மலைகளின் அரசியை நான் காதலித்து கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
ஊட்டியை சேர்ந்த க்ளோவ்ஸ் பட்டாச்சார்யா .
என் மூச்சி இந்த மலைகளின் அரசி .
இந்த மலையின் அழகை ரசிக்க ஆரம்பித்தது நான் எட்டாம் க்ளாஸ் படிக்கும்போது .
அப்பொழுது நீலகிரி வன உயிரின சுற்றுசூழல் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து இந்த அரசியை ரசிக்க ஆரம்பித்தேன் .
அப்பொழுது அழகான நங்கையின் மேல் வட்டமிட்டு கொண்டிருந்த அறிய வகை பறவைகள் பார்ப்பது ஒரு திரில்லிங் .
பதினோராம் வகுப்பு படிக்கும் போது உலகநாதன் என்ற வன அதிகாரிகளுடன் பங்கிதபால் சைலன்ட் வேலி பக்கம் சென்று அரசியை ரசித்த அனுபவம் உண்டு .
இந்த மலைகளின் அரசியின் உயர்ந்த மலை தொட்டபெட்டா சிகரம் இங்கு செல்வது மிக சுலபம் 2634 அடி உயரத்தில் சென்று என் காதலியை ரசிப்பதில் ஏகப்பட்ட அலாதி எனக்கு அதிலும் பளிச் வெயில் காலத்தில் இவள் அழகோ அழகு தான் .
இப்படி பத்து உயர மலைகள் கம்பிரமாக இருக்கின்றன அனைத்து மலைகளிலும் நான் ஏறி இறங்கியுள்ளேன் அப்படி இந்த நங்கை மேல் கொள்ளை ஆசை .
மலைகளின் அரசியை போர்த்தி கொண்டிருப்பது அபூர்வ மரங்கள் செடி கொடிகள் அடங்கிய சோலை வனங்கள் அதிலும் முக்கியமான ஒன்று புல் வெளிகள் அதிலும் வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட் இங்கு உள்ள புல் போர்வை மழை துளிகள் பனி துளிகளை ஈர்த்து இந்த அபூர்வ புல் வழியாக சிறிய ஓடைகள் உருவாகி பள்ளத்தாக்கில் சென்று ஏரி மற்றும் அணைகளுக்கு நீர்வரத்தை உருவாகிறாள் என் மலைகளின் அரசி .
நான் விரும்பும் அரசி மிகவும் செழிப்பாகவும் குளு குளு என்று இருப்பது இவளை பாதுகாப்பது தான் .
ப்ளூ மவுண்டன் என்று இவளை அழைக்க காரணம் நீல மலைகள் மற்றும் நீல கலரில் ஒரு பெண் படுத்து கொண்டிருப்பது போல மலை இருப்பதை முக்குர்தி மலை
சென்றால் பார்க்கலாம் .
அதை விட ஒரு பாட்டி படுத்து கொண்டிருப்பது போலவும் இருக்கும் .
அழகான இந்த நங்கையை பாதுகாப்பாக இருப்பதை கவனிக்காமல் ஈக்கோ டூரிசம் என்று சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது சரியில்லை வாகனங்கள் செல்வது உணவு பொருள்களை குரங்கு போன்ற விலங்குகளுக்கு போடுவது சரியில்லை .
என் அரசியை போர்த்தி கொண்டிருக்கும் வனத்தை அழிப்பதால் வன விலங்குகள் இஷ்டத்திற்கு வந்து தொந்தரவு செய்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது .
பாதுகாக்கப்பட வேண்டிய என் நங்கையை சீரழிப்பதை ஒத்துக்கொள்ள முடியாது .
பிளாஸ்டிக் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அனுமதித்து காயப்படுத்துவது வேதனையான ஒன்று .
சுற்றுலா பயணிகள் மற்றும் நம் உள்ளூர்வாசிகள் கொட்டும் குப்பைகளால் அசிங்க படுத்தப்படுகிறாள் .
இதனால் இந்த வருடம் என் காதலியை பனி போர்த்தவில்லை அதே போல மழை பொழிவும் என் அரசியை நனைக்கவில்லை .
இது ஒரு பக்கம் இருக்க ஏகப்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு அரசி காயப்பட்டு வேதனிக்க படுவதை ஜீரணிக்க முடியவில்லை .
தினமும் அணு அணு வாக ரசித்து காதலித்து கொண்டிருக்கும் மலைகளின் அரசியை அரவணைத்து பாதுகாக்க வேண்டிய கடமையை இந்த மகளிர் தினத்தில் இருந்து முன் வைக்குமா அரசு .
Leave a comment
Upload