தொடர்கள்
அனுபவம்
பக்கிங்காம் அரண்மனையில் அபூர்வ "கார்ட்" மாற்றம் . - ஸ்வேதா அப்புதாஸ் .

லண்டன் விசிட் சென்றால் பக்கிங்காம் பேலஸ் கார்ட் மாற்றம் நிகழ்வை பார்க்காமல் வர முடியாது .

20240114194111281.jpg

நாமும் எப்படியோ அந்த நிகழ்வை பார்க்க சென்றோம்.

ஜேம்ஸ் பார்க் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்தோம் .

சற்று எட்டி பார்த்து கொண்டிருந்தது சூரியன் குளிர் நடுங்கி கொண்டு தான் இருந்தது .

20240114194145259.jpg

இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் இலைகள் இல்லாமல் இருந்தது

பக்கிங்காம் பெண் போலீஸ் குதிரையிலும் சைக்கிளிலும் ரவுண்டு அடித்து கண்காணிப்பில் இருந்தனர் .

20240114194228191.jpg

நாம் வெலிங்டன் பேரக்ஸ் அருகில் போய் நின்றோம் . ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் கூட்டம் கார்ட் மாற்றத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர் .

20240114194332295.jpg

வெலிங்டன் பேரக்சில் இருக்கும் கார்டுகள் அணிவகுத்து பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று அங்குள்ள கார்டுகள் அணிவகுத்து வெலிங்டன் பேரக்சுக்கு

திரும்பி வரும் வைபவம் கண்கொள்ளா காட்சி தான் .

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் இந்த கார்ட் மாற்றம் நடைபெறுகிறது .

திங்கள் , புதன் , வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் இந்த வைபவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது .

இந்த நாட்களில் காலை 10.45 மணிக்கு துவங்கும் நிகழ்வு ஒரு திருவிழா போன்றது .

இரு படைகள் ஒப்படைப்பு நேரம் சரியாக காலை 11 மணிக்கு தான் .

20240114195452542.jpg

ஆவலோடு பேரக்ஸ் கேட் அருகில் போய் நின்று கொண்டோம் கம்பிர குதிரையில் வந்த ஒரு பெண் போலீஸ் மற்றும் ஆண் போலீஸ் உர் என்று முகத்தை வைத்து கொண்டு பார்வையாளர் கூட்டத்தை ஒதுங்கி நிற்க மிரட்டி கொண்டிருந்தனர் .

வெலிங்டன் பேரக்சில் இசை இசைத்த வீரர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தனர் .

பக்கிங்காம் அரண்மனை கம்பிர கேட்கள் திறக்க இசை ஒலித்தது .

இந்த கார்டுகள் சுவிஸ் கார்ட் என்று கூறப்படுகிறது .

இதே ஸ்விஸ் கார்டுகள் வாட்டிகன் நாட்டில் போப் ஆண்டவரின் காவலர்கள் என்பது சிறப்பு .

இந்த கார்டுகளின் ஆடை மிகவும் வித்தியாசமானது .அவர்கள் அணியும் தலை கவசம் வித்தியாசமானது .

பேர்ஸ்கின் கேப்ஸ் பிரிட்டிஷ் ராணுவத்தில் 1815 யில் வாட்டர்லூ போரின் போது அறிமுகம் செய்யப்பட்ட உடை கேப் . இந்த கேப் கார்டுகளை உயரமாக காட்டுவதும் மற்றவர்கள் அவர்களின் கண்களை பார்க்க முடியாது .

இவர்களின் சீருடை வழக்கமாக சிகப்பு கலர் தான் மகாராணிக்கு பிடித்த சீருடை என்று கூறப்படுகிறது .

அதே சமயம் பனி மழை காலங்களில் சீருடை சாம்பல் கலருக்கு மாறுகிறது கடும் குளிரில் இருந்து காவலர்கள் காத்துக்கொள்ளவாம் .

