இளகும் இரும்பு
உருக்கும் அன்பு
தேறிடும் தெளிவு
தேற்றிடும் பேராண்மை
உண்மையான உறவு
தோள் கொடுக்கும் தோழி
மன்னிக்கும் மகராசி
தன்னம்பிக்கை தங்கை
ஆலோசனை தரும் அக்கா
அரவணைக்கும் அதிகாரி
ஆர்ப்பரிக்கும் சூறாவளி
திடமான திருமதி
குதூகலமான குழந்தை
சர்வமுமான சக்தி
தவிக்கும் தாய்மை
தயங்கும் உண்மை
பண்பான பாட்டி
சுறுசுறுப்பான சுட்டி
நற்பண்பான நேர்மை
தூய்மையான நேசம்
மிடுக்கான மிஸஸ்
துடுக்கான துணைவி
அளவில்லா ஆறுதல்
பக்திபிரவாகம் எடுக்கும் ஊற்று
எல்லாமுமான தாய்மை
ஆச்சரியமான ஆசிரியை
கருணைபொங்கும் நீர்வீழ்ச்சி
ஓடிக்கொண்டே இருக்கும் நதி
அலை கடல் போல பரந்த மனது
வற்றாத வாஞ்சை
நளபாக சக்கரவர்த்தினி
நோய் தீர்க்கும் மருத்துவர்
சோர்வு இல்லாத சேவகி
அழகிய அணங்கு
அறிவான அவ்வை
தேடல் உள்ள தேவதை
சீற்றம் ஆகும் சீமாட்டி
கருத்துள்ள காரிகை
தாங்கிப் பிடிக்கும் தாரம்
நயமான நங்கை
அற்புதமான அரசி
கற்பனையின் காதலி
மகிழ்வைத் தரும் மகள்
ஈடில்லா இளவரசி
நிறைவைத் தரும் நித்திலம்
அனைத்திற்கும் ஆணி வேர்
அடிக்கடி நேர் எதிர்
எப்போதும் புரியாத புதிர்
இவளுக்கு நிகர் யார்?
இவளேதான்!!!!
Leave a comment
Upload