நகை வாங்க சென்னை வந்தவரிடம் ரூபாய் 13 லட்சம் மற்றும் சிறு சிறு தங்க கட்டிகளை பறக்கும் படையினர் சென்னை எம் .ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர்.

20240303181555215.jpeg

பிரதான கட்சி வேட்பாளர்கள் கூட எங்கே ஓட்டுக்கள் சிதறிவிடுமோ என்ற அச்சத்தில் அருகே இருக்கும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடும் போட்டோக்கள் இப்போது இணைய தளத்தில் உலா வருவது லேட்டஸ்ட் ட்ராண்டாக உள்ளது.

தமிழகம் எங்கும் திமுகவினருக்கு இப்போது பெரும் தலைவலியே அனைத்து மகளிருக்கும் ரூ1000 என திமுக தேர்தல் அறிக்கை தான். எங்கு சென்றாலும் பெண்கள் திமுக வேட்பாளர்களை எங்களுக்கு ஏன் மகளிர் உரிமை தொகை தரவில்லை என்று துளைத்து எடுக்கின்றனர். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முதல்வரே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக உள்ளது.

திமுக கூட்டணி கட்சியினர் பல இடங்களில் வேட்பாளர்கள் மக்களின் இந்த ரூ1000 மகளிர் தொகைக்கு கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று திணறி கொண்டு இருக்கின்றனர்.

20240303181834424.jpeg

தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் எய்மஸ் மருத்துவமனை ஒத்தை செங்கல் மற்றும் எடப்படியார் சிரிக்கும் போது தெரியும் பல் பற்றி அமைச்சர் உதயநிதி பேசுவதை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று கழகத்தினரிடம் பேச்சாக உள்ளது.

20240303181900611.jpeg

பிஜேபி கட்சியின் மத்திய சென்னை மற்றும் திருவள்ளூர் தொகுதியில் தேர்தல் பணி தமிழகத்தினை திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த கே.ஆர். வி என்னும் பிஜேபி நிர்வாகியின் வேகமான கட்சி பணி மற்றும் பரப்புரை கண்டு திமுக மேலிடமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது என்ற தகவல் வருகிறது.

சென்ற முறை சேகர் பாபுவிற்கு டப் பைட் கொடுத்த வேட்பாளர் தான் தயாநிதி மாறனை எதிர்த்து பிஜேபி கட்சியின் வேட்பாளர் வினோஜ் செல்வம் களம் இறங்கி அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

எல்லாத்தையும் விட சமீபத்தில் தந்தி டிவிக்கு பிரதமர் பேட்டி கொடுத்தார் தமிழக மக்கள் திமுக விற்கு தேர்தல் ரிசல்ட் அன்று அதிர்ச்சி அளிப்பார்கள் என்று பிரதமர் பேட்டியில் சொன்னது ஏதேனும் உள்குத்து இருக்கிறதா என திமுக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

20240303182926772.jpeg

ராதிகா சரத்குமார் தனது கணவருடன் விருது நகர் எம்பி தொகுதியை சுற்றி வருகிறார். தனக்கு வெற்றி நிச்சயம் என்று ராதிகா சரத்குமார் சொல்லிவருகிறார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட கச்ச தீவு தாரை வார்த்த விவகாரம் தமிழகத்தில் பெருமளவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .

தமிழகத்தினை பொறுத்தவரை வேலையின்மை மற்றும் விலைவாசி ஏற்றம் தான் பிரதான கோரிக்கையாக வாக்களர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை பற்றி எந்தவித அரசியல் கட்சியும் எந்த வாக்குறுதி தரமால் வாயில் வடை சூடும் தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் தற்போது நடந்து வருகிறது .

20240303182958165.jpeg

கேரளா வயநாடு தொகுதிக்கு கேஷூவலாக வந்த ராகுல் காந்தி தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அப்போது பிரியங்கா உடன் வந்தார். வரும் மக்களவைத் தேர்தல், நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

20240303183507319.jpeg

அடுத்த 10 நாட்கள் தமிழகத்தில் 106°F வெப்பம் வறுத்து எடுக்கும் என்பது வானிலை அறிவிப்பாக உள்ளது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்காததற்கு சூரிய பகவான் ஒரு காரணம் என்பது தற்போதைய கள நிலவரம்..