சரியாக 10.35 மணிக்கு கார்ட் அணிவகுப்பு இசையுடன் பேரக்சில் இருந்து செல்கின்றனர் பக்கிங்காம் அரண்மனை சென்றவுடன் அங்குள்ள கார்டுகள் இவர்களிடம் அரண்மனை சாவியை ஒப்படைத்தவுடன் கம்பிர இசையை நிகழ்த்தி புதிய கார்டுகள் அரண்மனையினுள் நுழைந்து கேட்டுகள் அடைத்து விட்டு மறைந்து விடுகின்றனர் .

11.30 மணிக்கு பக்கிங்காம் அரண்மனை கார்டுகள் வெலிங்டன் பேரக்சை நோக்கி கம்பிரமாக அணிவகுத்து வந்த செட்டில் ஆகிவிடுவது தான் இந்த அழகிய கார்ட் மாற்றம் .

அரண்மனை மற்றும் அரசரை காவல் காக்க மூன்று உயர் அதிகாரிகளும் நாற்பது கார்டுகள் உள்ளனர் .

மொத்தம் ஆறு அதிகாரிகள் மற்றும் என்பது கார்டுகள் பணியில் உள்ளனர் .

அவர்கள் வெளி ஆட்களை பார்ப்பதோ சீரிக்கவோ பேசவோ கூடாது என்பது சட்டம் .

அதே போல யாரையும் தொடவும் கூடாது .

மற்ற ஒரு தகவல் இந்த ராயல் கார்டுகள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதாம் இது ஒரு ஷாக்கிங் நியூஸ் தான் .

மகாராணி மற்றும் தற்போது அரசரின் கார்டுகள் 24 மணிநேரமும் பணியில் இருக்கவேண்டுமாம் .டியூட்டி மாறும் ஆனால் கண்காணிப்பு தீவிரமாக இருக்குமாம் .

அதனால் இந்த காவலர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க தான் நோ மேரேஜ் என்ற சட்டம் .

பதினைந்து வயதில் இந்த கார்ட் பணியில் சேர்க்க படுகிறார்கள் பின் பதினெட்டு வருடங்கள் தான் பணியில் இருக்க முடியும் அதன் பின் ஓய்வு கொடுக்கப்பட்டு 32 வயதில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது .

20240114195705202.jpg

நாம் பக்கிங்காம் பேலஸ் வாயிலை நோக்கி சென்றோம் பெரிய கார்டன் நான்கு வாயில்கள் அதிசிய அரண்மனையை காண ஆயிரம் கண்கள் .

சில சுற்றுலா பயணிகளுக்கு கைடுகள் உடன் வந்து பக்கிங்காம் பேலசின் வரலாற்றை அவரவர் மொழியில் விளக்கி கொண்டிருந்தனர் .

நாம் ஒரு இடத்தில் படம் எடுக்க ஒரு காவல் அதிகாரி நோ போட்டோ இயர் என்று கூற நாம் மீடியா என்று கூற ஓகே எங்கிருந்து என்று கேட்க

நாம் இந்தியா தமிழ்நாடு விகடகவி இ வீக்கிலி என்று கூற கிரேட் என்று கூறி கை குலுக்கி வாழ்த்து கூறினார் அந்த பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி .

பக்கிங்காம் பேலசை உற்று பார்த்தோம் கம்பிரமாக இருக்கிறது அதே சமயம் நம் நாட்டில் உள்ள மைசூர் பேலஸ் ராஜஸ்தான் பேலஸ் மற்றும் தாஜ் மகாலுக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற எண்ணம் நம் மனதில் ரீங்காரம் அடித்தது .

கம்பிர அழகிய பக்கிங்காம் அரண்மனையை பார்க்க அரசர் சார்ல்ஸ் நம் எண்ணத்தில் நுழைந்தார் .அவரை பேட்டி எடுத்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது .

பல நாட்டு மக்களை சந்தித்து ஹாலோ சொல்லி நகர்ந்தோம் .

20240114195748744.jpg

பக்கிங்காம் ஸ்ட்ரீட்டில் நடந்து வர ஒரு பெரிய ஹோட்டலில் நம் இந்திய தேசிய கொடி அழகாக நம்மை பார்த்து சிரித்தது .

கம்பிர பக்கிங்காம் கார்டுகளின் அணிவகுப்பு மற்றும் கார்ட் மாற்றம் நம் மனதில் இருந்து மறையவில்லை .